காபி பிரியரா நீங்க? இது தெரியாம காபில கை வைக்காதீங்க!

  • SHARE
  • FOLLOW
காபி பிரியரா நீங்க? இது தெரியாம காபில கை வைக்காதீங்க!


Negative effects of caffeine on mental health: இன்று அனைவரும் எழுந்த உடனேயே முதலில் காபி, டீ போன்ற பானங்களையே குடிக்க விரும்புகின்றனர். ஆனால் அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் இந்த பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் காபி, டீ போன்றவற்றை வெறும் வயிற்றில் அருந்துவது உடல் நலத்தைப் பாதிக்கிறது. சிலர் மன அழுத்தத்தில் இருக்கும் போது காபி, டீ அருந்துவதை விரும்புவர். ஆனால் காபி அருந்துவது மன ஆரோகியத்தைப் பாதிக்கும் காரணியாக அமைகிறது.

காபி மிகவும் பிரபலமான பானமாகும். இது அதன் சுவை மற்றும் காஃபின் உள்ளடக்கத்திற்காக் நன்கு அறியப்பட்டது. மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர, கவனம், ஆற்றல் நிலை மற்றும் மனநிலை மேம்பாடு போன்றவற்றிற்கு காபி உதவுவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், புற்றுநோய், வகை 2 நீரிழிவு, கல்லீரல் நோய் போன்ற இன்னும் சில அபாயங்களைக் குறைக்க இந்த பானம் உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? ஹேப்பி ஹார்மோன் அளவை அதிகரிக்க இத செய்யுங்க

CHECK YOUR

MENTAL HEALTH

Abstract tree and brain illustration

காபி குடிப்பது மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

காபி அருந்துவது இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தந்தாலும், அதிகளவு காபி குடிப்பது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். இதற்கு இதில் உள்ள அதிகளவிலான உள்ள காஃபின் உள்ளடக்கமே காரணமாகும். இதில் காபி எவ்வாறு மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பதைக் காண்போம்.

பதட்டம்

காபி அதிகளவிலான காஃபின் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும். இது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி, கவலையை அதிகரிக்கிறது. இவ்வாறு அதிக அளவிலான காஃபின் உட்கொள்ளல் பதட்டம், அமைதியின்மை போன்ற அச்சுறுத்தும் உணர்வுகளை ஏற்படுத்தலாம்.

மன அழுத்தம் அதிகரிப்பு

கார்டிசோல் என்பது மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன் ஆகும். காஃபின் உள்ளடக்கத்தால் கார்டிசோல் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கிறது. இது நம் உடலின் செறிவு, உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அமைகிறது.

மனநிலை மாற்றங்கள்

காஃபின் தூண்டுதலின் விளைவாக, குறுகிய காலத்தில் மனநிலையை அதிகரிக்கலாம். எனினும், இதன் விளைவு குறையும் போது, அது செயலிழக்கச் செய்கிறது. இந்த சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக, எரிச்சல் அல்லது மனச்சோர்வு போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காஃபின் உணர்திறன் கொண்டவர்கள் இது போன்ற உணர்வுகளை எளிதில் சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Keto Diet Benefits: கீட்டோ டயட் இருந்தா ஸ்ட்ரெஸ் குறையுமாம்! ஆராய்ச்சியாளர்கள் தரும் விளக்கம்

எரிச்சல்

காஃபின் உணர்திறன் கொண்டவர்கள் அல்லது அதை காபியை அளவுக்கு அதிகமாக உட்கொள்பவர்களுக்கு தூண்டுதல் விளைவுகள் காரணமாக நடுக்கம், கிளர்ச்சி அல்லது எரிச்சல் போன்றவை ஏற்படலாம். இது கவலை அல்லது மன அழுத்தத்தின் அறிகுறிகளை அதிகரிக்கிறது.

தூக்கக் கலக்கம்

காபி அருந்தும் போது, அதில் நிறைந்துள்ள காஃபின் அடினோசினைத் தடுக்கிறது. அடினோசின் என்பது தூக்கத்தை ஊக்குவிக்க உதவும் ஒரு வகை இரசாயனமாகும். இது தூக்கமின்மையை ஏற்படுத்தலாம் அல்லது தூக்கத்தின் தரத்தை குறைக்கலாம். இவ்வாறு மன ஆரோக்கியத்தைப் பாதிப்பது மற்றும் மோசமான தூக்கம் போன்ற வழிகளில் எதிர்மறையாக பாதிக்கிறது. இதன் காரணமாக ஏற்படும் எரிச்சல், மன அழுத்தத்தால் அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படுகிறது.

மனச்சோர்வு

காஃபின் உட்கொள்ளல் தற்காலிக கவனம், விழிப்புணர்வு மற்றும் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்தும். எனினும், இதை அதிகளவு அருந்தும் நபர்கள், அதை உட்கொள்ளாத சமயத்தில் எரிதல் அல்லது மனச் சோர்வைச் சந்திக்கின்றனர். இதன் மூலம் சார்பு சுழற்சி உருவாகிறது.

இவை அனைத்தும் காபி உட்கொள்வதால் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் ஆகும். காபி குடிப்பது நல்லது எனினும், மிதமான அளவில் உட்கொள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Sugar and Mental Health: சர்க்கரை அதிகம் சாப்பிட்டா மன அழுத்தம் ஏற்படுமா?

Image Source: Freepik

Read Next

Sugar and Mental Health: சர்க்கரை அதிகம் சாப்பிட்டா மன அழுத்தம் ஏற்படுமா?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்