Sat Sep 12, 2026 | 12:07 AM IST

Doctor Verified

ஓட்ஸ் சாப்பிட வேண்டாம்.! உடல் எடையை குறைக்க சிறுதானியங்கள் தான் சிறந்தது – மருத்துவர் விளக்கம்

உடல் எடையை குறைக்க வெளிநாட்டு உணவான ஓட்ஸை விட நம் பாரம்பரிய சிறுதானியங்களான கம்பு, தினை, சோளம், கேழ்வரகு ஆகியவை பல மடங்கு ஆரோக்கியமானவை என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். 

உடல் எடையை குறைக்க தினசரி ஓட்ஸ் சாப்பிடுவது என்ற பழக்கம் தற்போது பலரிடம் பரவி வருகிறது. ஆனால், இந்த வெளிநாட்டு உணவு நம்முடைய உடலுக்கு அவ்வளவு பயன் தராது என்று மருத்துவர் சிவராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் ‘ஹெல்தி தமிழ்நாடு’ என்ற யூடியூப் சேனலில் பகிர்ந்த தகவலில், "நம் ஊரின் சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள், ஓட்ஸில் இல்லை" என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டின் ஓட்ஸ் vs நம் ஊரின் சிறுதானியங்கள்

“ஓட்ஸ் என்பது நம் நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு உணவு பொருள். முதலில் இது குதிரைகள் மற்றும் நாய்களுக்காக உருவாக்கப்பட்டதாகவே இருந்தது. ஆனால், இன்று நம்மிடம் அது மனிதர்கள் உடல் எடையை குறைக்க உபயோகிக்கும் உணவாக மாறியுள்ளது” என்று மருத்துவர் சிவராமன் கூறினார்.

மேலும், “ஓட்ஸ் உணவில் பெரும்பாலும் நார்ச்சத்து மட்டுமே அதிகமாக உள்ளது. ஆனால் நம் பாரம்பரிய சிறுதானியங்களில் இரும்பு, கால்சியம், புரதம் மற்றும் பல சத்துக்கள் உள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவு மற்றும் மூலிகைகள்.. மருத்துவர் பரிந்துரை..

மருத்துவர் கூறும் பரிந்துரை

“ஓட்ஸில் நமக்கு தேவைப்படும் சத்துக்கள் இல்லாததால், நமது ஊரில் விளையும் சிறுதானியங்களை உணவில் சேர்க்க வேண்டும். அவை நம் உடலமைப்புக்கு பொருத்தமானவை. நமது உடல் பழக்கத்துக்கும், காலநிலைக்கும் ஏற்றது சிறுதானியம் தான்” என்று மருத்துவர் சிவராமன் கூறினார்.

மேலும், “வணிக நோக்கத்திற்காக வெளிநாட்டு உணவுப் பொருட்கள் நம் வாழ்க்கையில் நுழைந்துள்ளன. ஆனால், அவை எல்லாம் நம் உடலுக்கு தேவையில்லை. நம் பாரம்பரிய உணவுகள் தான் உண்மையான சத்தானவை” என அவர் வலியுறுத்தினார்.

Video Link: https://youtu.be/ge0e4TRPGhk

சிறுதானியத்தின் நன்மைகள்

சிறுதானியம் முக்கிய சத்து ஆரோக்கிய நன்மை
கம்பு இரும்பு, நார்ச்சத்து இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை உயர்த்துகிறது
தினை புரதம், கால்சியம் எலும்பு வலிமையை மேம்படுத்துகிறது
சோளம் நார்ச்சத்து செரிமானம் சிறப்பாகச் செய்கிறது
குதிரைவாலி மக்னீசியம் உடல் எடையை குறைக்க உதவுகிறது
கேழ்வரகு கால்சியம் தசை வலிமை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது

இயற்கையான உடல் எடை குறைப்பு வழி

மருத்துவர் சிவராமன் பரிந்துரையின்படி, உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் கீழ்கண்ட உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்:

* காலை உணவாக கம்பு கூழ் அல்லது தினை உப்புமா

* மதிய உணவில் சோள சாதம்

* இரவு நேரத்தில் கேழ்வரகு கூழ்

இவை அனைத்தும் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி, இயற்கையாக உடல் எடையை குறைக்க உதவும்.

இறுதியாக..

உடல் எடை குறைக்க ஓட்ஸ் போன்ற வெளிநாட்டு உணவுகள் அவசியமில்லை. நம் நாட்டில் கிடைக்கும் சிறுதானியங்களில் நிறைந்திருக்கும் இயற்கை சத்துக்கள் உடல் எடையை குறைக்கவும், முழுமையான ஆரோக்கியத்தை தரவும் உதவுகின்றன. “நம் நிலம் கொடுத்த உணவு தான் நம் உடலுக்குச் சிறந்தது” என்பது மருத்துவர் சிவராமனின் தெளிவான கருத்து.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தளங்களில்/மருத்துவர் பேட்டிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் தனிப்பட்ட உடல்நல நிலைக்கு ஏற்ப உங்கள் மருத்துவரை அணுகவும்.

Read Next

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவு மற்றும் மூலிகைகள்.. மருத்துவர் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 09, 2025 17:53 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content