Mind Detox Tips: எந்த கவலையும் இல்லாம மனச லேசா வைத்திருக்க இதெல்லாம் செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Mind Detox Tips: எந்த கவலையும் இல்லாம மனச லேசா வைத்திருக்க இதெல்லாம் செய்யுங்க

மனதை டிடாக்ஸ் செய்ய கடைபிடிக்க வேண்டியவை

மனதில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு சில ஆரோக்கியமான நடவடிக்கைகளைக் கையாள வேண்டும்.

தியானம் செய்வது

தினமும் தியானம் செய்வது மனதை அமைதியாக வைக்க உதவுகிறது. இது மனதிற்கு நேர்மறையான எண்ணங்களைத் தருகிறது. இது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தியானம் செய்வதன் மூலம் உடலில் செரோடோனின் உற்பத்தியைத் தூண்டி, மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Meditation Benefits: மனநலப் பிரச்சனையைத் தீர்க்க தினமும் 20 நிமிஷம் இத செய்யுங்க போதும்.

உடற்பயிற்சி செய்வது

தினசரி யோகா பயிற்சி அல்லது உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது உடல் மற்றும் மனதிற்கு அதிகளவிலான நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், மனதை அமைதியாக வைத்திருக்கவும் ஏராளமான பயிற்சி முறைகள் உள்ளன. இந்த பயிற்சி முறைகளைக் கையாள்வதன் மூலம் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

சிந்தனையை மாற்றுதல்

மன அழுத்தத்தை உணரும் போது ஆழ்ந்த சிந்தனையில் இருப்பர். இது மிகவும் அதீத மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக, ஓய்வு நேரத்தில் மட்டுமே மனது பயனற்ற எண்ணங்களை சிந்திக்க நேரிடும். இதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் தோன்றலாம். மனதை திசைதிருப்ப, வேறு ஏதாவது வேலைகளில் ஈடுபட வேண்டும். மற்ற வேலைகளில் கவனம் செலுத்தும் போது ஆழ்ந்த சிந்தனையைத் தவிர்த்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடியும்.

மூளைக்கு ஓய்வு தருவது

அதிகளவிலான மன அழுத்தத்தை அடைவதற்கு மூளை ஓய்வு இல்லாமல் இருப்பதும் காரணமாகும். குறிப்பாக காலை நேரத்தில் மொபைல் போன், தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றால் மூளை அழுத்தத்திற்கு உள்ளாகிறது. இதனால், அதீத மன அழுத்தத்தை சந்திக்கும் சூழல் உண்டாகலாம். எனவே மன அழுத்தம் தீர மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Stress Reduce Tips: நொடிப் பொழுதில் கவலை நீங்க, இந்த மெடிடேஷன் ஃபாலோ பண்ணுங்க

இசை கேட்பது

மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் சிறந்த வழிகளில் ஒன்று இசை கேட்பதாகும். இது மனதிற்கு தளர்வைத் தந்து மனதை அமைதியாகவும், நிலையானதாகவும் வைத்திருக்க உதவும். இதன் மூலம் மற்ற வேலைகளில் ஈடுபாட்டுடன் இருக்க முடியும். எனவே மன அழுத்தத்திலிருந்து விடுபட தினமும் பிடித்த பாடலைக் கேட்கலாம்.

இந்த வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பெறலாம். தியானம், உடற்பயிற்சி செய்வதுடன் ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வது அவசியமாகும். இவ்வாறு மனதில் உள்ள நச்சுக்களை நீக்கி மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Oil For Stress: மன அழுத்தத்தால் அவதியா? இந்த எண்ணெய் யூஸ் பண்ணா நொடில பறந்திடும்

Image Source: Freepik

Read Next

Exam stress: தேர்வு பயத்தை போக்க எளிய வழிகள்! இதை பண்ணுங்க..

Disclaimer

குறிச்சொற்கள்