Doctor Verified

Child Needs Attention: குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனம் தேவைப்படுவதற்கான அறிகுறிகள்

  • SHARE
  • FOLLOW
Child Needs Attention: குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனம் தேவைப்படுவதற்கான அறிகுறிகள்


Child Lack Of Attention From Parents: நவீன காலகட்டத்தில் வீட்டில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் நிறைந்துள்ளது. இந்த நிலையில், தங்கள் குழந்தைகளை நன்றாக கவனிக்க இயலாத சூழ்நிலை உண்டாகும். இதன் காரணமாக குழந்தைகள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகளை பெற்றோர்கள் தவற விடுகின்றனர். இது குழந்தைகளுக்கு அதிக அளவிலான மன அழுத்தத்தைத் தர உள்ளதாக அமையும். பெற்றோர்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்தாலும் அல்லது வீட்டிலேயே தங்கி வேலை செய்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். குழந்தைகளுக்கு எது சிறந்தது, எது ஆரோக்கியமானது என்பது குறித்துத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல குழந்தைகளை வளர வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோரிடமிருந்து கவனம் பெற வேண்டும் என்பது குறித்து கேட்வே ஆஃப் ஹீலிங் மருத்துவர் சாந்தினி துக்னைட் எம்.டி (மாற்று மருந்துகள்), உளவியலாளர், வாழ்க்கை பயிற்சியாளர், வணிக பயிற்சியாளர், NLP நிபுணர், குணப்படுத்துபவர், நிறுவனர் மற்றும் இயக்குநர் சில முக்கிய அறிகுறிகளைப் பகிர்ந்துள்ளார்.

குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனம் தேவைப்படுவதற்கான அறிகுறிகள்

குழந்தைகளுக்கு பெற்றோர்களின் கவனம் தேவைப்படும் போது, அவர்களின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

குழந்தைகள் பின்வாங்குவர்

குழந்தைகள் சாதாரணமாக வெளியில் செல்வதாக இருந்தாலும், அந்த நிலையில் இருந்து பின்வாங்குவர். அல்லது பிறரைச் சுற்றி கவலைப்படுவர். இவ்வாறு குழந்தைகள் இருப்பது எதாவதொரு காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. இது அவர்கள் பெற்றோரின் கவனத்திற்கு வர வேண்டும் என்று குழந்தைகள் நினைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Parenting Tips: குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி?

தேவையுடையவர்களாக இருப்பது

இந்த சூழ்நிலையில் குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக தேவையுடையவராக இருப்பர் அல்லது பெற்றோரிடம் ஒட்டிக் கொள்வர். இதன் மூலம் குழந்தைகள் தங்களின் மீது பெற்றோர் கவனம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பர். இவ்வாறு இருக்கையில் நீங்கள் மற்றவர்களுடன் பேசும் போது அல்லது வேறு செயல்களைச் செய்யும் போது குழந்தைகள் குறுக்கிட முயற்சி செய்யலாம்.

குழந்தைகள் பொறாமைப்படுவது

இது சாதாரண இயல்பான ஒன்றாக இருப்பினும், இதன் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்றாக, குழந்தைகள் தங்கள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்தும் வேண்டும் என நினைப்பதுடன், அவர்களை விட அதிக கவனத்தை ஈர்க்கும் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவர்.

பகல் கனவு காண்பர்

குழந்தைககள் சலிப்பாக இருந்தால் மனம் அலைந்து திரிவது வழக்கம். இதனால் வீட்டில் குழந்தைகள் மனத்தூண்டுதலைப் பெற மாட்டார்கள். இதனால், அவர்கள் அடிக்கடி வெளியில் செல்லும் பழக்கத்தைக் கையாள்வர். இந்த சமயத்தில் அவர்களுடன் பெற்றோரும் சேர்த்து நேரத்தை செலவிடுவதன் மூலம் குழந்தைகளின் மனதில் ஏற்பட்ட சலிப்பைத் தடுக்க முடியும்.

அதிக கோபமடைதல்

குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தைப் பெற, வகுப்பில் நடிப்பது, உடன்பிறந்தவர்களுடன் சண்டையிடுதல், கோபம் கொள்ளுதல் உள்ளிட்டவை நிகழும். இது உங்கள் குழந்தையின் குணாதிசயமற்றதாக இருப்பின், குழந்தை உங்களுடன் அதிக நேரம் இருக்க விரும்புகிறது என்பதைக் குறிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Twins: இரட்டைக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

Stop Crying Baby: குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோருக்கான சில உதவிக்குறிப்புகள்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்