Doctor Verified

Immunity Boosting Tips: கேன்சர் நோயாளிகள் குளிர்காலத்தில் இதெல்லாம் ஃபாலோப் பண்ணா தப்பிக்கலாம்.

  • SHARE
  • FOLLOW
Immunity Boosting Tips: கேன்சர் நோயாளிகள் குளிர்காலத்தில் இதெல்லாம் ஃபாலோப் பண்ணா தப்பிக்கலாம்.

இதனுடன், மருந்துகள் மற்றும் கீமோதெரபி போன்றவற்றால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் உடல் மற்றும் மன ரீதியாக சோர்வடைகின்றனர். இவற்றைத் தவிர்க்க, சரியான உணவு முறைகளுடன் கூடிய வாழ்க்கை முறையைக் கையாள வேண்டும். இதில் புற்றுநோயாளிகள் குளிர்காலத்தில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் குறிப்புகள் குறித்து லக்னோ, கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்சஸ், டாக்டர் சீமா யாதவ், எம்.டி., அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer Test: எலும்பு புற்றுநோயைக் கண்டறிய உதவும் சோதனைகள் என்னென்ன தெரியுமா?

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கேன்சர் நோயாளி பின்பற்ற வேண்டியவை

வால்நட் எடுத்துக் கொள்ளுதல்

புற்றுநோயாளிகள் குளிர்காலத்தில் அக்ரூட் பருப்புகளை எடுத்துக் கொள்வது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. வால்நட்டில் மக்னீசியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி, புரதம் போன்றவை நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் புற்றுநோய் செல்கள் சேராமல் தடுக்க உதவுகிறது. இது தவிர, கேன்சர் நோயாளிகள் சோயாவை உட்கொள்ளலாம். இதில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள் நோயெதிர்ப்புச் சக்திக்கு உதவுகின்றன.

கேன்சருக்கு கேரட்

புற்றுநோய் உள்ளவர்கள் குளிர்காலத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க கேரட்டை உட்கொள்ளலாம். கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதுடன், வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இவை புற்றுநோய் கட்டி செல்களை நீக்க உதவும் ஆரோக்கியமான காய்கறியாகச் செயல்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Tattoos Cause Cancer: டாட்டூ போட்டால் புற்றுநோய் வருமா? மருத்துவர் தரும் விளக்கம்

புற்றுநோயாளிகளுக்கு பீன்ஸ்

பொதுவாக புற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும் நோயெதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்க, ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன் படி நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இனிப்பு, பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். இவை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், பீன்ஸ் எடுத்துக் கொள்வது பருவகால நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

மஞ்சள் கலந்த பால்

மஞ்சளில் பல்வேறு ஊட்டச்சத்துக்களான பொட்டாசியம், வைட்டமின் பி, இரும்புச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதற்கு மஞ்சள் கலந்த பாலை உட்கொள்ளலாம். எனினும், நோயாளிகள் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன்பும், பின்பும் உடனேயே மஞ்சள் பாலை உட்கொள்ளக் கூடாது. எதையும் சாப்பிட்டுக் குறைந்தது 1 மணி நேரம் கழித்து பால் குடிக்க வேண்டும்.

போதுமான தூக்கம்

போதிய தூக்கம் இல்லாதது, ஒருவரின் உடல் நலத்தைப் பாதிப்பதுடன் மனநலத்தையும் பாதிக்கிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த நல்ல தூக்கம் அவசியமாகிறது. கேன்சர் நோயாளிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து விடும்.

இதனால், இவர்கள் குளிர்காலத்தில் காய்ச்சல், சளி, மற்றும் இருமல் போன்ற பிற நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்படலாம். எனவே நன்றாக தூங்குவதற்கு உறங்கும் நேரத்தை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் சாப்பிட்டு 4 முதல் 5 மணி நேரம் கழித்தே தூங்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer Foods: உஷார்! இந்த உணவெல்லாம் காலையில் சாப்பிட்டா வாய் புற்றுநோய் கன்ஃபார்ம்

மன அழுத்தத்தைக் குறைப்பது

புற்றுநோயாளிகளின் உடலில் நோயெதிர்ப்புச் சக்திய அதிகரிக்க, மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். ஏனெனில், மன அழுத்தத்துடன் இருப்பது உடலில் உள்ள இரசாயனங்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால், நோயெதிர்ப்புச் சக்தி மற்றும் செரிமான அமைப்பு போன்றவை சேதமடைகின்றன.

புற்றுநோயாளிகள் மன அழுத்தத்தைக் குறைக்க ஆழ்ந்த சுவாசம், தியானம், யோகா, இசை கேட்டல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடலாம். தேவைப்பட்டால், மருத்துவ ஆலோசனை பெறலாம். இவர்களைச் சுற்றி மன அழுத்தம் இருப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

புற்றுநோயாளிகள் மேலே கூறப்பட்டுள்ள உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையைக் கையாள்வதன் மூலம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். இது தவிர, யோகாசனம், தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Pancreatic Cancer Prevention: சைலன்ட் கில்லரான கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இத செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Prostate Cancer: மலட்டுத்தன்மையை உண்டாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்.. ஆண்களே உஷார்!

Disclaimer

குறிச்சொற்கள்