Sat Sep 12, 2026 | 12:47 AM IST

Oil For Stress: மன அழுத்தத்தால் அவதியா? இந்த எண்ணெய் யூஸ் பண்ணா நொடில பறந்திடும்

List Of Essential Oils For Stress Relief: இன்றைய பிஸியான காலகட்டத்தில் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் மன அழுத்தம், மனக்கவலை போன்றவை அங்கமாக மாறிவிட்டது. இதற்கு யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளாமல் இருப்பதே காரணமாகும். மனக்கவலை, பதட்டம் போன்ற அறிகுறிகளைக் குறைக்க சில அத்தியாவசிய எண்ணெய்கள் உதவுகின்றன. கவலைகளைக் குறைக்க உதவும் எண்ணெய் சிலவற்றைக் காணலாம்.

அரோமாதெரபி

அரோமாதெரபி என்பது மனம் மற்றும் உடலை இயற்கையான வாசனையும் நடத்துவதற்கான சிறந்த முறையாகும். இந்த தாவர எண்ணெய்களை உள்ளிழுக்கும் போது மூளைக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு உணர்ச்சிகளைப் பாதிக்கலாம். பெரும்பாலானோர் கவலை மற்றும் மன அழுத்தத்திற்கான சிகிச்சைகள் போன்ற மனநல சிகிச்சைக்காக, அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இதில் எந்தெந்த அத்தியாவசிய எண்ணெய்கள் மனக்கவலை மற்றும் மன அழுத்தம் நீங்க உதவும் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Meditation Benefits: மனநலப் பிரச்சனையைத் தீர்க்க தினமும் 20 நிமிஷம் இத செய்யுங்க போதும்.

மனக்கவலை நீங்க அத்தியாவசிய எண்ணெய்கள்

அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவது மனக்கவலை, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றை நீக்க உதவுகிறது.

கெமோமில்

தேநீரில் கெமோமில் ஆனது மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஆக்ஸிஜனேற்ற தேநீர் ஆனது தூங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தேநீர் வகைகளில் கெமோமில் பயன்படுகிறது. இந்த அத்தியாவசிய எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதைச் சுவாசிக்க சிறிய அளவு மட்டுமே பரவ வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை எண்ணெயைப் பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலை சுகவீனத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டைத் தருகிறது. இவற்றைத் தவிர, மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை நீக்கவும் எலுமிச்சை எண்ணெயைப் பயன்படுத்தலாம். குமட்டல், பதட்டம் போன்றவற்றை உணர்பவர்கள் மெதுவாக சுவாசிப்பதன் மூலம் மூச்சை உள்ளிழுப்பது நல்லது.

லாவண்டர்

மிகவும் பிரபலமான அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக லாவண்டர் உள்ளது. லாவண்டர் வாசனையை உள்ளிழுப்பது மனக்கவலையின் அளவைக் குறைக்கிறது. மேலும், இது தூக்கத்தை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. படுக்கைக்கு முன் குளியல் எடுப்பவர்கள், இந்த எண்ணெயின் சில துளிகளைப் பயன்படுத்தலாம். மேலும் லாவண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம். இவை மனக்கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Stress Reduce Tips: நொடிப் பொழுதில் கவலை நீங்க, இந்த மெடிடேஷன் ஃபாலோ பண்ணுங்க

சந்தனம்

சந்தன மணத்தின் மூலம் மனக்கவலை, மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை நீக்க உதவுகிறது. சந்தனத்தை லாவண்டர், ஆரஞ்சு போன்ற பிற அத்தியாவசிய எண்ணெய்களுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த எண்ணெயுடன் லாவண்டர் அத்தியாவசிய எண்ணெயைப் பயன்படுத்துவது தளர்வு மற்றும் தூக்கத்தின் சுகாதாரத்தில் விளைவை ஏற்படுத்தலாம். கூடுதலாக, இவை இரண்டும் ஒன்றாக இணைத்து பயன்படுத்துவது மனக் கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை நீக்குகிறது.

இனிப்பு துளசி

இனிப்பு துளசியைப் பயன்படுத்துவது வீக்கம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இவை சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. மனக் கவலையை உணர்பவர்கள் இனிப்பு துளசியைப் பயன்படுத்தலாம்.

இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்பாட்டின் மூலம் மனக்கவலை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். எனினும், மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Best Bathing Oils: மனக்கவலை நீங்க குளிக்கும் போது இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துங்க

Image Source: Freepik

Read Next

Stress Reduce Tips: நொடிப் பொழுதில் கவலை நீங்க, இந்த மெடிடேஷன் ஃபாலோ பண்ணுங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content