$
Smoke Biscuit, Icecream, Paan: கடந்த சில நாட்களாக ஸ்மோக் பிஸ்கட் குறித்த சில தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளாக ஸ்மாக் பிஸ்கட், ஸ்மோக் பான், ஸ்மோக் ஐஸ்கிரீம் போன்ற உணவு முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவிழாக்கள், மால்கள், ஹோட்டல்கள், பிரபல ஷாப்பிங் தளங்கள் போன்ற இடங்களில் ஸ்மோக் வகை உணவுகளுக்கு என்றே தனி கடைகள் இருப்பதை நாம் கண்டிருப்போம்.
சரி, திடீரென ஸ்மோக் வகை பிஸ்கட்கள் குறித்த பேச காரணம் என்ன என்பது குறித்து முதலில் பார்க்கலாம். கர்நாடகாவை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு அவரது குடும்பத்தினர் ஸ்மோக் பிஸ்கட் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அதை சாப்பிட்ட அந்த சிறுவன் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டு துடிதுடித்தான். இந்த காணொலி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பார்ப்பவர்களை திடுக்கிட வைத்தது.
ஸ்மோக் பிஸ்கட் குறித்து பரவிய வீடியோ
அந்த காணொலியில் இருந்த காட்சி உண்மைதான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆசைப்படுதே என்று ஜங்க் ஃபுட் போன்ற உணவுகளை ஆவலோடு வாங்கிக் கொடுக்கிறார்கள். கூடுதலாக அவர்களை வயதையும் பொருட்படுத்தாமல் ஸ்மோக் பிஸ்கட் போன்ற உணவை பார்க்க கவர்ச்சியாக இருக்கிறதே என வாங்கிக் கொடுக்கிறார்கள்.
உயிருக்கே ஆபத்தாகும் smoke biscuit, smoke icecream, smoke pan
பிஸ்கட், ஐஸ்க்ரீம், பானில் ஸ்மோக் வருவது எப்படி என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். திரவ நைட்ரோஜன் என்ற மூலம் வழியாக தான் இதில் புகை வருகிறது. இல்லையே, இதை என் குழந்தை சாப்பிட்டுள்ளதே ஒன்றும் ஆகவில்லையே என நினைத்தால்.
அது தவறு. எல்லா நேரமும் அப்படி நடக்காது. திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
திரவ நைட்ரோஜன் என்றால் என்ன?
0 டிகிரி செல்சியஸ் குறையும் போது அது ஐஸ் க்யூப், 0-100 டிகிரி வரை இருக்கும் போது அது நீராக இருக்கும். 100 டிகிரி தாண்டும் போது அது ஆவியாக மாறுகிறது. சரி, திரவ நைட்ரஜனின் வெப்ப நிலை என்ன தெரியுமா?

திரவ நைட்ரோஜனானது -195.8 டிகிரி செல்சியஸ் ஆகும். இது பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் என்பதற்காக ஸ்மாக் பிஸ்கட், ஐஸ்க்ரீம், பான் உள்ளிட்டவைகளில் சேர்க்கப்படுகிறது.
திரவ நைட்ரோஜன் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்
மைனஸ் 195.8 டிகிரி உள்ள இந்த திரவ நைட்ரோஜனை உங்கள் கையில் சிறிது நேரம் வைத்தால் அந்த இடமே உறைந்து கருகிவிடும். இதுகுறித்த ஒரு யூடியூப் வீடியோவில், திரவ நைட்ரோஜனை ஒரு இட்லியில் ஊற்றி அதை சுத்தியலால் உடைத்தால், இட்லி சுக்குநூறாக உடைந்துவிடும். அந்தளவிற்கு ஒரு பொருளை வேகமாக உறைய வைக்கக் கூடிய தன்மை கொண்டது.
ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் ஐஸ்கிரீம், ஸ்மோக் பான் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தா?
திரவ நைட்ரோஜனானது வெளியில் இருக்கும் வெப்பநிலைக்கு ஏற்ப மாற புகையாக மாறும் என கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ஸ்மோக் பிஸ்கட்டை விழுங்கும் போது அது உங்கள் வயிற்றை புகையால் நிரப்பும்.

இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படத் தொடங்கும். அந்த அளவிற்கு இது ஆபத்தானது ஆகும். இது ஒரு கெமிக்கல் சப்ஸ்டன்ஸ் ஆகும். உணவு முறை மாறிவரும் சமீபகாலமாக தான் இது உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திரவ நைட்ரோஜன் எதற்கு பயன்படுத்தப்படும்?
ஒருசில இடங்களில் உணவு கெடாமல் பாதுகாப்பாக இருக்க இந்த திரவ நைட்ரோஜன் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இப்போது இது நேரடி உணவாகவே மாறி இருக்கிறது. திரவ நைட்ரோஜன் புகையாக மாறாமல் நேரடியாக வயிற்றுக்குள் செல்லும்பட்சத்தில் இது குடலில் ஓட்டையே போடும் நிலையை ஏற்படுத்தும்.
ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பான், ஸ்மோக் பான் குறித்து உணவு பாதுகாப்புத் துறை
குழந்தைகளுக்கு திரவ நைட்ரோஜன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை கொடுக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து விடுதிகளில் நைட்ரோஜன் கலந்த உணவை விற்கக் கூடாது என்றும், திரவ நைட்ரோஜன் உணவு பொருட்கள் சென்னையில் விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சென்னை உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஸ்மோக் பிஸ்கட் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
அதேபோல் குழந்தைகளுக்கு திரவ நைட்ரோஜன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை கொடுக்கும்பட்சத்தில் அது அவர்கள் கண் பார்வை, பேசும் தன்மை உள்ளிட்டவை பறிபோகும் வாய்ப்புகள் உள்ளது என்றும் உயிரிழப்பே நேரலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியாது. அவர்கள் கவர்ச்சியாக இருக்கும் அனைத்து உணவுகளுக்கு ஆசைப்படத் தான் செய்வார்கள். பெற்றோர்களும், பெரியவர்களும் தான் அவர்களுக்கு புரியவைத்து அவர்களது எண்ணத்தை அதில் இருந்து திசை திருப்ப வேண்டும்.
Pic Courtesy: FreePik