Symptoms Of Lung Cancer In Child: இன்று மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாகவே புற்றுநோயும் அமைகிறது. அதன் படி, இன்றைய காலகட்டத்தில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகி விட்டது. இது பெரும்பாலும் புகைபிடிப்பதன் விளைவுகளால் ஏற்படும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதிர்ச்சி தரும் விதமாக இந்த நுரையீரல் புற்றுநோயால் புகைபிடிக்காதவர்கள் கூட பாதிப்படைகின்றனர். இதில் கூடுதல் பயத்தைத் தரும் விதமாக நுரையீரல் புற்றுநோயின் ஆபத்து குழந்தைகளில் கூட வேகமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது குழந்தைகளில் லிம்போமா மற்றும் லுகேமியாவின் ஆபத்து அதிகமாகவே உள்ளது. புற்றுநோய் செல்கள் உடலில் வேகமாக வளர ஆரம்பிக்கும் போது இந்த நுரையீரல் புற்றுநோய் பிரச்சனை தொடங்குகிறது. அறிக்கையின் படி, நுரையீரல் புற்றுநோயால் அதிகளவிலான மக்கள் மரணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியமாகும். எனவே இதன் அறிகுறிகளை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். இதில் குழந்தைகளில் தோன்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: World Lung Cancer Day: உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.?
குழந்தை நுரையீரல் புற்றுநோய்
பொதுவாக, மற்ற புற்றுநோய் வகைகளுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளில் நுரையீரல் புற்றுநோய் சற்று வேகமாக நடக்கும். தொடக்கத்தில் இந்த நோயின் அறிகுறிகள் இயல்பானவையாகவோ அல்லது இல்லாததாகவோ தெரியும். ஆனால், இந்த நோயானது முற்றிய நிலையை அடைந்த உடன் அதன் அறிகுறிகளும் தீவிரமடையத் தொடங்குகிறது.
குழந்தைகளில் நுரையீரல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள்
இதில் குழந்தைகளில் நுரையீரல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளைக் காணலாம்.
சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுவது
நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதன் காரணமாக, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இது தவிர, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிது நடந்தாலோ அல்லது ஓடினாலோ இந்தப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் அவர்கள் சுவாசிக்கும்போது தொண்டையில் விசில் சத்தம் ஏற்படுவது, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, மூச்சு விடும் போது பதட்டம் மற்றும் நெஞ்சு வலி போன்றவை நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
நீடித்த சோர்வு மற்றும் பலவீனம்
நாள்பட்ட அளவிலான சோர்வு மற்றும் பலவீனம் குழந்தைகளில் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது சோர்வு மற்றும் பலவீனமாக உணர்வதை பொதுவான பிரச்சனையாகக் கருதக்கூடாது. இது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. அதன் படி, சிறிது நடந்தாலே விரைவில் சோர்வடைவது மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை நுரையீரல் புற்றுநோயின் அபாயமான அறிகுறியாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Childhood Cancer Symptoms: ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய குழந்தை புற்றுநோய் அறிகுறிகள்
முகம் மற்றும் தொண்டையில் வீக்கம்
குழந்தைகளில் முகம் மற்றும் தொண்டையில் வீக்கம் ஏற்படுவது நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது. முகம் மற்றும் தொண்டையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அல்லது வீக்கம் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், இந்த நுரையீரல் புற்றுநோய் முன்னேறிய நிலையை அடையும் போது அதன் அறிகுறிகள் மிகவும் தீவிரமடைகிறது. இதை சரியான நேரத்தில் பரிசோதனை செய்வதன் மூலம் நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
நீடித்த இருமல்
தொடர்ந்து அதிக நாள்கள் குறிப்பாக 2 முதல் 3 வாரங்களுக்கு நீடித்த இருமல் ஏற்படுவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு நீண்ட காலமாக இருமல் இருப்பின், ஒரு மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது. நீண்ட நாள்களாக இருமல் இருந்தால், மார்பு வலி மற்றும் சளியில் ரத்தம் கலந்து இருப்பின், அது நிலைமை தீவிரமானதைக் குறிக்கிறது.
பசியின்மை
குழந்தைகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பசியின்மையும் ஒரு அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதில் குழந்தை நீண்ட நேரம் பசி எடுக்கவில்லை அல்லது எதையும் சாப்பிட விரும்பவில்லை எனில், கட்டாயம் மருத்துவரை அணுகுவது நல்லது.
குழந்தைகளுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கும்போது இந்த அறிகுறிகள் அனைத்தும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. இந்த அறிகுறிகள் உங்களுக்குத் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்நோயானது சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் எளிதான சிகிச்சையின் மூலம் அதைத் தவிர்க்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Childhood Cancer Symptoms: குழந்தை பருவ புற்றுநோயின் அறிகுறிகளும் காரணங்களும்! மருத்துவர் தரும் விளக்கம்
Image Source: Freepik