$
Eye Cancer Causes Symptoms: உடலில் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண முடியாது. இதன் காரணமாக, புற்றுநோய்களின் பிரச்சனை மிகத் தீவிரமானதாக மாறலாம். இதனால் பலரும் உயிரிழப்பை சந்திக்கும் நிலை ஏற்படலாம். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இவை உடலில் எந்த உறுப்பையும் பாதிக்கலாம்.
அந்த வகையில் கண் புற்றுநோயும் ஒரு பொதுவான புற்றுநோயாகும். இந்நிலையில் புற்றுநோய் செல்கள் கண்களில் உருவாகத் தொடங்கி, பின் கடுமையான வடிவத்தில் இவை கண்களை சேதப்படுத்தலாம். கண்களில் தோன்றும் இந்த புற்றுநோய் கண் புற்றுநோய் ஆகும். இவை எதனால் ஏற்படுகிறது மற்றும் அதன் அறிகுறிகள் குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cancer Increasing Foods: உஷார்! இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட்டா புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்
கண் புற்றுநோய் ஏற்பட காரணம்
கண் புற்றுநோயில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. இதி கண்ணில் புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியால் கண் புற்றுநோய் ஏற்படும். மேலும் உடலின் மற்றொரு பகுதியில் இருந்து கண்ணுக்கு புற்றுநோய் செல்கள் பரவுவதால் கண் புற்றுநோய் ஏற்படுகிறது. இதில் கண் புற்றுநோய் குறித்து சீதாபூர் கண் மருத்துவமனையின் மூத்த கண் மருத்துவர் டாக்டர் தர்மேந்திர சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மருத்துவர் தர்மேந்திர சிங் அவர்களின் கூற்றுப்படி, “கண் புற்றுநோய் கண் பார்வை மற்றும் அதன் சுற்றுப்புற அமைப்புகளில் தொடங்குகிறது. இதில் கண்ணில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளரத் தொடங்கி கட்டியாக மாறுகிறது.” இதில்இரண்டு வகையான கட்டிகள் உள்ளது. ஒன்று வீரியம் மிக்கது மற்றும் மற்றொன்று தீங்கற்றதாகும். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவலாம்.

கண் புற்றுநோய்க்கான காரணங்கள்
கண் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணிகள் சிலவற்றைக் காணலாம்.
- மரபணு காரணங்களால்
- புற ஊதாக் கதிர்களின் விளைவாக
- வயது அதிகரிப்பு காரணமாக
- உடலின் மற்றொரு பகுதியில் புற்றுநோய் ஏற்படுவதால்
- டெனோபிளாஸ்டோமாவின் காரணங்களால்
- கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால்
- புகையிலை மற்றும் மதுவின் அதிகப்படியான நுகர்வு
இந்த காரணங்களால் கண்களில் புற்றுநோய் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஃபாலோப் பண்ண வேண்டிய சுய பராமரிப்பு முறைகள்
கண் புற்றுநோய் அறிகுறிகள்
கண் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
- கண் பார்வை மங்கலாகுதல்
- வளைந்த கோடுகள் அல்லது புள்ளிகளின் தோற்றம்
- கண் இமைகளில் கட்டி ஏற்படுவது
- கருவிழியில் கரும்புள்ளி தோன்றுதல்
- பகுதி அல்லது மொத்தமான ஒளியிழப்பு
கண் புற்றுநோய் சிகிச்சை
கண் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையானது நோயாளியின் நிலை மற்றும் புற்றுநோயின் கட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.
- இதில் முதலில் மருத்துவர் நோயாளியின் கண்களை பரிசோதிக்க வேண்டும்.
- அதன் பின்னர் இமேஜிங் டெஸ்ட், மருத்துவ பரிசோதனை, பயாப்ஸி போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
- அதன் பிறகே நிலைமைக்கு ஏற்ப மருந்து மற்றும் அறுவை சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. கீமோதெரபி, கிரையோதெரபி, லேசர் சிகிச்சை, மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை கண் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

கண் புற்றுநோய் தடுப்பு முறைகள்
கண் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கையாள வேண்டும். இது தவிர, சூரியனின் புறஊதாக் கதிர்களைத் தவிர்க்க வெயிலில் செல்லும் போது கண்ணாடி அணியலாம். கண்களை அவ்வப்போது பரிசோதிப்பதன் மூலம் கண் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைச் சரியான நேரத்தில் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதன் மூலம் கண் புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Symptoms of Cervical Cancer: கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!
Image Source: Freepik