மனித வாழ்வில் உணவு முறை என்பது இன்றியமையாத ஒன்றாகும். மாறிவரும் கலாச்சாரத்தில் உணவுகள் என்பதே முற்றிலும் மாறிவருகிறது. இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரங்கள் மற்றும் உணவு பாரம்பரியங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
உணவே மருந்து என்ற சொல்லுக்கேற்ப தான் உணவு முறை என்பது இருந்தது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் உணவு உண்பதால் தான் மருந்து சாப்பிட வேண்டிய தேவை இருக்கிறது என்ற நிலை வந்துவிட்டது. ஆரோக்கியமான உணவின் விலை அரிதாகவும், ஆரோக்கியமற்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் சுமார் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்டது.
அதிகம் படித்தவை: Thiyanam: உங்கள் மனதையும் உடலையும் உடனடியாக அமைதிப்படுத்த உதவும் 5 தியானங்கள்!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட உணவுகள் பட்டியல்
எது எப்படியோ மனிதர்கள் மகிழ்ச்சியோடு உணவுகளை பாகுபாடின்றி தேடித்தேடி வாங்கி சாப்பிட்டாலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) குறிப்பிட்ட சில உணவுகளை இந்தியாவில் முற்றிலும் தடை செய்திருக்கிறது. அதன்படி இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள உணவுகள் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
சீனா பால் மற்றும் பால் பொருட்கள்
இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் சீன பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் அடிக்கடி கெட்டுப் போகும் பிரச்சனை வந்ததால் அதில் மெலாமைன் என்ற நச்சு கெமிக்கல் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. எனவே சீன பால் மற்றும் சீன பால் சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்யவும் விற்பனை செய்வதற்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
செயற்கையாக பழுக்க வைக்கும் பழங்கள்
பழங்களை செயற்கையாக வைக்க கால்சியம் கார்பைடு மற்றும் எத்திலீன் வாயு போன்ற இரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது உடல்நல ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த செயல்முறை மற்றும் இந்த வகை உணவு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
பொட்டாசியம் புரோமேட்
பிரெட் தயாரிக்க மாவு பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த மாவின் நெகிழ்வு தன்மையை கூட்டுவதற்கும் அதன் பருமனை அதிகரிப்பதற்கும் பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது புற்றுநோய் பண்புகளை கொண்டிருப்பதால் இதன் பயன்பாடு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஃபோ கிராஸ்
ஃபோ கிராஸ் என்பது வாத்துகளின் கல்லீரலை பெரிதாக்குவதற்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்படும் ஒரு தீனியாகும். இது மனிதநேயமற்ற கொடூரமான செயல் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த பொருள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
சாஸாஃபிராஸ் எண்ணெய்
சாஸாஃபிராஸ் எண்ணெய் இந்தியாவில் 2003ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் குறித்து பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. காரணம், இந்த எண்ணெய் இந்தியாவில் தடை செய்யப்பட்டு 11 ஆண்டுகளாகிவிட்டது.
இந்த எண்ணெயில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட ஈருசிசிக் அமில அளவுகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் இது இதய நோய் உட்பட பல விதமான பிரச்சனைகளை மனித உடலில் ஏற்படுத்தலாம் என தடை செய்யப்பட்டிருக்கிறது.
சீன பூண்டு
சீன பூண்டுகள் இந்தியாவில் 2019ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பூண்டுகளில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்ததால் தடை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: No expiry date foods: இந்த உணவுகளுக்கு காலாவதி தேதி கிடையாது.. உங்களுக்கு தெரியுமா?
முயல் கறி
இந்தியாவில் முயல் கறி தடை செய்யப்பட்டிருக்கிறது. விலங்குகள் நலன் கருதியும் மதம் சார்ந்த காரணங்களுக்காகவும் முயல் இறைச்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
pic courtesy: freepik