Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Mental Health During Summer: கோடை வெயிலில் மன அழுத்தமா? எப்படி தப்பிப்பது?

Mental Health Tips During Summer: கோடைக்காலம், குளிர்காலம் என எந்த காலத்திலும் மன ஆரோக்கியம் என்பது முக்கியமான ஒன்று. குறிப்பாக, கோடைக்காலத்தில் கடும் வெயிலால் பலரும் உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மேலும், இந்த காலகட்டத்தில் அதிகம் சோர்வுடன் இருப்பர்.

வெயிலின் தாக்கத்துடன் உள்ள இந்த அதீத சோர்வு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கிறது. மனச்சோர்வு எல்லா வயதினரையும் பாதிக்கக் கூடிய பொதுவான காரணியாகும். சுய கவனிப்பு உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

மன அமைதி என்றால் என்ன?

மன அமைதி என்பது மூளையை அமைதியாக வைக்கவும், எளிதாகவும், எந்த கவலையும் இல்லாமல் இருப்பதே ஆகும். இவ்வாறு கவலையற்ற மனநிறைவை அனுபவிக்கும் ஒரு நிலையே மன அமைதியாகக் கருதப்படுகிறது. கோடைக்காலத்திலும் இந்த வகையான உணர்வைப் பெற்று மன அமைதியுடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health Foods: மனநிலையை மேம்படுத்தும் டாப் உணவுகள் இது தான்!

கோடைக்காலத்தில் மன அமைதியைக் குறைக்க உதவும் வழிகள்

உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல்

மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது, உடலில் ஏற்படும் சிறிய அசைவுகளும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் மனநிலை மாற்ரம் ஏற்படும். வழக்கமான உடற்பயிற்சி செய்வது மனச்சோர்வு, கவலை போன்ற பொதுவான மனநிலைகளின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம், ஒருவர் செயலற்ர நிலையில் இருப்பதாக உணர்ந்திருப்பின், நடைபயிற்சி அல்லது சைக்ளிங் போன்ற மென்மையான உடல் செயல்பாடுகளைச் செய்யலாம்.

போதுமான ஊட்டச்சத்துக்கள் உட்கொள்வது

நாம் உண்ணும் உணவின் தரம், அளவு போன்றவையே ஒருவரின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. இதுவே ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆய்வின் படி, சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை உட்கொள்பவர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும் அபாயம் உண்டாகலாம். அதே சமயம், போதுமான ஊட்டச்சத்து நிறைந்த முழுமையான உணவுகளை உட்கொள்ளாதது ஊட்டச்சத்து குறைபாடுகளை அதிகரிக்கிறது.

இதில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு மக்னீசியம், வைட்டமின் பி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மனநிலையையும் கட்டுப்படுத்துவதற்கு பழங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், மீன், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Person: அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏன் வழக்கமாக்க வேண்டும் தெரியுமா?

சுயகவனிப்பை மேற்கொள்ளுதல்

ஒவ்வொருவரும் சுயகவனிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்க வேண்டும். இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சில ஆரோக்கியமான நடவடிக்கைகளின் உதவியுடன் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, போதுமான உணவுகளை எடுத்துக் கொள்வது கோடைகால வழக்கத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

ஃபோன் மற்றும் திரை நேர பயன்பாட்டைக் குறைப்பது

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கணினிகள் போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இது மன அழுத்தம், மன நலக் கோளாறுகளை அதிகரிப்பதாகக் குறிப்பிடுகிறது. மன அழுத்தத்தைத் தவிர்க்க, இதிலிருந்து தற்காலிகமாக தள்ளி இருப்பது நல்லது. மிகவும் முக்கியமான மற்றும் அவசரமான காலகட்டத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த வயதினராக இருப்பினும், திரைக்கு முன் அதிக நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். மேலும் இந்த அதிக திரை நேரம் தூக்கத்தை பாதிக்கிறது.

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுதல்

மன அழுத்தத்தின் போது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் மன அழுத்தத்தை சமாளிக்கலாம். குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து விலகி தனியாக இருப்பது மனச்சோர்வு, மன அழுத்த அறிகுறிகளைக் குறிக்கிறது. எனவே சரியான விஷயங்களுக்கு தன்னம்பிக்கையுடன் சமூக ஆதரவையும் கொண்டிருப்பதுடன், ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும்.

இந்த வகை வழிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கோடைக்காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Body Heat Reduce Oil: கொளுத்தும் வெயிலில் உடம்பு சூட்டைத் தணிக்க இந்த 6 எண்ணெய் போதும்

Image Source: Freepik

Read Next

Body Heat Reduce Oil: கொளுத்தும் வெயிலில் உடம்பு சூட்டைத் தணிக்க இந்த 6 எண்ணெய் போதும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content