Sat Sep 12, 2026 | 02:48 AM IST

Cotton Candy: பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?.. ஆய்வில் கிடைத்த பகீர் தகவல்!

Cotton candy side effects in Tamil: காலம் காலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சில இனிப்புவகைகளில் ஒன்று பஞ்சு மிட்டாய். நாம் இன்றும் மணி சத்தம் கேட்டால் வீட்டிலிருந்து வெளியிட்டில் வந்து பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஏனென்றால், அதன் சுவையை போலவே அதன் மணி சத்தமும் அவ்வளவு பிரபலம்.

கோயில் திருவிழா, பொருட்காட்சி, சந்தை என அனைத்து இடங்களிலும் நம்மை எளிமையாக கவரும். ஆனால், பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மைதான். சமீபத்தில், சென்னை கடற்கரை மற்றும் பிற பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சேகரித்த பஞ்சு மிட்டாய் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம் : உஷார்!! ரோடமைன் பி-யைப் பஞ்சு மிட்டாயில் மட்டுமல்ல இவற்றிலும் கலக்குறாங்க!

அதாவது, பல வண்ணங்களில் பஞ்சு மிட்டாய் தயாரிக்க அகில் ரோடமைன் பி (Rhodaminbe-B) என்ற செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுகிறது. இவை, கேன்சரை உண்டாக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் அல்ல, புதுவையிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதித்துள்ளார்.

ரோடமைன் பி என்றால் என்ன?

ரோடமைன் பி, பொதுவாக ஜவுளிகளுக்கு சாயமாகப் பயன்படுத்தப்படும் இரசாயனம். இது பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தை வழங்கும். இவை பெரும்பாலும், நீர் அமைப்புகளில் உள்ள மாசுபடுத்திகளைக் கண்டறியவும், காகிதம், தோல் தொழில்களில் களைக்கொல்லியாக பயன்படுத்தப்படும். ரோடமைன் பி, தண்ணீரில் கரைக்கப்படும் போது, ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கிறது. பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்க ரோடமைன் பி பல உணவு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Panju Mittai: பஞ்சு மிட்டாய்க்கு டாட்டா சொன்ன தமிழக அரசு.! அதிரடி உத்தரவு..

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 பிரிவு 3(1) (zX) பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) & (xi) மற்றும் பிரிவு 26(1) (2) (i)(ii) &(v)-யின்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-யின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த பதிவும் உதவலாம் : Bronze Utensils: வெண்கல பாத்திரத்தில் சமைத்து சாப்பிடவதால் கிடைக்கும் நன்மைகள்!

மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pic Courtesy: pexels

Read Next

Bad Breath: காலையில் எழுந்தவுடன் வாயில் பயங்கரமா கப்பு அடிக்குதா? கவனம் இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content