Prostate Cancer: ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் கேன்சர்.! இது தான் காரணம்..

  • SHARE
  • FOLLOW
Prostate Cancer: ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் கேன்சர்.! இது தான் காரணம்..


Prostate cancer என்றால் என்ன?

Prostate cancer என்பது, புரோஸ்டேட் திசுக்களில் உருவாகும் புற்றுநோய் ஆகும். இது மெதுவாக வளரும். இதன் அறிகுறிகள் மெதுவாக தோன்றலாம். ஆனால் அதற்க்குள் புற்றுநோய் செல்கள் பரவ தொடங்கிவிடும். இது வெளிப்படுத்தும் சின்ன சின்ன அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருக்காதீர்.

உங்கள் உடல் நலம் சீராக இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவர்கள் உங்களை பரிசோதித்து, உங்களுக்கேற்ற மருத்துவத்தை கொடுப்பார்கள். மேலும் Prostate cancer ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறியப்பட்டால் இதனை கட்டுப்படுத்த முடியும். 

இதையும் படிங்க: Prostate Cancer Prevention: புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்தை குறைக்க சிறந்த வழிகள்!

இதெல்லாம் இருந்தால் ஆபத்து!

Prostate cancer உணர்த்தும் சில அறிகுறிகள் இங்கே, 

* சிறுநீருடன் இரத்தம்

* விந்துவில் இரத்தம்

* சிறுநீர் கழிப்பதில் பிரச்னை

* சிறுநீர் கழிக்கும் போது வலி 

* சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

* அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* முதுகு வலி

* இடுப்பு வலி

* பலவீனமான எலும்பு

புரோஸ்டேர் கேன்சருக்கு இது தான் காரணம்! (causes of prostate cancer)

* புரோஸ்டேர் புற்றுநோய் ஏற்பட முதல் காரணம் வயது. 50 வயது கடந்தப்பின் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது. 

* இரண்டாவது காரணம் குடும்ப வரலாறு. உங்கள் குடும்பத்தில் உள்ள ஆண் வாரிசுகள் (தாத்தா, தந்தை, உடன்பிறப்பு, மற்ற குடும்ப உறுப்பினர்கள்) புரோஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் இது வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மார்பக புற்றுநோயை காட்டிலும், புரோஸ்டேட் நோய் சற்று அதிக அப்பத்துடன் இருக்கிறது.

* மூன்றாவது வாழ்க்கை மற்றும் உணவு முறை. இன்றைய காலகட்டத்தில் உள்ள வாழ்க்கை மற்றும் உணவு முறைகள், புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக திகழ்கின்றன. செயலற்ற வாழ்க்கை முறை மற்றும் குப்பை உணவுகளால் இது போன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் இணைக்க வேண்டும். மேலும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

Image Source: Freepik

Read Next

Cancer Prevention: கேன்சர் வருவதை தடுக்க இத மட்டும் பண்ணுங்க..

Disclaimer

குறிச்சொற்கள்