Negative Effects Of Smartphones On Mental Health: இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத இடமே இருக்காது. பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் சில நன்மையான விளைவுகள் இருப்பினும், பல்வேறு தீய விளைவுகளும் நிறைந்துள்ளது. இதனைப் பலரும் அறிந்தும் ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மக்கள் ஸ்மார்ட்போன் திரையை மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலரும் அறிவதில்லை. அதிகளவிலான ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் கண்கள் பலவீனமடைவதுடன், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம். ஆய்வு ஒன்றில் வெளியான அறிக்கையில் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Meditation For Anxiety: மன அழுத்தத்திலிருந்து சீக்கிரம் விடுபட இந்த ஒன்னு மட்டும் செய்யுங்க போதும்
ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள்
ஒருவர் அதிகளவு செல்போன் பயன்படுத்துவது அவர்களின் மன ஆரோக்கியத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தலாம். இது குறித்து இதில் விரிவாகக் காண்போம்.
சிந்திக்கும் திறன் பாதிப்பு
ஒருவர் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இது அவர்களின் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால், மனச்சோர்வு ஏற்படுவதுடன், சிந்திக்கும் திறன் பாதிப்படையலாம். நீண்ட நேரம் மொபைல் பயன்பாட்டில் இருப்பது அவர்களுக்கு மொபைல் மீதான நாட்டத்தையே அதிகரிக்கிறது. இது மற்ற முக்கியமான விஷயங்களில் செலுத்தப்படும் ஈடுபாட்டைக் குறைக்கிறது.
உணர்ச்சி ரீதியான நிலையற்றத் தன்மை
ஸ்மார்ட்போன் பயன்பாடு உணர்ச்சி ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக சமூக ஊடகங்களின் தாக்கம் அவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது அவர்களுக்கு உணர்ச்சி ரீதியான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மனச்சோர்வு
சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பது பயனற்ற தன்மையை அதிகரிக்கலாம். இது இறுதியில் மன அழுத்தத்தைத் தருவதாக அமைகிறது. சமூக ஊடங்களை நீண்ட நேரம் உற்று நோக்குவது மனச் சோர்வை அதிகரிப்பதுடன் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Health: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கண்டிப்பா மனநல மருத்துவரை சந்திக்கனும்!
குறைவான செயல்திறன்
நீண்ட நேரமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது அவர்களின் செயல்திறனைக் குறைக்கிறது. இது மோசமான செயல்திறனை ஏற்படுத்துகிறது. இதனால் வேலையில் ஈடுபாடு குறைவதுடன், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய செயல்கள் செய்ய முடியாமல் போகலாம். இந்த தாமதமான செயல்பாட்டு மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநலத்தைப் பாதிக்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
உறவில் சிக்கல்கள்
தொலைபேசி அடிமையாகி விடுவது குடும்பம் அல்லது பார்ட்னர்களுடனான உறவுகளுக்குத் தீங்கு விளைவிக்கலாம். மற்றவர்கள் முன்னிலையில் தொலைபேசியைத் தொடர்ந்து பயன்படுத்துவது, அவர்களைப் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கலாம். இது உறவுகளுக்குள் பிரச்சனை மற்றும் மோதலை ஏற்படுத்தலாம். அதே சமயம், துணையுடன் நேரடியாக உரையாடுவதைக் காட்டிலும், செல்போன் மூலமாக தொடர்பு கொள்வது உறவின் நெருக்கத்தைக் குறைக்கிறது.
ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகள்
இந்த விளைவுகளைத் தவிர்க்க, ஸ்மார்ட்போன் அடிமையில் இருந்து விடுபட வேண்டும். இதற்கு சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
- செல்போன் பார்ப்பதற்கான வரம்புகளை அமைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தை அமைத்து அந்த நேரத்திற்குள் மொபைல் போனை பயன்படுத்த வேண்டும்.
- மொபைலை அணுக முடியாத படி, வேறொரு அறையில் வைக்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
- உணவு உண்ணும் போது அல்லது பிற வேலைகளில் இருக்கும் போது தொலைபேசியிலிருந்து வழக்கமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- செல்போன் பயன்படுத்துவதற்கு மாற்று வழியாக யோகா, நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
இந்த வகை முறைகளைக் கையாள்வதன் மூலம் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் அபாயங்களைத் தடுப்பதுடன், மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Financial Stress Relax Tips: நிதி அழுத்ததால் மன அழுத்தமா.? எப்படி சமாளிப்பது?
Image Source: Freepik