Pancreatic cancer: கடந்த 5 முதல் 10 ஆண்களாக கணைய புற்றுநோய் பாதிப்பு என்பது கணிசமாக உயர்வை சந்தித்திருக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் ஆகியவை இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் குறிப்பாக ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அதாவது பெண்களை விட கணைய புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு ஆண்களுக்கு இருமடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்ட முக்கிய காரணமாக புகைப்பிடித்தலும் மது அருந்துவதுமே இருக்கிறது.
அதிகம் படித்தவை: உஷார்! நீங்க செய்யும் இந்த பழக்கங்களால் வாய் புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு
நகர்ப்புறங்களில் அதிக புற்றுநோய் பாதிப்பு
அமிர்தா மருத்துவமனை ஜிஐ அறுவைசிகிச்சை பிரிவுத் தலைவர் மருத்துவர் புனீத் தார் தனியார் செய்தித் தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பொதுவாக கிராமப்புற பகுதிகளுடன் ஒப்பிடும் போது நகர்ப்புறங்களிலேயே கணையப் புற்றுநோய் பாதிப்பு என்பது அதிக அளவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது அதிகரிக்க பிரதான காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வும், செயலற்ற வாழ்க்கை முறைகளுமே என குறிப்பிடப்பட்டிருக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் வாழ்க்கை முறை தொடர்பாக அதிக ஆபத்தை எதிர்கொள்வதாகவும், காற்று மாசு போன்ற சுற்றுச்சுழல் அழுத்தங்களே இந்த சுகாதார நெருக்கடியை மேலும் அதிகரிப்பதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
கணைய புற்றுநோய் அறிகுறிகள்
அதேபோல் பல்வேறு வகையான காரணங்களால் கணையப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகுந்த கடினமான விஷயமாக இருக்கிறது. இதற்கு பிரதான காரணம் எடை இழப்பு, வயிற்று வலி, மஞ்சள் காமாலை மற்றும் புதிதாகத் தொடங்கும் நீரிழிவு நோய் போன்ற பாதிப்பின் அறிகுறிகள் மேம்பட்ட நிலையிலேயே கண்டறிவதாகும்.
கணையப் புற்றுநோய் என்பது சரிசெய்யக் கூடியதாக இருந்தபோதிலும் பெரும்பாலான நேரத்தில் நோய் என்பது முற்றிய நிலைக்கு சென்றடைந்து மிகவும் தாமதமாகவே கண்டறியப்படுகின்றன.
கணையப் புற்றுநோய் வர காரணம்
மற்றொரு மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், கணைய புற்றுநோயை குறைக்க புகைப்பிடித்தலை நிறுத்தல் வேண்டும், பழங்கள், காய்கறிகள் மற்றும் மெலிந்த புரதம் நிறைந்த உணவை உண்ணுதல் முக்கியம். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்த்தல் ஆகியவை இதற்கான முக்கிய நிலை ஆகும். அதேபோல் வழக்கமான உடல் செயல்பாடும், வாரந்தோறும் 150 நிமிட உடற்பயிற்சி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமாகும்.
புற்றுநோய் சிகிச்சை முறை
ஆரம்பகாலத்தில் நோயை கண்டறிய எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் (EUS), CT ஸ்கேன் மற்றும் MRI உள்ளிட்ட கருவிகளின் பயன்பாடு பெரும் உதவியாக இருக்கும். சிறிய கட்டிகளை கண்டறிவதில் எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் (EUS) என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: Preventing Cancer: வாழ்க்கையில் புற்றுநோயே வரக்கூடாதா? இந்த 10 பாயிண்ட் நோய் பண்ணுங்க!
கணையப் புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது நோயறிதலின் கட்டத்தை பொறுத்தது, ஆரம்ப கட்ட நிகழ்வு என்பது அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கலாம். ஆனால் நோய் கண்டறிதல் தாமதமாகும் பட்சத்தில் சிகிச்சை முறையை மிகவும் தீவிரமாக்கக் கூடும். எந்தவொரு நோயைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை என்பது மிக மிக முக்கியமாகும்.
image source: freepik