“இப்ப எல்லாம் என் மகனோ, மகளோ நான் சொல்லுற கேட்குறதே இல்ல”, “ஃபேமிலி கூட நேரத்தை செலவிட மாட்டேங்குறாங்க”, “குறை சொன்னால் சிடு,சிடுன்னு எரிஞ்சி விழுறான்” இதெல்லாம் இப்போது டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர்கள் புலம்பித் தள்ளும் வார்த்தைகளாகும்.
உங்கள் குழந்தைகளின் இந்த மாற்றங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். குழந்தைகள் இளமைப் பருவத்தில் நுழையும் போது இத்தகைய மாற்றங்கள் பொதுவானவை. ஆனால் நீங்கள் விரக்தியடைந்து குழந்தைகளுடன் சண்டையிட்டால், சண்டை தொடரும், தீர்க்கப்படாது.
முக்கிய கட்டுரைகள்

குழந்தைகள் வளர வளர அவர்களின் விருப்பு வெறுப்புகள் வலுப்பெறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் டீன் ஏஜ் குழந்தைகள் இருந்தால், இந்த டிப்ஸை பின்பற்றி அவர்களை தனித்துவமாக கையாளுங்கள்.
- பிள்ளைகளின் நம்பிக்கையைப் பெறுங்கள்:
வீட்டில் வாலிபர்கள் இருந்தால் முதலில் அவர்களின் நம்பிக்கையை பெற்றோர் பெறுவது மிகவும் அவசியம். குழந்தைகளுடன் நட்பு கொள்ளுங்கள். உங்களிடம் சுதந்திரமாக பேசுவதற்கு சரியான நேரம், இடத்தை அவர்களே தேர்வு செய்ய விடுங்கள்.
டீன் ஏஜ் பிள்ளைகள் மனம் விட்டு பேச முன்வருவதே அரிதானது என்பதால், அவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள். ”இதனால் தான் என் அப்பா, அம்மாகிட்ட எதையும் பேசுறது இல்ல” என்ற எண்ணத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பள்ளி முடிந்ததும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்:
குழந்தைகள் வளரும்போது பிரைவசியை எதிர்ப்பார்கிறார்கள். எனவே முடிந்தவரை அவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும் பெற்றோராகவோ அல்லது வீட்டிலிருந்து பணிபுரிபவராகவோ இருந்தால், உங்கள் மகன் அல்லது மகளுக்காக பள்ளிக்குப் பிறகு 1 அல்லது 2 மணிநேரத்தை ஒதுக்குங்கள். அவர்களிடம் பேசுங்கள்.
இது குழந்தைகள் அச்சுறுத்தப்படுகிறார்களா, யாராவது அவர்களைத் தொந்தரவு செய்கிறார்களா, ஏதாவது பயமுறுத்துகிறார்களா என்பதை அடையாளம் காண உதவும். குழந்தைகளுடன் மனம் திறந்த உரையாடல் அவர்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புள்ளது.
குழந்தைகளுடன் விளையாடுவது, ஒன்றாக திரைப்படம் பார்ப்பது போன்ற வேடிக்கையான செயல்களுக்காகவும் மாலை அல்லது இரவில் நேரத்தை ஒதுக்குங்கள்.
- குழந்தைகளுடன் சுற்றுலா செல்லுங்கள்:
குழந்தைகளுடன் பயணம் செய்வது உறவுகளை வலுப்படுத்தும். பிள்ளைகள் உங்களை ஒரு பெற்றோராக பார்க்காமல், ஒரு நண்பராக, நம்பிக்கையுள்ளவராக பார்க்க உதவுகிறது. குழந்தைகள் உங்களை நண்பராக நினைத்தால் அனைத்தையும் சுதந்திரமாக பகிர்ந்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: Healthy Food For Kids: உங்க குழந்தையோட சீரான வளர்ச்சிக்கு இந்த 5 உணவுகள் கட்டாயம்!
எனவே முடிந்தவரை ஒன்றாக பயணம் செய்ய திட்டமிடுங்கள். வரலாற்று இடங்கள், புனிதத்தலங்கள், மலையேற்றம் போன்றவற்றை திட்டமிடுங்கள். இதனால் குழந்தைகளுக்கு உங்களுடன் பழக நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
- முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்:
டீன் ஏஜ் பிள்ளைகள் புது ஹேர் ஸ்டைல் அல்லது அல்ட்ரா மார்டன் உடைகளை தேர்வு செய்யும் போது பெற்றோர்கள் எரிச்சலடைவது சகஜம். உண்மை என்னவென்றால், டீன் ஏஜ் பிள்ளைகளின் ஆடை மற்றும் ஹேர் ஸ்டைல் விஷயத்தில் பெற்றோர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இது அவர்களின் ஆளுமை மற்றும் திறன்களுக்கு மிகவும் முக்கியமானது. சில ஆடைக் குறியீடுகளை மனதில் வைத்துக்கொண்டு எப்படி ஆடை அணிவது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கவும்.
- கண்டிப்புடன் இருங்கள், கடுகடுவென இருக்காதீர்கள்:
குழந்தைகள் இளமையாக இருக்கும்போது என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சொல்லிவிடுவது எளிது. ஆனால் டீன் ஏஜ் ஆக வளர வளர கோபம் அதிகமாகும். எனவே பதின்ம வயதினருக்கு எப்போது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே சில விதிகளை உருவாக்கி, சில தேர்வுகளில் கண்டிப்பாக இருங்கள். ஆனால் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். மது அருந்த முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் போது, கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும். திட்டுவதற்கு பதிலாக அறிவுரை கூறுங்கள். அப்போது உங்கள் நம்பிக்கை பாதிக்கப்படாது.
Image Source: Freepik