நாம் தற்போது அனுபவித்து வரும் வாழ்க்கை முறை தொடர்ந்து மன அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. வயதானவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். புத்தகச் சுமை, தனிமை ஆகியவை குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன. மேலும் கூட்டு குடும்ப முறையின்மை, பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வது, அதிகப்படியான ஹோம் வொர்க் போன்றவை குழந்தைகளின் மன அழுத்தம் அதிகரிக்கவும், தனிமையில் தள்ளவும் காரணமாகிறது.
இது தவிர, அதிகரித்து வரும் செல்போன் பயன்பாடும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் பல மணிநேரம் மொபைல் போன்களை பயன்படுத்துகிறார்கள். இந்த கையடக்கக் கருவி வழங்கும் தகவல்கள் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையால் குழந்தைகள் எந்த விதமான மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதை அறிய சில அறிகுறிகள் உள்ளன.
எரிச்சல் அடைவது:
உங்கள் குழந்தை சண்டையிடுகிறதா அல்லது அல்லா விஷயத்திற்கும் எரிச்சலடைகிறதா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இது குழந்தையின் மனச்சோர்வின் நிலையாக இருக்கலாம். பெற்றோர் உடனடியாக குழந்தைக்கு அறிவுரை வழங்க வேண்டும். தேவைப்பட்டால், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம்.
குழந்தை அமைதியாக இருப்பது:
குழந்தை மிகவும் அமைதியாக இருப்பது அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதை குறிக்கும் மிக முக்கியமான அறிகுறியாகும். யாரிடமும் பேச பிடிக்காதது, யாராவது பேச ஆரம்பித்தால் அந்த இடத்தை விட்டு ஓடுவது போன்ற விஷயங்களை குழந்தைகள் செய்தால், உடனடியாக பெற்றோர் அவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும், அதில் இருந்து வெளியே வர ஆலோசனை வழங்கவும் தயாராக இருக்க வேண்டும்.
தனிமையை விரும்புவது:
குழந்தைகள் திடீரென்று தனிமையை விரும்புவது, யாரிடமும் பேச பிடிக்காமல் தனியே பேச ஆரம்பித்தால் உடனடியாக பெற்றோர்கள் உஷாராக வேண்டும். கட்டாயம் அவர்களை மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற அழைத்துச் செல்லவது சிறந்தது.
உணவில் மாற்றங்கள்:
குழந்தைகளிடம் திடீரென உணவு சம்பந்தமான பிரச்சனைகள் தென்பட ஆரம்பிக்கும். பசியின்மை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம், பெரும்பாலும் எடையில் கடுமையான மாற்றங்கள் மூலம் இதை கண்டறிய முடியும்.
இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் காணப்பட்டால், குழந்தை அதிக மனநலம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது, உடனே குழந்தைக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும்.
Image Soure: Freepik