Parents Must Avoid These Words From Children: பெற்றோர்கள் வழியில் தான் பிள்ளைகளும். ஒரு குழந்தை தன் பெற்றொரிடம் இருந்து கவனிக்கக்கூடிய விஷயங்களை தான் பின்பற்றுகிறார்கள். ஆகையால் அவர்கள் முன் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
வார்த்தைகளில் கவனம்
குழந்தைகள் முன் உபயோகிக்கக்கூடிய வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு முன் தவறான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் நாம் என்ன செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ குழந்தைகள் அதை தான் செய்வார்கள்.

ஆகையால் அவர்களிடம் இதை செய்யாதே என்று சொல்வதற்கு பதில், இப்படி செய்யனும் என்று சோல்லிப்பாருங்கள். மேலும் ஒரு விஷயத்திம் முக்கியதுவத்தை அவர்களுக்கு மெதுவாக புரிய வைக்கவும்.
மட்டம் தட்ட வேண்டாம்
குழந்தைகள் தவறு செய்யும்போது, அவர்களை அமைதியாக கையாளவும். நீங்கள் அவர்களை மட்டம் தட்டுவது போல் பேசினால், உங்கள் மீது வெறுப்பு மட்டும் தான் வரும். குறிப்பாக அவர்களிடம் “நீ முட்டாள், உனக்கு ஒன்னும் தெரியாது” போன்ற வார்த்தைகளை கூற வேண்டாம். இதற்கு பதில், அவர்களுக்கு அந்த விஷயத்தில் விவரங்களை கற்றுக்கொடுக்கவும்.
இதையும் படிங்க: Child Needs Attention: குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனம் தேவைப்படுவதற்கான அறிகுறிகள்
கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்
உங்கள் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை, அங்க போகாத, இங்க நிக்காத, இப்படி பேசதா, சத்தமா சிரிக்காத, ஓடாத, ஆடாத, அத பண்ணாத, இத பண்ணாத போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள். இது உங்கள் குழந்தைகளை, உங்களிடம் இருந்து பிரிக்கக்கூடும்.
சாபம் விடாதீர்
பிள்ளைகள் தவறு செய்வது இயல்பு. அதற்காக அவர்களுக்கு சாபம் விடாதீர்கள். அதாவது “நீ நல்லா இருக்கமாட்ட, நாசம போவ, நீ எப்படி நல்லா வாழ்வனு நா பாக்குறேன்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
ஒப்பிடக்கூடாது
உங்கள் குழந்தைகளை மற்ற பிள்ளைகளுடம் ஒப்பிட வேண்டாம். இது மற்றவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். மேலும் இரண்டு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள், தங்களில் ஒரு குழந்தையுடன், மற்ற குழந்தையை ஒப்பிடுகிறார்கள். இது அவர்களிடையே உறவை கெடுக்கும். இது போன்று செய்ய வேண்டாம்.
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் பிள்ளைகளிடன் நேரம் செலவிட முயற்சிக்கவும். அவர்களிடம் அதிகம் பேசவும். அப்போது தான் அவர்கள் உங்களிடம் எதையும் மறைக்கமாட்டார்கள்.
Image Source: Freepik