Is Liquid Nitrogen Harmful To Health: சமீபகாலமாக திரவ நைட்ரஜன் குறித்த சில பாதகமான விளைவுகள் குறித்து வெளியாகி வருகிறது. ஐஸ்கிரீம்கள், காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கட்டுகள் என பல உணவுப்பொருள்கள் திரவ நைட்ரஜன் கலந்து தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இது குறித்து விளைவுகள் தெரியாமல் இதனை எடுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.
திரவ நைட்ரஜன் என்றால் என்ன?
திரவ நைட்ரஜன் என்பது பூஜ்ஜிய வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் உணவைப் பதப்படுத்த, பேக் செய்ய உபயோகப்படுத்தப்படும் ஒரு இரசாயனம் ஆகும். இது உணவின் தரம் மற்றும் ஆயுளை மேம்படுத்துவதற்காக லண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இந்த மிகக்குறைவான வெப்பநிலையின் காரணமாகவே, உணவுகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க இதனைப் பயன்படுத்துகின்றனர்.
அதாவது, நைட்ரஜனின் அளவு ஆவியாகும் போது 700 மடங்காக விரிவடைகிறது. இது உணவுப்பொதியில் உள்ள ஆக்ஸிஜனை இடமாற்றம் செய்து புதியதாகவும், கெட்டுப்போகாமலும் வைத்திருக்க உதவுகிறது. அதே சமயம், இந்த மிகக்குறைவான வெப்பநிலையை உடலில் எடுத்துக்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த திரவ நைட்ரஜன் உடலின் செல்களை உறையச் செய்து, ஆவியாகக் கூடிய திரவமாக மாறுகிறது. இதனால் உடலின் ஓரிடத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் வெளியேற்றப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: AI in Surgery: அறுவை சிகிச்சையில் AI-ன் பங்கு! ஆராய்ச்சியாளர்கள் தரும் விளக்கம்
நேரடியாக சமைப்பதைத் தவிர்ப்பது
உணவை பதப்படுத்துவதற்கு இந்த திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இந்த உணவை உடனடியாக சமைக்கக் கூடாது. சிறிது நேரத்திற்குப் பிறகு, உயர் வெப்பநிலையில் வைத்தே சமைக்க வேண்டும். எனவே, திரவ நைட்ரஜனில் வைக்கப்பட்ட உணவை ஒருபோதும் நேரடியாக சமைக்கக் கூடாது இது பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம்.
திரவ நைட்ரஜன் எவ்வாறு உடலைப் பாதிக்கிறது?
வெளிநாடுகளில் இந்த திரவ நைட்ரஜன் உணவுகள் தொடர்பான விழிப்புணர்வு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இதற்கான விழிப்புணர்வு குறைவே. இது எவ்வாறு உடல் செல்களைப் பாதிக்கிறது தெரியுமா? உடலிலிருந்து உயிர் போகும் சமயத்தில் உடலில் உள்ள செல்கள் உறைந்து போகும். அதே போலவே, திரவ நைட்ரஜன் உணவுகளை எடுத்துக் கொள்வதால் உயிருடன் இருக்கும் போதே செல்கள் உறைந்து போகும். இதனால், வயிறு மற்றும் குடல் பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் வயிற்றில் துளைகளை உருவாக்கும்.
சமீபத்தில், “பெங்களூருவில் 12-வயது சிறுமி ஒருவர் திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்டு அதிகமாக வயிற்று வலி வந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு சிறுமியை பரிசோதித்ததில் வயிற்றில் ஒரு துளை இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த துளை 4×5 செ.மீ அளவில் இருந்ததாகவும், துளையுடன் இருந்த பகுதியை ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி மூலம் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும்” என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்திலும் சமீபத்தில் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உணவுகளில் திரவ நைட்ரஜன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம்: Raw Onion For BP: வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமா?
திரவ நைட்ரஜனின் விளைவுகள்
திரவ நைட்ரஜனைப் பயன்படுத்துவது உடலில் பின்வரும் விளைவுகளை உண்டாக்குகிறது.
- நாக்கு, உதடுகள், தொண்டை, நுரையீரல் மற்றும் வயிறு போன்ற அனைத்து உறுப்புகளையும் சேதப்படுத்துகிறது.
- இது உடலில் திசுக்களை எரிப்பது அல்லது காயத்தை ஏற்படுத்தலாம்
- நுரையீரலில் கார்பன்-டை-ஆக்ஸைடை உற்பத்தி செய்யலாம்.
- இந்த திரவ நைட்ரஜன் கலந்த உணவை உட்கொள்வது ஒருவருக்கு சுயநினைவு இழத்தல் மற்றும் சில சமயங்களில் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

எனவே ஒருவர் திரவ நைட்ரஜன் உணவுகள் எடுத்துக் கொள்வதற்கு முன் இதன் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும். இதன் மூலம் மேற்கூறிய பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: டெங்குவால் இந்த தீவிர பாதிப்பா? எத்தனை நாள் வரை டெங்கு காய்ச்சல் இருக்கும்? மருத்துவர் தரும் விளக்கம்
Image Source: Freepik