Mental Health: இப்படி உடற்பயிற்சி செய்யுங்க… மன அழுத்தம் பறந்து போயிடும்..!

  • SHARE
  • FOLLOW
Mental Health: இப்படி உடற்பயிற்சி செய்யுங்க… மன அழுத்தம் பறந்து போயிடும்..!

இன்று அனைவரும் வேலை பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றோம். குழந்தைகளோ போட்டிகள் நிறைந்த உலகை வெல்ல ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் போது, மன அழுத்தத்தை சந்திக்கின்றனர்.

இத்தகைய சூழலில் மன அழுத்தத்தை குறைக்க பல வழிகளை தேடி வருகிறோம். மருத்துவரை அணுகுவது முதல், வீட்டு வைத்தியம் வரை அனைத்தையும் செய்கிறோம். மேலும் யோகா உடற்பயிற்சி போன்றவற்றை முயற்சிக்கிறோம். இது சிலருக்கு பலன் கொடுத்தாலும், சிலருக்கு தோல்வி தான்.

ஆனால் மன அழுத்தத்தை போக்க சூப்பர் வழி ஒன்று இருக்கு. இயற்கையோடு இயற்கையாக ஒன்றினைந்தால், மன அழுத்தத்தை விரட்டலாம். இதை நம்ப முடிகிறதா? உண்மை தான். பூங்கா மற்றும் கடற்கரை போன்ற இயற்கையான அமைப்புகளில் உடற்பயிற்சி செய்தால் மன ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தமும் குறையும்.

இயற்கையும்… மன ஆரோக்கியமும்…

மனநலச் சிக்கல்களைத் திறம்படத் தடுப்பது ஒரு பெரிய சவாலாகவும், பொது சுகாதாரத் துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உருவெடுத்துள்ளது. இந்த நிலைமைகள் சிக்கலானதாக இருக்கலாம். இதன் சிகிச்சைக்கு பல்நோக்கு அணுகுமுறை தேவைப்படுகிறது. இது மருந்தியல் தலையீடுகள், உளவியல் சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதையும் படிங்க: Mental Health Tips: மனநலத்தை நிம்மதியாக வைத்திருப்பது எப்படி?

ஆனால், நீங்கள் அதீத மன அழுத்தத்தில் இருக்கும் போது, பூங்கா அல்லது கடற்கரை போன்ற இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்றால் மன அழுத்தம் குறையும். மேலும் மன அமைதி ஏற்பட்டு மன நிம்மதி ஏற்படும். குறிப்பாக இயற்கை சூழ் இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் மன நிலை மேம்படும். குறைந்த மற்றும் மிதமான அளவிலான உடல் செயல்பாடுகள் கூட மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இயற்கை சூழ் இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போது, வெளி காற்று மற்றும் அமைதியான நிலை, உங்கள் மனதை அமைதியாக்கும். மேலும் சுற்றியுள்ள மரம் மற்றும் செடிகளில் இருந்து வரக்கூடிய நறுமணம், மன அமைதியை ஏற்படுத்தும்.

மன அழுத்தத்தை குறைக்கும் சில வழிகள்…

  • நடைபயிற்சி, ஜாகிங் அல்லது யோகா போன்ற வழக்கமான உடற்பயிற்சியின் போது எண்டோர்பின்களின் வெளியீடு மனநிலையை அதிகரிக்கவும் நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும்.
  • தியான நுட்பங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் அமைதி மற்றும் உள் அமைதி உணர்வை ஊக்குவிக்கின்றன.
  • ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உட்பட உணவு சரிசெய்தல் மன ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
  • குத்தூசி மருத்துவம், அரோமாதெரபி, சமூக தொடர்புகள் மற்றும் ஆரோக்கியமான தூக்க முறைகளும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு பங்களிக்கின்றன.

Image Source: Freepik

Read Next

மன அழுத்தம் கருவுறுதலை பாதிக்குமா?

Disclaimer

குறிச்சொற்கள்