Sat Sep 12, 2026 | 02:18 AM IST

Lower Back Pain Causes: கீழ் முதுகு வலி ஏற்பட இதெல்லாம் தான் காரணமாம். உஷார் மக்களே

Lower Back Pain Reasons In Tamil: கீழ் முதுகில் வலி ஏற்படுவது சில நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. பொதுவாக இது தானாகவே குணமாகலாம். ஆனால் சில சமயங்களில் இந்த பிரச்சனை தீவிரமானால் அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

கீழ் முதுகு வலி என்பது வாழ்வின் ஒரு கட்டத்தில் அனைவருக்கும் ஏற்படும் வலியாகும். இது முற்றிலும் இயல்பான நிலையாகும். இதனால் முதுகின் இடுப்பு பகுதியில் வலி, விறைப்பு போன்றவை ஏற்படலாம். இந்த பகுதி விலா எலும்புகளுக்கு கீழ் மற்றும் இடுப்பு பகுதிக்கு மேல் அமைந்துள்ளது. லேசான அறிகுறிகள் முதல் கடினமான அறிகுறிகளாகத் தோன்றும் இந்த முதுகு வலியால், அன்றாட பணிகள் செய்வதே சிரமமாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Knee Osteoarthritis: கீல்வாதம் பிரச்சனை இருப்பவர்கள் இதை செய்து பாருங்கள்!

கீழ் முதுகுவலிக்கான காரணங்கள்

கீழ் முதுகில் தொடர்ந்து கடுமையான வலி ஏற்பட்டால், இதன் பின்னால் உள்ள காரணத்தை அறிந்து கொள்வது முக்கியமாகும். இதில், முதுகு வலிக்கான சில முக்கிய காரணங்கள் குறித்து காணலாம்.

எலும்பு முறிவு

விபத்து, காயம், வீழ்ச்சி, எலும்பு காயம், முறிவு அல்லது அதிகப்படியான இயக்கம் போன்றவை கீழ் முதுகு வலியை உண்டாக்கலாம். இது ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது ஸ்போண்டிலோலிசிஸ் போன்ற நோய்களில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது மேலும் வைட்டமின் அல்லது கால்சியம் குறைபாட்டின் காரணமாக அதிகரிக்கிறது.

கீல்வாதம்

இது மூட்டுக்களில் ஏற்படும் ஆபத்தான அழற்சி ஆகும். இது முதுகு வலிக்கு மிகவும் பொதுவான காரணமாகிறது. முதுகுத் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள இடத்தில் சுருக்கங்கள் உண்டாவது ஸ்பைனல் ஸ்டெனோசிஸூக்கு வழிவகுக்கிறது. இது முதுகெலும்பு கீல்வாதத்தால் ஏற்படுகிறது. பொதுவாக 50 வயதுக்கும் அதிகமானோர் கீல்வாதத்தால் பாதிக்கப்படுவர்.

சுளுக்கு

பொதுவாக தசைக்காயத்தால் ஏற்படுவதே கீழ் முதுகு வலி ஆகும். குறிப்பாக திடீரென வளைத்தல் அல்லது முறுக்குதல், கனமான பொருள்களைத் தூக்குதல், மோசமான தோரணை போன்றவற்றால் தசை நார்கள் அல்லது முதுகு தசைகள் கிழிந்து விடும். மேலும் முதுகில் ஏற்படும் நிலையான அழுத்தம் கடுமையான வலியை உண்டாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Numbness in Legs: உங்க கை மற்றும் கால் அடிக்கடி மரத்து போகிறதா? அப்போ இதுதான் காரணம்!

மற்ற காரணங்கள்

  • முதுகெலும்பு ஸ்டெனோசிஸ் என்ற முதுகுத்தண்டு வடம் குறுகுவது அல்லது ஸ்கோலியோசிஸ் என்ற முதுகுத்தண்டி வளைவு போன்றவற்றால் முதுகுத் தண்டு சுருக்கப்பட்டு நாள்பட்ட முதுகுவலியை உண்டாக்கலாம்.
  • முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள எலும்புகளை டிஸ்க் ஒன்று ஆதரிக்கிறது. சில நேரங்களில் இந்த எலும்புகள் உடைந்து குடலிறக்க வட்டு பிரச்சனையை உண்டாக்கலாம்.
  • முதுகுத்தண்டில் கட்டி, புற்றுநோய், தொற்று, சிறுநீரக நோய், அழற்சி நோய், மன அழுத்தம் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

இவை அனைத்தும் கீழ் முதுகு வலிக்கான பொதுவான காரணங்களாக இருக்கலாம். எனினும் இதில் சிறிய அளவு வலி ஏற்பட்டாலும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: காலை எழுந்ததும் கடுமையான வலியா… ஜாக்கிரதை இந்த 5 நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!

Image Source: Freepik

Read Next

Cotton Candy: பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?.. ஆய்வில் கிடைத்த பகீர் தகவல்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content