
Petticoat Cancer: புடவை கட்டுவது என்பது பாரம்பரிய பழக்கத்தில் ஒன்றாகும். இந்திய பெண்களின் அலகார உடையில் புடவை என்பதை பிரித்து பார்க்கவே முடியாது ஒன்றாகும். தற்போது இந்த புடவை கட்டும் நடைமுறையால் பாதிப்பு ஏற்படும் என புதிய ஆய்வு தகவல் ஒன்று வெளியாகி இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புடவை கட்டுவதால் புற்றுநோய் வருமா?
புடவை கட்டும்போது இறுக்கமாக கட்டப்படும் கயிற்றால் இந்த பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது புடவை கட்டும் போது கீழ்பாவாடையில் இறுக்கமாக இடுப்புக் கயிறு கட்டுவது என்பது, பாரம்பரிய புடவை உடுத்துவதில் உள்ள பொதுவான நடைமுறையாகும். இதுதான் தோல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் விஷயம் என பிஎம்ஜே கேஸ் ரிப்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிகம் படித்தவை: Chamomile for skin: பட்டு போன்ற சருமத்திற்கு கெமோமில் தரும் நன்மைகள்! எப்படி பயன்படுத்துவது?
பெட்டிகோட் கேன்சர் என்றால் என்ன?
"பெட்டிகோட் கேன்சர்" என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படும் இந்த நிலை ஆனது, பல பெண்கள் அதுவும் குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனையாகும். நீண்ட காலமாக இந்த ஆடைகளால் ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தத்தால் எதிர்கொள்ளும் ஆபத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
மார்ஜோலின் எனப்படும் புண்களின் பாதிப்புகளை சந்திக்கும் வயதான பெண்களின் இரண்டு நிகழ்வுகளை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது, இது அரிதான வகை தோல் புற்றுநோயாகும், இது புடவை இடுப்புக் கயிறுகளின் இறுக்கமான பிணைப்பிற்குக் காரணமாகும்.
நாள்பட்ட அழுத்தம் மற்றும் உராய்வு மீண்டும் மீண்டும் தோல் அழற்சியை ஏற்படுத்துகிறது, இது காலப்போக்கில் அல்சரேஷனுக்கு வழிவகுக்கும் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் இது தோல் புற்றுநோயாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புடவை கட்டுவதால் வரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள்
70 வயதான ஒரு பெண் தனது வலது பக்கத்தில் தொடர்ச்சியாக ஒரு புண் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து உள்பாவாடை அணிந்து இடுப்புப்பகுதியில் இருக்கமாக கயிறு கட்டியதால் இது தோல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் காரணம் என அறியாமல் அந்த பெண் தொடர்ந்து சேலை அணிந்து வந்துள்ளார். இந்த நிலையே அந்த பெண்ணுக்கு மார்ஜோலின் அல்சருக்கு வழிவகுத்துள்ளது. தொடர்ந்து இது ஸ்குவாமஸ் செல் கார்சினோமா என கண்டறியப்பட்டது.
இரண்டாவது வழக்கில், 60களின் பிற்பகுதியில் உள்ள ஒரு பெண், லுக்டா என்ற பாரம்பரிய முறையில் புடவை அணிந்து வந்துள்ளார். இது கீழ்பாவாடை இல்லாமல் இடுப்பில் நேரடியாகக் புடவையை கட்டப்படும் முறையாகும், காலப்போக்கில் இந்த பெண்ணுக்கும் அதேபோன்ற புண்ணை ஏற்பட்டு அதன் நிணநீர் முனைகளிலும் பரவி தீவிர நிலையை சந்திக்க வைத்தது.
மார்ஜோலின் புண்கள், ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (அல்சரேட்டிங் தோல் புற்றுநோய்) என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இவை நீண்ட காலமாக இருக்கும் புண்களாகும். குணமடையாத காயங்கள் அல்லது நாள்பட்ட எரிச்சலாக இந்த புண்கள் வரையறுக்கப்படுகின்றன. இந்த புண்கள் புற்றுநோயாக மாறுவதற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை.
தொடர்ச்சியான இடுப்புப் பகுதியில் அழுத்தம் என்பது தோல் மெலிந்து, அரிப்பு மற்றும் இறுதியில் புண்களுக்கு வழிவகுக்கிறது, இது வீரியம் மிக்க குணப்படுத்த முடியாத காயத்தை உருவாக்குகிறது என அறிக்கை விளக்குகிறது.
புடவை புற்றுநோயை தடுக்க என்ன செய்வது?
இந்த அபாயத்தைக் குறைக்க, உத்திரப்பிரதேசத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள், பெண்கள் தோல் மாற்றங்களைக் கண்டால், தளர்வான உள்பாவாடைகளை அணியுமாறு அல்லது இறுக்கமான இடுப்புக் கயிறுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். சருமத்தை காற்றோட்டமாகவும் இலகுவாகவும் வைத்திருப்பதன் மூலம் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: Hypothyroidism Diet: ஹைப்போ தைராய்டிசம் இருக்க.. அப்போ இந்த உணவுகளை நினைத்துக்கூட பார்க்காதீர்.!
தனது பாதிப்பு குறித்து 70 வயதான அந்த பெண் நோயாளி கூறுகையில், நான் பல தசாப்தங்களாக இறுக்கமாக மூடப்பட்ட சேலையை அணிந்திருந்தேன், அது என் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது எனக்கு தெரியாது. நீண்ட நாட்களாக தோலில் ஒரு சிறிய மாற்றம். வலிமிகுந்த ஆறாத புண் இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த புண் தோல் புற்றுநோய்க்கு வழிவகுத்துள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து கூறுகையில், இந்த புண் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கவலையளிக்கிறது. அசாதாரணமான தோல் மாற்றங்களைக் கண்டால் ஆரம்பத்திலேயே மருத்துவர் ஆலோசனையை பெறவும் என குறிப்பிட்டார்.
image source: freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version