Breastfeeding Twins: இரட்டைக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Breastfeeding Twins: இரட்டைக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

ஒரே நேரத்தில் இரட்டையர்களுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

இரட்டைக் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பால் கொடுக்கும் போது, சிறப்பாக செயல்படும் உணவு முறையை கவனிப்பர். இருப்பினும், குழந்தைகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழும். பெண்களின் மார்பகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான பால் சேமிப்புத் திறனைகளைக் கொண்டுள்ளது. இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி குழந்தைகளுக்குப் பால் கொடுக்கலாம். இவை குழந்தைகள் பால் உறிஞ்சும் முறை, மற்றும் பலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Positions: தாய்ப்பால் கொடுப்பதற்கான சரியான நிலை எது தெரியுமா.?

இரட்டைக் குழந்தைகளுக்கு பால் கிடைக்குமா?

இரட்டைக்குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பயம் எழும். எத்தனை குழந்தைகள் பெற்றிருந்தாலும், குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியம். எனவே, குழந்தைகளின் ஆதாரத்திற்கு பால் உற்பத்தியை முற்றிலும் அதிகரிக்க வேண்டும். தாய்ப்பால் ஆனது குழந்தை பிறந்த நேரம் மட்டுமல்ல, அதற்குப் பின்னும் சூழ்நிலையைப் பொறுத்து சுரக்கும். எனவே, இரண்டு அல்லதூ அதற்கு அதிகமான குழந்தைகள் பிறந்திருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் போதுமான அளவில் பால் கிடைக்க பெண்களின் உடல் உள்ளது.

இரட்டைக்குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதற்கான குறிப்புகள்

தாய்மார்கள் இரட்டைக் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு பல்வேறு குறிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Breast Milk Producing Foods: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம்

இரண்டு குழந்தைகளுக்கும் தாய்மார்கள் ஒரே நேரத்தில் உணவளிக்கலாம். இருப்பினும், குழந்தைகளில் ஒரு குழந்தையை கீழே வைத்துக் கவனிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு வைக்கும் போது, குழந்தை பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும்.

நீர்ச்சத்துடன் சாப்பிடுதல்

இரட்டைக் குழந்தைகளுக்கு அதிக அளவிலான கலோரிகள் அதாவது 330 முதல் 400 கலோரிகள் அளவைக் கொண்டுள்ளது. தாய்ப்பால் பெறும் குழந்தை இரட்டையர்களாக இருந்தால், அதனை இரட்டிப்பாக்க வேண்டும். இவ்வாறு போதுமான உணவு மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வதால் பால் சப்ளை குறையாது.

முடிந்த வரை பாலூட்டுதல்

குழந்தைகள் பிறந்த 30 முதல் 60 நிமிடங்களுக்குள் குழந்தைகளுக்குப் பாலூட்ட வேண்டும். குழந்தைகள் தயாராக இருக்கும் போது உடனடியாக பாலூட்டத் தொடங்கி விட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Problems: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள்

Image Source: Freepik

Read Next

குழந்தைகள் சரியாக பால் குடித்தால் சீக்கிரம் வளர்ச்சியடைவார்களா? இதோ உண்மை!

Disclaimer

குறிச்சொற்கள்