Sat Sep 12, 2026 | 12:05 AM IST

Doctor Verified

எடை குறைய.. நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் இங்கே.. மருத்துவர் பரிந்துரை..

மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கும் அறிவியல் அடிப்படையிலான எடை குறைப்பு வழிமுறைகள். தவிர்க்க வேண்டிய உணவுகள், சாப்பிட வேண்டிய பழக்கங்கள், உடற்பயிற்சி ஆலோசனைகள் அனைத்தும் இங்கே.

உடல் எடை அதிகரிப்பது இன்று பெரும்பாலானவர்களுக்கும் பொதுவான பிரச்சனை. வேலைப் பளு, தவறான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை போன்றவை எடையைக் கட்டுப்படுத்த முடியாமல் செய்யும். இந்த நிலையில், “எடை குறைய மாத்திரை குடிக்கலாமா?” என்ற கேள்வி பலரிடமும் உண்டு. ஆனால், எடை குறைய மருந்து அல்ல, சரியான வாழ்க்கை முறை மாற்றமே தீர்வு என மருத்துவ நிபுணர் சிவராமன் தெளிவாக கூறுகிறார்.

Source: https://youtu.be/ivA60EqGmzE

எடை குறைக்க வேண்டுமா? முதலில் இந்த 6 உணவுகளை முழுமையாக நிறுத்துங்கள்!

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் பின்வரும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் வலியுறுத்துகிறார்.

1. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்

வெண்ணெய், பனீர், க்ரீம் போன்றவை எடை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளவை. பால் புரதம் சிலருக்கு உப்புசம் மற்றும் ஏற்படுத்தும்.

2. இனிப்பு மற்றும் சர்க்கரைப் பொருட்கள்

இனிப்புகள் ரத்த சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும். இது கொழுப்பு சேமிப்பை அதிகரிக்கும்.

3. கிழங்கு வகைகள்

உருளைக்கிழங்கு, சுருளைக்கிழங்கு போன்றவை அதிக கார்போஹைட்ரேட்டுகளை கொண்டவை; எடை குறைக்க முயலும் போது இதைத் தவிர்க்க வேண்டும்.

4. பட்டை தீட்டிய தானியங்கள் / பச்சரிசி

இவை உயர்ந்த GI கொண்டவை; உடனடி கொழுப்பு சேர்க்கும் உணவுகளாக கருதப்படுகின்றன.

5. பிராய்லர் சிக்கன்

பிராய்லர் சிக்கனில் ஹார்மோன்கள் அதிகம் இருப்பதால் உடல் எடை, குறிப்பாக வயிற்றுப் பகுதி கொழுப்பு அதிகரிக்கலாம்.

6. குளிர்ந்த உணவுகள் & கூல்டிரிங்ஸ்

குளிர்ந்த பானங்கள் மெட்டபாலிசத்தை மெதுவாக்கி கொழுப்பு குறைப்பு பயணத்தை பாதிக்கும்.

எடை குறைக்க உதவும் உணவு ஆலோசனைகள்

காலை உணவாக சாப்பிட சிறந்த பழங்கள்:

* தர்பூசணி

* கொய்யா

* பப்பாளி

* மாதுளை

இவை நீர்ச்சத்து, நார்ச்சத்து மிகுந்தவை. குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, பசி குறைந்து, எடை குறைய உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: நேந்திரம்பழம்: சர்க்கரை நோயாளிகளுக்கும் பாதுகாப்பான சூப்பர் உணவு – மருத்துவர் தீபா விளக்கம்!

வாரத்திற்கு ஒரு நாள் — ‘பழ நாள்’

மருத்துவர் சிவராமன் பரிந்துரிபடி, வாரத்தில் ஒரு நாள் முழுவதும் பழங்களும் நீரும் மட்டுமே எடுத்துக் கொள்வது உடலின் டிடாக்ஸிற்கு உதவும்.

உடற்பயிற்சி + ஒழுங்கான நடைப்பயிற்சி = வேகமான எடை குறைப்பு

உணவைக் கட்டுப்படுத்துவதோடு, நடைப்பயிற்சி, யோகா, லேசான workouts அவசியம். உடல் எடை குறைவதற்கு 50% உணவு கட்டுப்பாடு, 50% உடற்பயிற்சி முக்கியம் என அவர் கூறுகிறார்.

இறுதியாக..

உடல் எடையை குறைப்பது ஒரு நாள் இரவிலேயே நடக்காது. ஆனால், மருத்துவர் சிவராமன் கூறிய இந்த 6 உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைபிடித்து, தினசரி நடைப்பயிற்சியைச் சேர்த்தால், உடல் எடையில் கணிசமான குறைவு சில வாரங்களிலேயே காணப்படும். மருந்து அல்ல — உணவுதான் உடலின் முதல் மருத்துவம் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தளத்தில் மற்றும் நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே கூறப்பட்டுள்ள உணவு திட்டங்களை நடைமுறையில் கையாளும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உடல்நல ஆலோசகரை அணுகுவது அவசியம்.

Read Next

ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறையுமா? நிபுணர் எச்சரிக்கும் ஆபத்துகள் மற்றும் உடல் விளைவுகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 25, 2025 10:06 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content