Benefits of meditation for managing digital stress in the digital age: இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மக்கள் பல நன்மைகளைப் பெற்றிருந்தாலும், சில பிரச்சனைகளையும் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அதில் ஒன்றாகவே டிஜிட்டல் மன அழுத்தம் அமைகிறது. இது மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை திரையில் வேலை செய்வதால் ஏற்படும் மன அழுத்தம் டிஜிட்டல் மன அழுத்தம் எனப்படுகிறது. இது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், மூளையையும் சோர்வடையச் செய்கிறது.
அதிலும் சமூக ஊடகங்களில் பல மணிநேரம் செலவிடுவது மக்களின் பழக்கமாகிவிட்டது. இதனால் மன அழுத்தமும் எதிர்மறை உணர்வும் அதிகரிக்கிறது. டிஜிட்டல் தளங்களால் ஏற்படும் இந்த மன அழுத்தம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். தற்போதைய காலநிலையில், வேலையின் போது திரையில் இருந்து தூரமாக இருப்பது கடினம். எனினும், தியானத்தின் மூலம் அதை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். தினமும் தியானம் செய்வது மனதையும் உடலையும் நிதானமாக வைத்திருக்க உதவுகிறது.
டிஜிட்டல் மன அழுத்தத்தைக் குறைப்பதில் தியானம் எவ்வாறு நன்மை பயக்கும் என்பது குறித்து டெல்லியில் உள்ள சர் கங்காரம் மருத்துவமனையின் மூத்த உளவியலாளர் ஆர்த்தி ஆனந்தி அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Morning habits for success: தினமும் காலையில் இதை செய்தால் கடினமான இலக்கையும் எளிதில் அடையலாம்
டிஜிட்டல் மன அழுத்தத்தைக் குறைக்க தியானத்தின் நன்மைகள்
கார்டிசோல் அளவைக் குறைக்க
அதிக நேரம் திரையில் செலவிடுவதால், கார்டிசோல் ஹார்மோன் அதாவது மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கலாம். இவ்வாறு அதிகரிக்கும் மன அழுத்த ஹார்மோனின் காரணமாக, உடல் பல நோய் அபாயங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் தியானத்தை அதிகரிப்பது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது டிஜிட்டல் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இவை நரம்பு மண்டலத்தைத் தளர்த்தி, கார்டிசோலின் அளவைக் குறைக்க உதவுகிறது.
மனம் நிம்மதி அடைய
தொடர்ந்து வேலையில் அதிக கவனம் செலுத்துவதும், திரை நேரத்தை அதிக நேரம் பார்ப்பதும் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், தியானம் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், தியானம் செய்வது மனதை அமைதியாகவும் நிதானமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது மனதில் ஓடக்கூடிய பல்வேறு எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் மற்றும் மனம் நிதானமாக இருக்கும். எனவே ஆழ்ந்த சுவாசம் மற்றும் நினைவாற்றல் தியானத்தின் உதவியுடன் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்த
சமூக ஊடகங்களில் எதிர்மறையான உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் மன அழுத்தம் போன்றவை மூளையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே தான் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் உள்ளடக்கத்தில் அதிக கவனம் செலுத்துவது மூளையை சோர்வடையச் செய்கிறது. இவை எரிச்சல், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், தியானம் செய்வது உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மனதை அமைதியாக வைத்திருக்கிறது. இது தவிர, தூண்டுதல்களைத் தவிர்க்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: டென்ஷன் ஆகாதீங்க மக்களே; இந்த நோய் எல்லாம் விரட்டிக்கிட்டு பின்னாலேயே வரும்!
தூக்கத்தை மேம்படுத்துவதற்கு
தினமும் தியானம் செய்வதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம். எனவே தான், தூங்குவதற்கு முன் சிறிது நேரம் தியானம் செய்தால், அது உங்களுக்கு நல்ல தூக்கத்தைப் பெற உதவும் என்று கூறுவார்கள். நாள் முழுவதும் டிஜிட்டல் மன அழுத்தத்தைச் சந்தித்து, இரவு தூங்கும் முன்பாக தியானம் செய்வது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். இவை உடல் மற்றும் மனதை தளர்த்த உதவுகிறது. எனவே, தூங்குவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு திரையில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதன் பிறகு, தூங்குவதற்கு முன் சிறிது நேரம் தியானம் செய்யலாம்.
வேலையில் கவனத்தை அதிகரிக்க
டிஜிட்டல் மன அழுத்தத்தினால் மூளை சோர்வடையக்கூடும். இது வேலையின் மீதான கவனத்தையும் குறைக்கிறது. இதனால் ஒருவர் சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும் கடினமாகிறது. மேலும் வேலையின் மீதான கவனமும் குறைகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக தியானம் அமைகிறது. நாள்தோறும் சிறிது நேரம் தியானம் செய்வது வேலையின் மீதான கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. வேலையில் நீண்ட நேரம், நாள் முடியும் வரை நம்மை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. இது மூளை விரைவாக சோர்வடைவதைத் தடுக்கிறது. எனவே தியானம் செய்வதன் மூலம் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும்.
முடிவுரை
தியானம் செய்வதன் மூலம் டிஜிட்டல் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். தினமும் தியானம் செய்தால், அது உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, கார்டிசோலின் அளவைக் குறைப்பது, வேலையில் கவனம் செலுத்த உதவுவது மற்றும் மனதை ரிலாக்ஸாக வைத்திருப்பது போன்ற பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதன் மூலம் டிஜிட்டல் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. இது குறித்த மேலும் சில தகவல்களைப் பெற நிபுணரிடம் கலந்தாலோசிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Stress: மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? இந்த காலத்துல கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 28, 2025 22:06 IST
Published By : கௌதமி சுப்ரமணி