இட்லி தயாரிப்பில் கேன்சரை உண்டாக்கும் பிளாஸ்டிக்! கர்நாடகத்தில் அதிரடி நடவடிக்கை

கர்நாடக சுகாதாரத்துறை கர்நாடக மாநிலத்தில் பல்வேறு ஹோட்டல்களில் இட்லி தயாரிப்பிற்கு பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. இது குறித்து வெளிவந்த அறிக்கை தரும் தகவல்களையும், பிளாஸ்டிக் தாள்கள் தரும் தீமைகள் குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இட்லி தயாரிப்பில் கேன்சரை உண்டாக்கும் பிளாஸ்டிக்! கர்நாடகத்தில் அதிரடி நடவடிக்கை


Karnataka Health Department bans use of cancer-causing plastic in idly: அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் நம் உடலுக்குப் பாதுகாப்பானதா என்பதை யோசித்திருக்கிறீர்களா? நாம் பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளில் பாதுகாப்பான பொருள்களை சேர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் உணவுகள் உண்மையில் பாதுகாப்பானதா என்பதை அறிவது அவசியமாகும். சமீப காலமாகவே, ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் பல்வேறு உடல் அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், குறிப்பிட்ட பொருள்கள் தடை செய்யப்பட்டும் வருகிறது.

அவ்வாறு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வியாழக்கிழமை அன்று, மாநிலம் முழுவதும் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 54 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின் போது, அடையாளம் காணப்பட்ட இந்த நடைமுறையில், பிளாஸ்டிக்குடன் தொடர்புடைய புற்றுநோய் அபாயங்கள் காரணமாக ஆபத்தானதாகக் கூறப்பட்டது. இது குறித்த விரிவான தகவல்களை இதில் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இனி 16 வயசு ஆச்சினாதான் எல்லாம்.. அரசின் அதிரடி அறிவிப்பு..

மாநிலம் முழுவதும் ஆய்வு

கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அவர்கள் கூறியுள்ளதாவது, “கர்நாடகாவில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் இருந்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறை 250க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரிக்கப்பட்டது. இந்த மாதிரிகள் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்குவதை சரிபார்ப்பதற்காக சேகரிக்கப்பட்டதாகும். இதில் பாதுகாப்பான மற்றும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி இட்லிகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “பொதுவாக இட்லியை வேகவைக்கும் போது பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது அனுமதிக்கப்படவில்லை. கடந்த காலத்தில் பருத்தி துணி அல்லது வாழை இலைகளே இட்லியை வேகவைக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது சில நிறுவனங்கள் பிளாஸ்டிக்கிற்கு மாறிவிட்டது. இந்த பிளாஸ்டிக்குகள் உணவில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடக்கூடும்” என்று அவர் கூறியுள்ளார். சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் பயன்பாடு, குறிப்பாக வேகவைக்கும் செயல்பாட்டில், கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

பிளாஸ்டிக் என்பது உணவில் கசியும் ஒரு புற்றுநோயை உண்டாக்கும் பொருளாகும். இதன் நுகர்வு பாதுகாப்பற்றதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அபராதம் விதித்து, இந்த நடைமுறை நிறுத்தப்படுவதை உறுதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: முதன்முதலாக சென்னையில் தொடங்கப்பட்ட நீரிழிவு பயோபேங்க்! இது ஏன் முக்கியம் தெரியுமா?

நச்சு இரசாயனங்கள்

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டதாவது, ”உணவு தயாரிப்பில் பிளாஸ்டிக் ஒரு கடுமையான பொது சுகாதார அபாயமாகும். இட்லி தயாரிப்பில் இதைப் பயன்படுத்துப்போது, பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு இரசாயனங்கள் உணவில் கலப்பதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல்நல அபாயங்கள் அதிகரிக்கிறது. அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்தி வாழை இலைகள் அல்லது துருப்பிடிக்காத எஃகு தகடுகள் போன்ற பாதுகாப்பான மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கடுமையான தடை

மீறுபவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உணவு தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை அரசு கடுமையாக தடை செய்யும் எனவும் கூறியுள்ளார். சமையல் இட்லிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால், பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: மக்களே உஷார்! FDA-ஆல் தடை செய்யப்பட்ட இந்த உணவுகளை சாப்பிட்டா ஆபத்து உங்களுக்குத்தான்

Image Source: Freepik

Read Next

Poor Bone Health: எலும்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தை கொடுக்கும் பழக்கங்கள்

Disclaimer

குறிச்சொற்கள்