Doctor Verified

Breastfeeding Positions: தாய்ப்பால் கொடுப்பதற்கான சரியான நிலை எது தெரியுமா.?

  • SHARE
  • FOLLOW
Breastfeeding Positions: தாய்ப்பால் கொடுப்பதற்கான சரியான நிலை எது தெரியுமா.?


தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்களும் பிறந்த குழந்தையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். குழந்தைகளைக் குளிப்பாட்டுவது முதல் உணவூட்டுதல் வரை அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தாய்மார்கள் போராடும் முக்கியமான ஒன்று குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதாகும். தாய்ப்பால் என்பது தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில், தாய்மார்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பல்வேறு தாய்ப்பால் நிலைகள் பற்றி குருகிராமில் உள்ள சி.கே.பிர்லா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் அருணா கல்ரா அவர்களின் கருத்துக்களைக் காணலாம்.

குழந்தைகளுக்கான சிறந்த தாய்ப்பால் நிலைகள் என்னென்ன?

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது சரியான நிலையில் இருந்தால் மட்டுமே குழந்தை தாய்ப்பால் பெற முடியும். குழந்தைகளின் விருப்ப நிலைகளுக்கு ஏற்ப தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை எந்த சிக்கல்களுமின்றி தாய்ப்பால் பெறும். இதில், சிறந்த தாய்ப்பால் நிலைகளின் பட்டியலைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Breast Milk Producing Foods: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

கிராஸ் ஓவர் நிலை

இந்த கிராஸ் ஓவர் நிலையில், மார்பகத்திற்கு எதிராக தாய் கையைப் பயன்படுத்த வேண்டும். அதாவது வலது மார்பகத்திற்கு உணவளிக்கத் திட்டமிட்டால், இடது கையில் குழந்தையைப் பிடிக்க வேண்டும். இடது மார்பகத்தில் குழந்தை தாய்ப்பால் குடிப்பதாக இருந்தால், வலது கையிலிருந்து குழந்தையைப் பிடிக்க வேண்டும். இவ்வாறு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, குழந்தையின் வாய் முலைக்காம்பு அடையும் வகையில் மேல் உடலை சற்று வளைத்துக் கொடுக்கலாம்.

சாய்ந்த நிலை

சாய்ந்த நிலை என்பது குழந்தையை வயிற்றில் வைத்து முயற்சிப்பதாகும். அதாவது, குழந்தையின் தலைக்கு அருகில் இருக்கும் கையால் தாய் குழந்தையின் முதுகைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் குழந்தை தன் வாயை தானாகவே தாயின் மார்பகத்தின் முன் கொண்டு வரும். பிறகு முலைக்காம்பு வழியாக குழந்தை தாய்ப்பாலை அடையும்.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Avoid Food: தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?

கால்பந்து பிடிப்பு நிலை

கால்பந்து வைத்திருக்கும் நிலை அதாவது, குழந்தையின் கால்களை தாயின் கைகளில் ஒன்றின் கீழ் இறுக்கமாகப் பிடித்து பக்கத்தில் எதிர்நோக்கியவாறு வைத்துக் கொள்ளவும். குழந்தையின் தலைக்குக் கீழே தாய் கையை வைத்துப் பிடித்து குழந்தையின் தலைக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

பக்கவாட்டு நிலை

இந்த நிலையில் தாய் மற்றும் குழந்தை இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் வகையில் படுக்கையில் படுத்திருக்கும் போது, பக்கவாட்டின் மூலம் தாய்ப்பால் கொடுப்பதாகும். இது மிக வசதியான நிலை என்றாலும், எல்லாக்குழந்தைகளும் இந்நிலையினை விரும்புவதில்லை. குழந்தை பக்கவாட்டில் படுத்திருக்கும் போது குழந்தையின் வாய் தாயின் மார்பகங்களுக்கு அருகில் இருக்குமாறு வைக்க வேண்டும். இந்த நிலையில் படுக்கும் போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாதவாறு படுக்க வைப்பது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Problems: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள்

தொட்டில் பிடி நிலை

பெரும்பாலான தாய்மார்கள் பின்பற்றக்கூடிய தாய்ப்பால் கொடுக்கும் நிலைகளில் இதுவும் ஒன்று. இதில், குழந்தையின் முதுகிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தாய் குழந்தையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதில் குழந்தை தாயின் மார்பகத்தை எதிர்நோக்கியவாறு இருக்க வேண்டும். பின் குழந்தையின் தலையை கைகளில் மெதுவாக வைத்து குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கான வசதியான நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் போது குழந்தை தாயின் கைகளில் இருந்து நழுவ முயற்சிக்கும். இருப்பினும், தாய் குழந்தையை கைகளில் இருந்து நழுவமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பிறகு, தாய் தன்னுடைய விரல்களால் முலைக்காம்பை வெளியே கொண்டு வர மார்பகத்தைப் பிடித்து குழந்தையின் வாயை அருகில் கொண்டு செல்ல வேண்டும்.

Read Next

Breastfeeding Pain: தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகத்தில் வலி வருகிறதா? காரணம் இதுதான்

Disclaimer

குறிச்சொற்கள்