கோடை காலத்தின் சூடான இரவுகளைச் சமாளிக்க ஒரு குளிர்ச்சியான பான் ஷாட் குடிப்பது, உடலுக்கு மற்றும் மனதிற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. பான் என்பது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு மூலிகை கலவையாகும். பான் ஷாட் என்பது பாரம்பரிய பீடாவில் கலக்கப்படும் பொருட்களை நவீன முறையில் சாறு வடிவில் குடிக்கும் ஒரு புதிய முறையாகும்.
பான் ஷாட் என்பது என்ன?
பான் ஷாட் என்பது வெற்றிலை, குல்கந்த், ஏலக்காய், நெல்லிக்காய், தேன், துளசி, புதினா இலைகள் மற்றும் பிற இயற்கை மூலிகைகளை சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு குளிர்ந்த மற்றும் இனிப்பு பானம். இது உடலுக்கு ஆரோக்கியமான பல நன்மைகளை வழங்கும்.
How to make paan shots for summer night
கோடை கால இரவில் பான் ஷாட் குடிப்பதன் நன்மைகள்:
உடல் வெப்பத்தைக் குறைக்கும்:
கோடை கால இரவுகளில் உடல் அதீத வெப்பத்தால் பாதிக்கப்படும். எனவே இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு ஒரு பான் ஷாட் குடிப்பதன் மூலம் உடலுக்குள் இயற்கையான குளிர்ச்சி கிடைக்கும். ஏனெனில் பான் ஷாட்டில் உள்ள குல்கந்த் உடல் சூட்டை குறைக்க உதவுகிறது. அதேசமயம் நெல்லிக்காய் உடலில் நீர்ச்சத்து அளவை அதிகரிக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்:
இரவில் உணவுக்குப் பிறகு பான் ஷாட் குடிப்பது செரிமான முறையை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் வெற்றிலையில் (probiotics) உள்ள நுண்ணுயிரிகள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஏலக்காய் மற்றும் சுக்கு பயன்படுத்துவது வாயுத் நொந்தரவில் இருந்து உங்களை காக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றத்தை நீக்கும்:
தூக்கி எழுந்ததும் காலையில் வாயில் துர்நாற்றம் வீசும் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், தினமும் ஒரு பான் ஷாட் எடுத்துக்கொள்வது சிறந்தது. ஏனெனில்
பான் ஷாட் குடித்தவுடன் வாயில் ஒரு இனிப்பு மற்றும் நறுமணமிக்க உணர்வு கிடைக்கும். இதில் உள்ள ஏலக்காய், புதினா, மற்றும் குல்கந்த் வாயில் கெட்ட நாற்றத்தை அகற்றும்.
Benefits-Of-Eating-Betel-Leaves-With-Fennel-Seeds-1740246491771.jpg
மனஅழுத்தத்தைக் குறைக்கும்:
குளுகுளுவான பான் ஷாட் குடிப்பது மனதிற்கு சுகம் அளிக்கிறது. வெற்றிலையில் உள்ள இயற்கை கலவைகள், மனஅழுத்தத்தைக் குறைத்து தளர்வான உணர்வை ஏற்படுத்துகின்றன. இது தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
இனிமையான உறக்கத்திற்கு ஏற்றது:
கோடையில் சிலர் வெப்பத்தால் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள். பான் ஷாட்டில் உள்ள இயற்கை மூலிகைகள் நரம்புகளை ஓய்வூட்டும். இது ஒரு இயற்கையான தூக்கமருந்தாக செயல்படும்.
எப்படி பான் ஷாட் தயாரிப்பது?
நீங்களே வீட்டில் பான் ஷாட் தயாரிக்க விரும்பினால், இதைப் பின்பற்றலாம்:
தேவையான பொருட்கள்:
வெற்றிலை - 2
குல்கந்த் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெல்லிக்காய் சாறு - 2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
தண்ணீர் அல்லது பால் - 1/2 கப்
ஐஸ் கட்டிகள் - 4-5
செய்முறை:
அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
பின் அதை வடிகட்டி ஒரு கண்ணாடி கிளாஸில் ஊற்றவும்.
மேலே ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறலாம்.
Image Source: Freepik
Read Next
Guntur Chicken Masala: ஒரு முறை சிக்கனை இப்படி செய்து கொடுங்க... அடிக்கடி செய்ய சொல்லி கேப்பாங்க!
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version