Early Signs Of Prostate Cancer: புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை பாதிக்கும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்த புற்றுநோய் இளம் வயது அல்லது வயது மூப்பினருக்கு ஏற்படும்.
இதன் அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் வெளிப்படாது. கேன்சர் கட்டிகள் பெரிதாகி பரவத் தொடங்கும் போதே இதன் அறிகுறிகள் வெளியே தெரிய வருகின்றன. ஆனால் சில அறிகுறிகள் முன்கூட்டியே வெளிபட்டாலும், அதனை நாம் கவனிக்காமல் அப்படி விட்டுவிடுகிறோம்.
முக்கிய கட்டுரைகள்
புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன? புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன? இதற்கான விளக்கங்களை இந்த பதிவில் விரிவாக காண்போம்.
புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன? (what is prostate cancer)
புரோஸ்டேட் என்பது ஆண்களின் சிறுநீர்க்குழாயை சுற்றி இருக்கும் ஒரு சுரப்பி ஆகும். இது டெஸ்டோஸ்ட்ரான் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்து விந்து அணுக்கலை உற்பத்தி செய்கிறது. வீரியம் மிக்க வளர்ச்சி கட்டி இதில் உருவாகும் போது புற்றுநோய் உருவாகிறது. இதனை புரோஸ்டேட் புற்றுநோய் என்று அழைக்கிறோம்.
இதையும் படிங்க: Pancreatic Cancer Signs: கணைய புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்!
புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் (Signs Of Prostate Cancer)
உங்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள் பின்வருமாறு..
* அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதாக இருக்கும். குறிப்பாக இரவில் அதிகமாக சிறுநீர் கழிப்பீர்கள்.
* முழுமையாக சிறுநீர் வெளியேறாலம் இருப்பது.
* சிறுநீர் செல்லும் போது வலி மற்றும் எரிச்சல்
* சிறுநீரில் இரத்தம்
* விறைப்புத்தன்மையை அடைவதில் சிரமம்
* விறைப்புச் செயலிழப்பு
* வலிமிகுந்த விந்து வெளியேற்றம்
* விந்துவில் இரத்தம்
* விந்து வெளியேறும் அளவு குறைதல்
* கீழ் முதுகு, இடுப்பு அல்லது மேல் தொடைகளில் அடிக்கடி வலி
* கீழ் முனைகளில் வீக்கம்
இந்த பதிவில் உள்ள தகவலகள், தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த அறிகுறிகளுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும், இது புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதை மருத்துவர்கள் சோதித்து, இதற்கு ஏற்றவாறு சிகிச்சையளிப்பர். மேலும் இதனை கட்டுப்படுத்த வழி சொல்வர்.
Image Source: Freepik