Breastfeeding Weight Loss: தாய்ப்பால் கொடுக்கும் போது எடையை குறைப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Breastfeeding Weight Loss: தாய்ப்பால் கொடுக்கும் போது எடையை குறைப்பது எப்படி?


தாய்ப்பால் கொடுக்கையில் எடை அதிகரிக்க காரணம் என்ன?

தாய்ப்பால் கொடுக்கும் போதும் அதை நிறுத்திய பின்பும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இந்த சிக்கல்கள் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பின் எடை அதிகரிக்க காரணம் என்ன என்று பார்க்கலாம். தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் உடல் கலோரிகளை நிலையாக வைக்க அதிக கலோரிகள் உணவு தேவைப்படுகிறது. அதேபோல் தாய்ப்பால் கொடுக்கும் போது உடலின் கலோரிகளும் எரிக்கப்படுகிறது.

சாப்பாட்டு முறை முக்கியம்

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பின் உங்களால் உடனே சாப்பாட்டு முறையை மாற்ற முடியாது. அதேஅளவு உணவை எடுத்துக் கொள்வீர்கள் ஆனால் கலோரிகள் எரிக்கும் நிகழ்வு உடலில் குறைகிறது.

இதையும் படிங்க: பிள்ளைகளுக்கு உணவை சாப்பிட கற்றுக்கொடுப்பது எப்படி?

குழந்தைக்கு பால் கொடுப்பது தாய்க்கும் நல்லது. முக்கியமாக இதன்மூலம் உங்கள் உடலில் உள்ள அதிக கலோரிகளை குறைக்கலாம். கர்ப்ப காலத்தில் உடல் பருமனாக இருக்கும் தாய், குழந்தைக்கு பால் ஊட்டுவதால் பிற்காலத்தில் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடற்பயிற்சி செய்யலாம்

உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி மிக முக்கியமான வழிகளில் ஒன்றாகும். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் உடற்பயிற்சிகளில் பங்கேற்பது உடல் ரீதியாக சாத்தியமில்லை. ஏனென்றால் பிரசவத்திற்குப் பிறகு மன அழுத்தமும் ஓய்வும் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த மாதிரி ஓய்வு என்பது சில வாரங்களுக்கு நமது உடற்பயிற்சி முறையை தடுக்கும். எடை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு பிரதான காரணமாகும்.

உணவு சாப்பிடாமல் இருக்கக் கூடாது

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறு, உணவைத் தவிர்ப்பது அல்லது குறைவாக சாப்பிடுவது. இப்படி செய்தால் உடல் எடை குறையும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது உங்கள் இலக்குக்கு எதிரான ஒன்றாகவே அமையும். முக்கிய உணவுகளை உண்ணாமல் பட்டினி இருக்கும் போது உங்கள் உடலில் மெட்டபாலிசம் குறையும். இது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதற்கு பதிலாக உங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்து அளவை அறிந்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கலோரிகளை குறைவாகவும், ஊட்டச்சத்து நிறைவாகவும் உள்ள உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின்கள், நார்ச்சத்து அவசியம்

இந்த நேரத்தில் உங்கள் உடலுக்கு வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் போன்ற சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை, அவை ஆரோக்கியமான உணவுகளிலிருந்து எளிதாகப் பெறலாம். இனிப்புகள், சோடாக்கள் மற்றும் எண்ணெய் உணவுகள் உங்கள் உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பிரசவத்திற்குப் பிறகு உங்கள் ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்.

இதையும் படிங்க: Growth In Children: குழந்தைகள் வளர்ச்சிக்கான உணவுப் பட்டியல் இங்கே..

தூக்கம் அவசியம்

தூக்கம் என்பது நம் உடல் எடையுடன் தொடர்புடைய முக்கிய விஷயமாகும். போதுமான தூக்கம் உங்களுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு போதுமான தூக்கம் இல்லாத பெண்களை விட, போதுமான அளவு தூங்கும் பெண்களின் எடை குறைகிறது என பல ஆய்வுகள் கூறுகிறது.

image source: freepik

Read Next

Importance Of Breastfeeding: தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், பிள்ளைக்கும் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்