Doctor Verified

Breastfeeding Pain: தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகத்தில் வலி வருகிறதா? காரணம் இதுதான்

  • SHARE
  • FOLLOW
Breastfeeding Pain: தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகத்தில் வலி வருகிறதா? காரணம் இதுதான்


மார்பக வலி, பூஞ்சை தொற்று மற்றும் மார்பகங்களில் அடைப்பு போன்ற பல காரணங்களால் வலி ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த பிரச்சனையானது மார்பகங்களில் அதிகப்படியான பால் சுரப்பதாலோ அல்லது குழந்தைக்கு சரியாக தாய்ப்பால் கொடுக்க முடியாததாலோ வருகிறது.

இதையும் படிங்க: Growth In Children: குழந்தைகள் வளர்ச்சிக்கான உணவுப் பட்டியல் இங்கே..

ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் நூபுர் குப்தா, தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் மார்பக வலிக்கான சில காரணங்களை நம்மிடம் கூறினார். அதுகுறித்து பார்க்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பக வலி வர முக்கியக் காரணங்கள்

தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் வலிக்கான பொதுவான காரணங்களில் ஒன்று லாச்சிங் பிரச்சனையாகும். குழந்தை தவறான வழியில் பால் குடிக்கும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக மார்பகங்களில் வலி ஏற்படுகிறது. குழந்தை பால் குடிக்க வரும்போது, மார்பகக்காம்புக்கு பதிலாக, அதைச் சுற்றியுள்ள கருமையான பகுதியை மெல்லத் தொடங்குகிறது அல்லது காம்பைக் கடிக்கத் தொடங்குகிறது. அதில் சில இணைப்பு திசுக்கள் உள்ளன, இதன் காரணமாக மார்பகம் சேதமடையத் தொடங்குகிறது. இது தவிர, சில சமயங்களில் உங்கள் குழந்தை பால் எடுப்பதை விட மார்பகத்தை உறிஞ்ச முயற்சிக்கிறது, இது மார்பகத்தின் மீது தடிப்புகள் மற்றும் கடுமையான வலிக்கு வழிவகுக்கிறது.

சரியான முறையில் உணவளிக்க முயற்சிக்க வேண்டும்

அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தைக்கு சரியாக உணவளிக்க முயற்சி செய்ய வேண்டும். சரியான நிலையில் படுக்க வைத்து தலையை பிடித்து பால் குடிக்க பயிற்சி அளிக்க முயற்சிக்க வேண்டும். மார்பக காம்பை கடிக்கும் போதெல்லாம் தலையை எடுத்து மீண்டும் வைக்கவும். மார்பக சுற்றியுள்ள பகுதியில் பால் பட்டிருந்திருந்தாலும் குழந்தை அதை சுவைத்து அந்த பகுதியை கடிக்கத் தொடங்கும். எனவே மார்பகத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ளவும். இது குழந்தைக்கும் நல்லது.

பூஞ்சை தொற்று காரணமாகவும் மார்பக வலி வரக் கூடும். தொற்றுநோயை ஏற்படுத்தும் கேண்டிடா பூஞ்சை உங்கள் மார்பக காம்பு பகுதியில் பரவி இருக்கலாம். இதன்காரணமாகவும் உணவளித்த பிறகோ அல்லது அதற்கு முன்போ உங்களை வலியை உணர வைக்கலாம். இதுபோன்ற உணர்வை கண்டறியும் போது மருத்துவரை அணுகி நோய்த்தொற்றுக்கான மருந்தை பெறுவது அவசியம்.

பால் குழாய் அடைப்பு

பால் சரியாக வெளிவராலம் அடைப்பு இருந்தாலும் இந்த வழி வரலாம். அத்தகைய சூழ்நிலையில், குழந்தை பால் குடிக்க முயற்சிக்கும் போது, ​​மார்பில் இருந்து பால் எடுக்க முடியாமல், குழந்தை அதை கடிக்க முயற்சிக்கும். இதற்கான காரணத்தையும் சரிசெய்யும் வழிமுறையையும் மருத்துவரை பரிந்துரைத்து பெறுவது அவசியம்.

இதையும் படிங்க: பிள்ளைகளுக்கு உணவை சாப்பிட கற்றுக்கொடுப்பது எப்படி?

தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பக வலியை புறக்கணிக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது பல்வேறு சிக்கலுக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனை ஏற்பட்டவுடன் முறையாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். தாய், சேய் நலனில் சமரசம் என்பதே வேண்டாம்.

image source: freepik

Read Next

Breastfeeding Weight Loss: தாய்ப்பால் கொடுக்கும் போது எடையை குறைப்பது எப்படி?

Disclaimer

குறிச்சொற்கள்