How stress affects your gut health: இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மன அழுத்தம் அமைகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, நீண்டநேர உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு இல்லாமை, போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது உள்ளிட்டவற்றால் மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால், நாள்பட்ட மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. உண்மையில், மன அழுத்தம் காரணமாக இறுக்கமான மார்பு, பதட்டம், துடிக்கும் மனம் அல்லது வெளிப்படையான காரணமின்றி முற்றிலும் சோர்வு போன்றவற்றை உணரலாம்.
வேலைப்பளு மற்றும் பொதுவான வாழ்க்கையிலிருந்து வரக்கூடிய மன அழுத்தத்தைப் புறக்கணிப்பது பொதுவாக உடல் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. அவ்வாறு மன அழுத்தத்தின் ஒரு குறைவாக அறியப்பட்ட விளைவு குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் கருத்துப்படி, நாள்பட்ட மன அழுத்தத்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியமாக இருக்க இந்த 5 விதைகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க.. மருத்துவர் தரும் டிப்ஸ்
நிபுணரின் கருத்து
அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “மன அழுத்தம் சில நேரங்களில் உங்களை மலச்சிக்கலுக்கு ஆளாக்குகிறது” என்று கூறினார். மன அழுத்தம் குடல் ஆரோக்கியத்தில் தலையிடலாம். இது வீக்கம், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) வெடிப்புகள் மற்றும் மோசமான செரிமானம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், PubMed (PMCID: PMC4249634) இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை குறிப்பிட்டார். அதில் "மன அழுத்தத்தால் தூண்டப்பட்ட கார்டிகோட்ரோபின்-வெளியீட்டு காரணி (CRF) வெளியீடு இயக்கத்தை சீர்குலைத்து, குடல் ஊடுருவலை அதிகரிப்பதன் மூலம் மற்றும் நுண்ணுயிரிகளின் கலவையை மாற்றுவதன் மூலம் குடல் செயலிழப்பை ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செரிமான ஆரோக்கியத்திற்கான உணவுகள்
செரிமானம் தொடர்பான இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு ஓட்ஸ், சியா விதைகள், சைலியம் உமி, ஆளி விதைகள் மற்றும் பழங்கள் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்களை உணவில் சேர்க்க நிபுணர் பரிந்துரைக்கிறார். மேலும், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவையும் ஆதரிக்க உதவுகிறது மற்றும் செரிமான ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது.
மேலும் நிபுணரின் கூற்றுப்படி, "உணவு வெறும் எரிபொருள் மட்டுமல்ல - அது உங்கள் முதல் பாதுகாப்பு வரிசை. ஊட்டச்சத்து உங்கள் மருந்தாக இருக்கட்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
ஆய்வின்படி, உளவியல் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அது நம் மனநிலையை மட்டுமல்லாமல், உடல் (சோமாடிக்) அறிகுறிகளையும் காட்டுகிறது. குறிப்பாக, வயிறு மற்றும் குடல் பகுதியில் பாதிப்புகள் ஏற்படலாம்.
பொதுவாக மூளை மற்றும் குடல், HPA அச்சு (ஹைபோதாலமஸ்-பிட்யூட்டரி-அட்ரீனல் அச்சு) மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறது. இவை உடலின் முக்கிய மன அழுத்த-பதிலளிப்பு அமைப்பாகும். ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது, இந்த குடல் மூளை அச்சு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பாதிக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான குடல் வேண்டுமா? அப்படியெனில் இந்த காலை உணவுகளை தவிர்க்கவும்! நிபுணர் அறிவுரை..
மேலும் மன அழுத்தம் குடல் அமைப்பைப் பாதிக்கும் ஒரு வேதிப்பொருளையும் உடலை வெளியிட வைக்கிறது என ஆய்வுகளில் வெளிப்படுத்தியது.
நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது PCOS அதிகரிப்பதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என முகர்ஜி கூறினார். மேலும் அவர் "ஏனெனில் PCOS என்பது ஹார்மோன் மட்டுமல்ல - இது ஹார்மோன் + வாழ்க்கை முறை + மன அழுத்தம்" என்று நிபுணர் கூறுகிறார்.
View this post on Instagram
மேலும் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் மன அழுத்தம் உடலை அதிக கார்டிசோலை வெளியிடச் செய்கிறது என்றும், கார்டிசோல் அளவுகள் அதிகமாக இருக்கும்போது, அது டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஆண் ஹார்மோன்களையும் அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறியுள்ளார். பிசிஓஎஸ் என்பது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அதிக ஆண்ட்ரோஜன் அளவுகளைப் பற்றியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: மோசமான குடல் ஆரோக்கியம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்குமா? மருத்துவர் தரும் பதில்
Image Source: Freepik