Cancer Prevention: இந்த 7 பழக்கத்தை ஃபாலோ பண்ணுங்க.. வயிறு புற்றுநோய் வர வாய்ப்பே இல்ல!

வயிற்று புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதற்கு உதவும் வாழ்க்கை முறையில் சில ஆரோக்கியமான பழக்கங்களை சேர்க்க வேண்டியது மிக முக்கியம். அத்தகைய சிறந்த 7 பழக்கவழக்கங்களை பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
Cancer Prevention: இந்த 7 பழக்கத்தை ஃபாலோ பண்ணுங்க.. வயிறு புற்றுநோய் வர வாய்ப்பே இல்ல!


Cancer Prevention: மக்கள் பொதுவாக பாதிக்கப்படும் புற்றுநோய்களில் ஒன்று இரைப்பை புற்றுநோய் எனப்படும் வயிற்றுப் புற்றுநோயாகும். இதுகுறித்து விரிவாக டாக்டர். சி என் பாட்டீல், HOD மற்றும் முன்னணி ஆலோசகர் - மருத்துவ புற்றுநோயியல் மற்றும் ஹீமாடோ-ஆன்காலஜி, ஆஸ்டர் வைட்ஃபீல்ட் மருத்துவமனை, பெங்களூரு கூறிய தகவலை பார்க்கலாம்.

உலகில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் முக்கிய காரணமாக இரைப்பை புற்றுநோய் எனப்படும் வயிற்றுப் புற்றுநோய் இருக்கிறது. மரபணு காரணமாகவும் வயது போன்ற காரணங்களாலும் ஏற்படும் சில ஆபத்துகளை மாற்ற முடியாது. ஆனால் வயிற்று புற்றுநோயின் வளர்ச்சியை குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறையை தேர்வு செய்வது மூலம் மாற்றலாம். ஆரோக்கியமான பழக்கங்களை வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொள்வது என்பது நோய் பாதிப்பை குறைப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அதிகம் படித்தவை: உஷார்! நீங்க செய்யும் இந்த பழக்கங்களால் வாய் புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு

புற்றுநோயை தடுக்க உதவும் 7 சிறந்த பழக்கவழக்கங்கள்

வயிற்று புற்றுநோயை தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெறுவதற்கும் உதவும் சிறந்த 7 வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

stomach-cancer-reason-treatment

சமச்சீரான உணவு முறை

நிறைய புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் இது உடலுக்கு தேவையான கூறுகளான ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகளை வழங்குகிறது. அதேபோல் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளான ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடலாம். இது வயிற்றில் சேதமடைந்த செல்களை குணப்படுத்த உதவுகிறது.

அதேபோல் இந்த சூப்பர் உணவுகள் உடல் வீக்கத்தை குறைக்கவும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தூண்டி உடலில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றவும் இது உதவுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பாதுகாக்கப்பட்ட அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகளில் அதிக அளவு நைட்ரேட்டுகள் உள்ளன. இது குறிப்பிட்ட காலத்திற்கு உடலில் புற்றுநோய் சேர்மங்களாக மாறும். இத்தகைய உணவு வகைகளை குறைத்து புதிய மற்றும் வீட்டில் சமைத்த உணவை தேர்ந்தெடுப்பது வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக குறைக்கும்.

குறைவான அளவு உப்பு

உப்பு அதிகம் சாப்பிடுவதும் பிரச்சனைதான். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள் என வரும்போது இது வயிற்றுப் புறணியில் எரிச்சலை ஏற்படுத்தும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடும். பாதுகாப்பான மசாலாவாக கருதப்படும் பூண்டு, மூலிகைகள் மற்றும் மிளகு ஆகியவற்றை பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கவும். உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைப்பது ஒருவரின் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தை கொண்டுவரும்.

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

புகைப்பிடித்தல் என்பது வயிற்று புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். புகையிலையின் நச்சு கூறுகள் வயிறு உட்பல உடலின் பல்வேறு பாகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும். புகைப்பிடிப்பதை நிறுத்தவும் அந்த நபரின் சொந்த ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புற நண்பர்கள், உறவினர்கள், அவர்களின் குடும்பத்தார் என அனைவரின் நல்வாழ்வையும் பாதுகாக்கும்.

மது அருந்துவதைக் குறைத்தல்

அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் மது அருந்துதல் ஆகியவை புற்றுநோயை உருவாக்கும் சாத்தியத்தை அதிகரிக்கிறது. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் உங்களுக்கும் கேடு என மதுபான பாட்டிலில் எழுதப்பட்டுள்ளது. தவிர்க்க முடியவில்லை என்றால் மதுவை ஆரோக்கியமான முறையில் கையாள கற்றுக் கொள்ளுங்கள். இது உங்களை பொருளாதார ரீதியாகவும், சமூகத்தில் உங்களை மரியாதை உள்ள நபராகவும் உயர்த்த வழிவகுக்கும்.

மன அழுத்தத்தை சமாளித்தல்

மன அழுத்தம், குறிப்பாக நாள்பட்ட மன அழுத்தம், செரிமான செயல்முறையில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தை பலரும் ஒரு பிரச்சனையாகவே கருதுவதில்லை, இதனால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படும். யோகா அல்லது தியானம் போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் முறைகளை வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சுகாதார பரிசோதனைகள் மற்றும் ஸ்கிரீனிங்

வழக்கமான சோதனைகள் வயிற்றுப் புற்றுநோயுடன் தொடர்புடைய ஹெச்.பைலோரியை அடையாளம் காண உதவுகிறது. இதுமட்டுமில்லை, அவ்வப்போது உடலுக்கு மருத்துவ பரிசோதனை முக்கியம், இது பல ஆபத்துகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. அதேபோல் பல பெரிய நோய்களைக் கூட ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்தால் குணமாக்கிவிடலாம். அடிப்படையாக ஒரு நபர் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்வது மிக முக்கியமாகும்.

இதையும் படிங்க: Preventing Cancer: வாழ்க்கையில் புற்றுநோயே வரக்கூடாதா? இந்த 10 பாயிண்ட் நோய் பண்ணுங்க!

வயிற்றுப் புற்றுநோய் என்பது அச்சுறுத்தலாகத் தோன்றலாம், ஆனால் தடுப்பு என்பது உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில்தான் இருக்கிறது. இந்த 7 வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் வாழ்க்கை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். வரும் முன் காப்பதே ஆகச்சிறந்த வாழ்க்கை முறையாகும். ஆரோக்கியமான வாழ்க்கையும், ஆரோக்கியமான உணவு முறையும் மனித வாழ்விற்கு மிக மிக முக்கியமாகும்.

image source: freepik

Read Next

உஷார்! நீங்க செய்யும் இந்த பழக்கங்களால் வாய் புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு

Disclaimer

குறிச்சொற்கள்