மக்களே உஷார்! FDA-ஆல் தடை செய்யப்பட்ட இந்த உணவுகளை சாப்பிட்டா ஆபத்து உங்களுக்குத்தான்

What foods have red dye 3 in them: சிவப்பு சாயம் எண்.3-ஐப் பயன்படுத்தி சில உணவுகள் மற்றும் பானங்கள் தயார் செய்யப்படுகிறது. தற்போது இந்த வகை உணவுகள் மற்றும் பானங்களை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடை செய்துள்ளது. இதில் சிவப்பு சாயம் எண்.3 கொண்ட தடை செய்யப்பட்ட உணவுகள், பானங்களையும், எதனால் இது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மக்களே உஷார்! FDA-ஆல் தடை செய்யப்பட்ட இந்த உணவுகளை சாப்பிட்டா ஆபத்து உங்களுக்குத்தான்

What foods and drinks have red dye 3 and fda ban these foods due to this risk: இன்று பலரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருள்கள், பானங்கள், தின்பண்டங்கள் மீதே அதீத நாட்டம் கொண்டுள்ளனர். ஆனால் இது போன்ற சில உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் இந்த வகை உணவுகள் மற்றும் பானங்கள் சில இரசாயனங்கள், சாயங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி தயார் செய்யப்படலாம். இவை உடல் ஆரோக்கியத்திற்குப் பலதரப்பட்ட பிரச்சனைகளைத் தருகிறது.

தடை செய்யப்பட்ட சிவப்பு சாயம்

சிவப்பு சாயம் எண்.3-ஐப் பயன்படுத்தி பல்வேறு வகையான உணவுகள், பானங்கள் போன்றவை தயார் செய்யப்படுகிறது. இது ஒரு பிரகாசமான செர்ரியை உருவாக்கும் செயற்கை உணவு வண்ணமாகும். ஆனால் இது புற்றுநோய் தொடர்பான பிரச்சனைகளை உருவாக்கலாம். சாக்லேட் வகைகள், தானியங்கள், பழ காக்டெய்ல்களில் உள்ள செர்ரிகள் மற்றும் ஸ்ட்ராபெரி-சுவை கொண்ட மில்க் ஷேக்குகள் போன்ற பல்வேறு வகையான உணவுகளில் இந்த சாயம் பயன்படுத்தப்படுகிறது. பெரிய உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் நூற்றுக்கணக்கான பொருட்கள் உட்பட, கிட்டத்தட்ட 10000 உணவுப்பொருள்கள் சாயத்துடன் ஏற்றப்பட்டுள்ளது என CSPI கூறுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Liquid Nitrogen Effects: வயிற்றில் ஓட்டையை ஏற்படுத்தும் திரவ நைட்ரஜன்! இதெல்லாம் நீங்க கட்டாயம் தவிர்க்கணும்

FDA-ன் மனித உணவுகளுக்கான துணை இயக்குநர் ஜிம் ஜோன்ஸ் அவர்கள், “மனிதன் அல்லது விலங்குகளில் புற்றுநோயை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டால், உணவு அல்லது வண்ண சேர்க்கைக்கு FDA அங்கீகாரம் அளிக்க முடியாது” என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து NBC செய்திக்கு ஜோன்ஸ் குறிப்பிட்டதாவது ஆண் எலிகளில் அதிக அளவிலான FD&C Red No. 3க்கு வெளிப்படும் ஆய்வக அறிக்கையில் புற்றுநோய் இருப்பதாக சான்றுகளில் காட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் பொது நலனுக்கான அறிவியல் மையம் (CSPI) தாக்கல் செய்த உணவு மற்றும் பானங்களில் சிவப்பு சாயம் எண். 3 ஐப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மனு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்தே, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து CSPI-ன் தலைவர் தலைவர் டாக்டர் பீட்டர் லூரி அவர்கள் “நீண்ட காலமாக, ரெட் 3 லிப்ஸ்டிக்கில் பயன்படுத்துவதற்கு சட்டவிரோதமானது, ஆனால் குழந்தைகளுக்கு மிட்டாய் வடிவில் உணவளிப்பது முற்றிலும் சட்டபூர்வமானது” என்று கூறியுள்ளார்.

சிவப்பு சாயம் எண் 3 என்றால் என்ன? (What is red dye no.3)

சிவப்பு எண்.3 ஆனது பெட்ரோலியத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதாகும். இது 1907 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டது. பல தசாப்தங்களாக, FDA இந்த சாயத்தை தடை செய்வதில் ஈடுபட்டு வந்தாலும், பல்வேறு ஆய்வுகளில் ஆண் எலிகளில் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், உணவில் சேர்க்கப்படும் இந்த செயற்கை நிறங்கள் குழந்தைகளின் நடத்தையை பாதிக்குமா என்ற கவலையும் எழுந்து வருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட உணவுகள் பட்டியல் இதோ!

2011 ஆம் ஆண்டில் FDA ஆனது குழந்தைகளில் செயற்கை சாயங்கள் மற்றும் அதிவேகத்தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான சாத்தியமான தொடர்பை மதிப்பாய்வு செய்தது. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியானதாகக் கூறப்படுகிறது. FDA இப்போது அதன் ஒப்புதலைத் திரும்பப் பெற்றாலும், நாடு முழுவதும் அதன் பயன்பாட்டை நிறுத்துகிறது. 2023 ஆம் ஆண்டில் சிவப்பு எண்.3ஐத் தடை செய்த முதல் மாநிலம் கலிபோர்னியா ஆகும். இதற்கு சாத்தியமான உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய பல உணவு சேர்க்கைகளே ஆகும்.

சிவப்பு எண் 3 கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள்

  • பழ பானங்கள், வண்ண பானங்கள், காக்டெய்ல்ஸ் அல்லது சோடா பானங்கள்
  • கேக் மற்றும் கப் கேக்குகள்
  • மார்ஷ்மெல்லோஸ் மற்றும் கேண்டி கார்ன்
  • சுவையான புட்டுகள்
  • சில புரோட்டீன் ஷேக்குகள்
  • சில பன்றி இறைச்சி Bits and Sausages

கூடுதலாக, Drugs.com இன் படி வலி நிவாரணி மருந்தான அசெட்டமினோஃபென், fluoxetine என்ற மன அழுத்த எதிர்ப்பு மருந்து, நெஞ்செரிச்சலுக்கான ஆன்டோமெபிரசோல் மற்றும் இன்னும் சில மருந்துகளும் சிவப்பு எண் 3 சாயம் கொண்டதாகும்.

கவனிக்க வேண்டியவை

இது போன்ற உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் பல்வேறு செயற்கை சாயங்களுக்கு மாற்றாக, இயற்கை மாற்றுகளைத் தேர்வு செய்யலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு செயற்கை உணவு வண்ணங்களின் பக்கவிளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், லேபிள்களில் சிவப்பு சாயம் எண். 3 பட்டியலைச் சரிபார்க்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Panju Mittai: பஞ்சு மிட்டாய்க்கு டாட்டா சொன்ன தமிழக அரசு.! அதிரடி உத்தரவு..

Image Source: Freepik

Read Next

நிமோனியா தடுப்பூசி HMPV வைரஸின் அபாயத்தையும் குறைக்குமா.? மருத்துவரின் கருத்து என்ன.?

Disclaimer