Thu Oct 29, 2026 | 02:34 PM IST

30 நிமிஷம் இத செஞ்சாலே போதும்! மனச்சோர்வு குறையும்!

30 நிமிஷம் இத செஞ்சாலே போதும்! மனச்சோர்வு குறையும்!30 நிமிஷம் இத செஞ்சாலே போதும்! மனச்சோர்வு குறையும்!

Exercise For Depression: இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது நல்லது. ஏனெனில் போட்டி நிறைந்த உலகில் அனைவரும் அவர்களது எல்லையை நோக்கி ஓடுகின்றன. இதில் பல ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றன. இதனால் மன அழுத்தம் (Stress), மனச்சோர்வு (Depression) மற்றும் கவலை (Anxiety) போன்றவை அனைவரிடத்திலும் ஏற்படுகிறது. 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆண்களை விட பெண்கள் அதிக  மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் கவலையால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு அவர்களது பணிச்சூழல், இல்லற வாழ்க்கை, மாதவிடாய், பிரசவ நேரம் போன்றவை காரணமாக திகழ்கிறது. மனச்சோர்வை குறைக்க உடற்பயிற்சி உங்களுக்கு உதவலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை இங்கே. 

நடைபயிற்சி (Walking)

இருப்பதிலேயே மிக எளிமையான உடற்பயிற்சி என்னவென்றால் அது நடைபயிற்சி தான். நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, உங்கள் உடலில் எண்டோர்பின் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. நீங்கள் தினமும் நடைபயிற்சி செய்தால், மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் கவலை போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகள் தீரும். 

ஓட்டம்  (Jogging)

நீங்கள் தினம் ஜாக்கிங் செய்தால், செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் மனநிலை மேம்படும். மேலும் இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். 

இதையும் படிங்க: Happy Hormones Tips: மன அழுத்தத்தை இயற்கையாக குறைப்பது எப்படி? இதோ எளிய வழிகள்!

வலிமை பயிற்சி (Strength Training) 

வலிமை பயிற்சி,  உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனநலத்திற்கும் பங்களிக்கின்றன. இது வலிமையை கட்டியெழுப்புவது, சுயமரியாதையை அதிகரிப்பது என வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நீச்சல் (Swimming)

நீச்சலின், தண்ணீரின் லேசான தன்மையுடன் இணைந்து, ஒரு இனிமையான சூழலை உருவாக்குகிறது. இது மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற மன பிரச்னைகளை குறைக்கும். 

நடனம் (Dance)

நாம் நடனம் ஆடும் போது, மகிழ்ச்சி உணர்வு அதிகரிக்கும். இது மனநிலையை மேம்படுத்துவதற்கும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அதன் திறனுக்காக அங்கீகாரம் பெற்று வருகிறது. 

சைக்கிள் ஓட்டுதல் (Cycling) 

சைக்கிள் ஓட்டுதல் உங்கள் உங்கள் மனநிலையை மேம்படுத்துவதோடு ஒட்டுமொத்த மனநலத்தையும் மேம்படுத்தும். 

தியானம் (Meditation)

தியானம் செய்வது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை நிர்வகிப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். தியானம் மனநிலை மற்றும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தில் மேம்பாடுகளுடன் தொடர்புடையது.

யோகா (Yoga)

யோகாவில் மென்மையான இயக்கங்கள், கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றின் கலவையானது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. 

Image Source: Freepik

Read Next

→ Smartphones Disadvantages: செல்போன் யூஸ் செய்வதால் எவ்வளவு ஆபத்து தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.