Risk Factors Of Brain Tumor: மூளை மற்றும் அதன் அருகிலுள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சி, பிரைன் டியூமர் என்று அழைக்கப்படுகிறது. இது மூளையின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். மேலும் இவை வயது வித்தியாசமின்றி வரலாம்.
இவை முதன்மை மற்றும் மெட்டாஸ்டேடிக் பிரைன் டியூமர் என இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மூளையில் தொடங்கி வளரும் கட்டிகள் முதன்மை பிரைன் டியூமர் என்றும், மூளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மூளைக்கு பரவும் கட்டிகள் மெட்டாஸ்டேடிக் பிரைன் டியூமர் என்றும் அழைக்கப்படுகின்றன. அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெறுவது.

மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பல வகையான நோய்கள் மக்களை பயமுறுத்துகின்றன. அதில் ஒன்று பிரைன் டியூமர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில தவறுகள் பிரைன் டியூமரை ஏற்படுத்தலாம். அந்த விஷயங்கள் என்ன என்பதை இங்கே காண்போம்.
மொபைல் போன் அதிகமாகப் பயன்படுத்துதல்
உலக சுகாதார நிறுவனம் (WHO) மொபைல் போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்தினால் அதில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளால் பிரைன் டியூமர் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனை கட்டுப்படுத்த பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹெட்செட்டைப் பயன்படுத்துவதை WHO ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க: Prostate Cancer Signs: ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் இது தான்.!
இரசாயனங்களின் வெளிப்பாடு
பூச்சிக்கொல்லிகள், கரைப்பான்கள் மற்றும் பிற தொழில்துறை இரசாயனங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடு பிரைன் டியூமர் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக இரசாயன தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.
மேலும், அதற்கு அருகில் வசிப்பவர்களுக்கு பிரைன் டியூமர் உருவாகும் அபாயம் அதிகம். எனவே அங்கு வசிப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
மேலும் நாம் பயன்படுத்தும் ஷாம்புகள், சோப்புகள் மற்றும் பவுடர்கள் போன்ற பொருட்கள் பிரைன் டியூமர் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, பயன்படுத்துவதற்கு முன்பு தயாரிப்பு லேபிள்களை முழுமையாகப் படிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஹார்மோன் சமநிலையின்மை
பிரைன் டியூமர் உருவாவதில் ஹார்மோன் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக, டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சையை மேற்கொண்ட ஆண்கள் மற்றும் நீண்ட கால ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மூளைக் கட்டிகள் உருவாகும் அபாயம் அதிகம்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, ஊசி, சப்டெர்மல் உள்வைப்புகள் அல்லது கருப்பையக சாதனங்கள் மூலம் ஹார்மோன் கருத்தடைகளை எடுத்துக் கொள்ளும் பெண்களும் இந்த கட்டிகளுக்கு ஆளாகிறார்கள்.
தலையில் காயம், வலிப்பு
தலையில் காயம் ஏற்பட்டவர்களுக்கு பிரைன் டியூமர் உருவாகும் அபாயம் அதிகம். அதேபோல், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிரைன் டியூமர் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உடல்நிலை வித்தியாசமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: Freepik