Doctor Verified

எக்ஸாம் டைம்ல குழந்தைகள் அதிகம் மொபைல் யூஸ் பண்ணா என்ன பிரச்சனை வரும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
எக்ஸாம் டைம்ல குழந்தைகள் அதிகம் மொபைல் யூஸ் பண்ணா என்ன பிரச்சனை வரும் தெரியுமா?

குறிப்பாக தேர்வு நேரத்தில் குழந்தைகள் மொபைல் போன், டிவி போன்றவற்றைப் பார்ப்பது உடல் நலத்தைப் பாதிப்பதுடன், கல்வி செயல்திறனை ஆழமாக பாதிக்கலாம். அதிகப்படியான திரை நேரம் குழந்தைகளின் தேர்வு செயல்திறனைக் குறைப்பதைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய சில யுக்திகள் குறித்து மேக்சிவிஷன் கண் மருத்துவமனை மூத்த கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மரங்கண்டி வம்ஷிதர் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Parenting Tips: பெற்றோர்களே…குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த 5 விஷயங்கள கத்துக்கொடுங்க!

அதிகப்படியான திரை நேரத்தின் விளைவுகள்

குழந்தைகள் அதிகப்படியான திரை நேரத்தால் ஏற்படும் விளைவுகள் சிலவற்றைக் காணலாம்.

கவனச்சிதறல் தடுமாற்றம்

குழந்தைகள் அதிகப்படியாக திரை நேரத்தில் செலவிடுவது படிப்பில் கவனம் செலுத்துவதற்கு இடையூறு விளைவிக்கும். அதிலும் விளையாட்டுகள், சமூக ஊடக புதுப்பிப்புகள், தொடர்ச்சியான அறிவிப்பு போன்றவை குழந்தைகளை படிப்பிலிருந்து விலக்கி, அவர்களின் நடைமுறைகளைச் சீர்குலைத்து தகவல்களைத் தக்கவைக்கும் திறனைக் குறைக்கிறது.

நினைவாற்றல் மற்றும் கற்றலில் தாக்கம்

குழந்தைகள் அதிகப்படியான நேரத்தை திரையில் செலவிடுவது, அவர்களின் நினைவாற்றலைக் கெடுக்கிறது. ஏனெனில் அதிகப்படியான திரை நேரம் கற்றல் மீதான ஆர்வத்தைக் குறைப்பதுடன், தகவலை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் திரை அடிப்படையிலான செயல்பாடுகள், தேர்வு மீதான சிந்தனையைக் குறைத்து சிந்தனைத் திறனைக் குறைக்கிறது.

தூக்கம் சீர்குலைதல்

நீட்டிக்கப்பட்ட திரை நேரம் அதிலும் குறிப்பாக இரவு உறங்கும் முன் குழந்தைகள் திரையில் கவனம் செலுத்துவது அவர்களின் தூக்கத்தை சீர்குலைக்கலாம். இது தேர்வுகளின் போது சோர்வை ஏற்படுத்துவதுடன், அறிவாற்றல் செயல்பாட்டைக் குறைக்கலாம். திரைகள் மூலம் வெளிப்படும் நீல ஒளியின் வெளிப்பாடு மெலடோனின் உற்பத்தியை அடக்குகிறது. மெலடோனின் என்பது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் மாற்றத்தால் தேர்வுகளுக்குக் குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பதைக் கடினமாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தையை வலிமையாக்க விரும்புறீங்களா?… இந்த 5 விஷயங்களை மனசுல வச்சிக்கோங்க!

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு

அதிகப்படியான திரை நேரம் பெரும்பாலும் உடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உட்கார்ந்த வாழ்க்கை முறை மோசமான ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சீர்குலைப்பதாக அமைகிறது. குறைக்கப்பட்ட உடல் செயல்பாடு, குழந்தைகளின் மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாடு, அவர்களின் ஆற்றல் நிலைகள் போன்றவற்றை எதிர்மறையாக பாதிக்கிறது. இது தேர்வுகளில் அவர்கள் செயல்படும் திறனைக் குறைக்கிறது.

எப்படி குறைப்பது?

குழந்தைகளின் அதிகப்படியான திரை நேரத்தைக் குறைப்பதற்கு பெற்றோர்கள் சில யுக்திகளைக் கையாள வேண்டும்.

திரை நேரத்திற்கு வரம்பு அமைப்பது

திரை நேரத்தில் வரம்புகள் மற்றும் விதிகளை நிர்ணயிப்பதனுடன், குழந்தைகள் படிக்க, பொழுதுபோக்கு மற்றும் ஓய்வெடுப்பதற்கான காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும். இது அவர்களின் மனநிலையைப் பாதிக்காதவாறு அமையும்.

கவனச்சிதறல் இல்லாத சூழல் உருவாக்குவது

படிப்பில் நன்கு கவனம் செலுத்தி படிப்பதற்கு ஏற்றவாறு மின்னணு கவனச்சிதறல்கள் இல்லாத அமைதியான மற்றும் நன்கு வெளிச்சம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பது

உடல் மற்றும் மனம் இரண்டையும் புத்துணர்ச்சியுடன் வைக்க உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அதன் படி, வெளிப்புற விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பது அவர்களை திரைகளில் இருந்து விலக்கி வைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: பெற்றோர்களே… வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் இருந்தால் இந்த 5 விஷயங்கள கட்டாயம் செய்யுங்க!

செயலில் கற்றலை ஊக்குவிப்பது

படிப்பில் கற்றல் திறனை மேம்படுத்தவும், சிக்கலைத் தீர்க்கும் திறன்களைத் தூண்டும் வகையிலும் நேரடியான கற்றல் அனுபவங்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஆரோக்கியமான உறக்க மேம்பாடு

நிலையான உறக்க நேரத்தை குழந்தைகளுக்கு வழக்கமாக்க வேண்டும். இது அவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதுடன், சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும், நிலையான உறக்க நேரத்தின் மூலம் படுக்கைக்கு முன் திரையில் வெளிப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதிக திரைநேரம் குழந்தைகளின் செயல்திறனை பாதிப்பதுடன், தேர்வில் கவனம் செலுத்த இயலாத சூழலை உருவாக்குகிறது. எனினும், மேலே கூறப்பட்ட சில உத்திகளைக் கையாள்வதன் மூலம் அதிகப்படியான திரை நேரத்தின் விளைவுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம். தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் கல்வி வெற்றிக்கு இடையே குழந்தைகள் ஆரோக்கியமான சமநிலையை அடைய பெற்றோர்களும், கல்வியாளர்களும் உதவ வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தை அதிகமா மொபைல் யூஸ் பண்றாங்களா? அப்ப இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்.

Image Source: Freepik

Read Next

Parenting Tips: பெற்றோர்களே…குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த 5 விஷயங்கள கத்துக்கொடுங்க!

Disclaimer