Prostate Cancer: மலட்டுத்தன்மையை உண்டாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்.. ஆண்களே உஷார்!

  • SHARE
  • FOLLOW
Prostate Cancer: மலட்டுத்தன்மையை உண்டாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்.. ஆண்களே உஷார்!

புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன?

ஆண்களுக்கு கருவுறுதலுக்கு உதவவும் விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது பயன்படுகிறது. புரோஸ்டேட் புற்றுநோயானது புரோஸ்டோட்டில் உருவாவது ஆகும். புற்றுநோய் என்றாலே அதை குணப்படுத்த முடியாது மரணம் தான் முடிவு என பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த காலக்கட்டத்தில் அனைத்துக்கும் தீர்வு உள்ளது. குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் 98% வரை குணப்படுத்த முடியும்.

புரோஸ்டேட் புற்றுநோய் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு, ஹார்மோன் குறைவு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும். பாலியல் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்துவதோடு, சிறிநீர் கசிவையும் ஏற்படுத்தும். இது மனரீதியான பாதிப்பையும் உண்டு செய்யும்.

புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகள்

புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து பார்க்கையில், கீழ் இடுப்புப் பகுதியில் மந்தமான வலி இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். சிறுநீர் கழிக்கும் போது வலி, சிக்கல், எரிதல் போன்ற உணர்வு ஏற்படும். விந்து வெளியேறும் போது வலி மிகுந்ததாக இருக்கும். எலும்பு வலி போன்றவையும் ஏற்படும். ஆண்கள் மலட்டுத்தன்மைக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கும் மிகுந்த தொடர்பு இருக்கிறது.

ஆண் மலட்டுத்தன்மை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து டாக்டர். ஸ்ரேயா குப்தா, ஆலோசகர், பிர்லா கருத்தரிப்பு & IVF, லக்னோ கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த மருத்துவர் கருத்து

பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

புரோஸ்டேட் சுரப்பியின் முக்கிய பங்கு விந்தணு திரவத்தில் திரவத்தை சுரப்பதாகும், இது புரோஸ்டேடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது.

புரோஸ்டேட் சுரப்பியானது விந்தணுவை முதிர்ச்சியடையச் செய்யும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோனையும் சுரக்கிறது.

மலட்டுத்தன்மையின் வரலாற்றைக் கொண்ட ஆண்கள் உயர் தர புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்

Y க்ரோமோசோம் மைக்ரோ டெலிஷன் சிண்ட்ரோம், எண்டோஜென் பிறழ்வு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளிட்டவைகள் உயர் தர புரோஸ்டேட் புற்றுநோய்க்கான காரணங்கள் ஆகும்.

புரோஸ்டேட் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்

ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் ஒரு கருவுறுதல் நிபுணர் அல்லது சிறுநீரக மருத்துவரை அணுகுவது சிறந்த முடிவாகும்.

Pic Courtesy: FreePik

Read Next

Cancer Vaccines: 2024-ல் கேன்சர் தடுப்பூசி வருதா?!

Disclaimer

குறிச்சொற்கள்