ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? ஹேப்பி ஹார்மோன் அளவை அதிகரிக்க இத செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? ஹேப்பி ஹார்மோன் அளவை அதிகரிக்க இத செய்யுங்க


Best Way To Increase Serotonin Naturally: இன்றைய நவீன காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பல்வேறு உடல் உபாதைகளைச் சந்திக்கின்றனர். இது உடல் உபாதைகள் மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு உள்ளிட்டவை மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உடலில் செரடோனின் அளவு குறைவதே காரணமாகும். இது தீவிர மன அழுத்தம், பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

உடலில் செரடோனின் ஹார்மோன் அதிகரிப்பதன் மூலம் இந்த மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்கலாம். உடலில் மகிழ்ச்சி ஹார்மோன் அதிகரிப்பது என்பது செரடோனின் விளைவுகளால் ஏற்படுகிறது. இந்த செரடோனின் மனநிலை மற்றும் பல்வேறு செயல்பாடுகளை அதிகரிக்கும் ஹார்மோன் ஆகும். செரடோனின் சர்க்காடியன் தளத்தை ஒழுங்குபடுத்தி தரமான தூக்கத்தைத் தருகிறது. மேலும், பசியை சமநிலைப்படுத்தவும், கற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இதில் செரடோனின் அதிகரிப்பதற்கான வழிகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Keto Diet Benefits: கீட்டோ டயட் இருந்தா ஸ்ட்ரெஸ் குறையுமாம்! ஆராய்ச்சியாளர்கள் தரும் விளக்கம்

செரடோனின் அதிகரிக்க உதவும் வழிகள்

மருந்து உட்கொள்ளாமல், சில அன்றாட நடவடிக்கைகளின் உதவியுடன் உடலில் செரடோனின் அளவை அதிகரிக்க முடியும்.

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் செரடோனின் அளவை அதிகரிக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சி செய்வது இரத்தத்தில் டிரிப்டோபான் வெளியீட்டைத் தூண்ட உதவுகிறது. மேலும் இது அமினோ அமிலங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. உடலில் அதிக டிரிப்டோபான் இருப்பது மூளைத்திறனை மேம்படுத்துகிறது. எனவே ஏரோபிக்ஸ், ஜூம்பா, நடனம் போன்ற முழு உடல் செயல்பாடுகளை உள்ளடக்கிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது உடலில் மகிழ்ச்சி ஹார்மோனான செரடோனின் அளவை அதிகரிக்கிறது. இது தவிர, சைக்கிள் ஓட்டுதல் அல்லது பளு தூக்குதல் போன்றவையும் செரடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

மசாஜ் சிகிச்சை

மசாஜ் செய்யும் சிகிச்சையின் உதவியுடன் உடலில் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோனை அதிகரிகலாம். மேலும் இவை மன அழுத்தத்தை குறைத்து உடலை அமைதிப்படுத்துகிறது. உடலை மசாஜ் செய்வது கவலை, தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வு போன்றவற்றைக் குறைப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனினும், உங்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் சரியான வழியை உரிமம் பெற்ற சிகிச்சையாளரிடம் செல்ல வேண்டும்.

வெளிச்சத்தில் நேரம் செலவிடுதல்

ஆய்வுகளின்படி, கோடை காலத்துடன் ஒப்பிடுகையில், பெரும்பாலும் இருண்ட குளிர்காலத்தில் செரோடோனின் அளவைக் குறைக்கிறது. மனநிலையில் செரோடோனின் தாக்கத்தால் பருவகால பாதிப்புக் கோளாறு மற்றும் பிற மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கிறது. எனவே செரடோனின் அளவை அதிகரிக்க சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது முக்கியமாகும். இந்த சாத்தியமான நன்மைகளைப் பெற, சூரிய ஒளி வெளிப்பாட்டில் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் 15 நிமிடங்களுக்கு மேல் வெளியே இருந்தால் சன்ஸ்கிரீன் அணிய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Smartphone Effects: ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணா இந்த சிக்கல்களை நீங்க கட்டாயம் சந்திக்கணும்

மற்றவர்களுக்கு உதவுவது

மற்றவர்களுக்கு உதவும் போது எப்போதும் நன்றாக இருப்பதை உணரலாம். இது மகிழ்ச்சியான ஹார்மோன்களையும் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இது ஒரு நோக்கத்தையும் சாதனை உணர்வையும் தருகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, மற்றவர்களுக்கு உதவுவது செரோடோனின், ஆக்ஸிடாஸின் மற்றும் டோபமைனை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மகிழ்ச்சி ஹார்மோனை மேம்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

சிரிப்பது

பெரும்பாலான மனநலப் பிரச்சினைகளுக்கு சிரிப்பு சிறந்த சிகிச்சையாகக் கருதப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சிரிப்பது மூளையில் செரோடோனின் அளவு அதிகரிக்கிறது. இவ்வாறு சிரிப்பது உடலுக்கு மகிழ்ச்சி, தளர்வு மற்றும் மனநிறைவை மேம்படுத்துகிறது. எனவே பெரும்பாலான நேரங்களில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிரித்து பேசுவது டோபமைன் அளவை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இது மன நிலை மற்றும் உணர்ச்சி நிலை மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

உணர்ச்சிகளை நிர்வகிப்பது

எப்போதும் சோகமாகவும் மனச்சோர்வுடனும் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நாள்பட்ட மன அழுத்தம் ஆகும். இதற்குப் பின்னால் இருப்பது மிகக் குறைந்த அளவிலான செரோடோனின்களே காரணமாகும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க செரோடோனின் ஹார்மோன்களை அதிகரிக்க வேண்டும். இதற்கு, மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்டவற்றைக் குறைக்க வேண்டும்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் உடலில் இயற்கையான முறையில் செரடோனின் அளவை அதிகரித்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றிலிருந்து விடுபட முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Happy Hormones Tips: மன அழுத்தத்தை இயற்கையாக குறைப்பது எப்படி? இதோ எளிய வழிகள்!

Image Source: Freepik

Read Next

ஈகோ குணத்தால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள்? நிபுணர் கருத்து

Disclaimer