Why is managing stress good for your heart: இன்றைய நவீன காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் மன அழுத்தமும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் போதிய உடல் செயல்பாடு இல்லாமை போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இன்றைய வேகமான உலகில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் நாள்பட்ட மன அழுத்தம் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம். ஆராய்ச்சி ஒன்றில் நீண்ட கால மன அழுத்தத்தின் வெளிப்பாடாக இதய நோயின் அபாயம் கணிசமாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. அதிக நேரம் வேலை செய்வதால், கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் இதய ஆரோகியத்தைப் பாதிக்கலாம். நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் தொடர்ச்சியான அதிகரிப்பைத் தூண்டுவதால் இதயத்துடிப்பு அதிகமாகி, இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதய அபாயத்தைக் குறைக்க மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Anxiety ஆ இருக்கா.? இந்த ஹார்மோன் காரணமாக இருக்கலாம்..
இதய நோயைத் தடுக்க மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிகள்
உடற்பயிற்சி செய்வது
தினமும் உடற்பயிற்சி செய்வது, குறிப்பாக ஜாகிங், தினசரி நடைப்பயிற்சி, அதிக தீவிர உடற்பயிற்சிகள் போன்றவை நீண்ட கால இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். இந்த நாள்பட்ட தினசரி உடற்பயிற்சியானது உட்கார்ந்த வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் உடற்பயிற்சி செய்வது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைக்கவும், மூளை எண்டோர்பின்கள் எனப்படும் மனநிலையை அதிகரிக்கும் இரசாயனங்களை வெளியிடுகிறது. இவை மனச்சோர்வைக் குறைப்பதுடன் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் இதய தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
தியானம் மேற்கொள்ளுதல்
தியானம், ஆழ்ந்த சுவாசம் போன்ற மனதை ஒருங்கிணைக்க வைக்கும் ஆழ்ந்த நுட்பங்களின் உதவியுடன் மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்கலாம். இந்த தளர்வு இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், இதய அமைப்பில் ஏற்படும் தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த உள்நோக்கிய சிந்தனை மற்றும் ஆழ்ந்த சுவாசத்தின் நடைமுறையானது இதய நோய்க்குக் காரணமான உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே தியானம் செய்து உடல் மற்றும் மனதை தளர்த்தி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
வீக்கத்தைக் குறைப்பது
நாள்பட்ட மன அழுத்தம் ஏற்படும் உடலில் வீக்கம் உண்டாவதைக் குறிக்கிறது. இந்த வீக்கம் காரணமாக இரத்த நாளங்கள் சேதப்படுத்தப்படுவதுடன், பிளேக் உருவாவதற்கு வழிவகுக்கலாம். உடல் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் போன்ற வழக்கமான மன அழுத்த மேலாண்மை நடைமுறைகளின் உதவியுடன் வீக்கத்தைக் குறைக்கலாம். மேலும் நீண்ட கால சேதத்திலிருந்து இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இவ்வாறு வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த சூப்பர் டிப்ஸ் இங்கே..
சீரான தூக்கம்
மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக தூக்கமின்மையும் அடங்கும். இவை இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே, நாள்தோறும் சீரான தூக்கத்தைப் பெறுவது அவசியமாகும். படுக்கைக்கு முன்னதாக தியானம் போன்ற நினைவாற்றல் பயிற்சிகள் மேற்கொள்வது மனதை அமைதிப்படுத்தவும், தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. போதுமான தூக்கம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். ஏனெனில், இவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
விருப்பமான செயல்களைச் செய்வது
மன அழுத்தம் பெரும்பாலான நபர்களைப் பாதிக்கும் காரணியாக இருப்பதால், இது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எனினும், நம் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும். இது தவிர, மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். அவ்வாறு சூடான குளியல், இசை கேட்பது அல்லது விருப்பமான பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுவது போன்ற எளிய விஷயங்களை மேற்கொள்ளலாம். இது வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட வைத்து மன அமைதியைத் தருகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இவ்வாறு மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பான முறையில் கையாள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வேண்டுமா.? இதை மட்டும் ஃபாளோ பண்ணுங்க..
Image Source: Freepik