Cancer Rate in India: இந்தியாவில் வரும் 2045க்குள் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் என தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. ICMR புற்றுநோய் பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வை BRICS நாடுகளில் நடத்தியுள்ளது. அதாவது இந்த ஆய்வானது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் நடத்தப்பட்டது.
ICMR பிரிக்ஸ் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2022 மற்றும் 2045 ஆண்டுக்கு இடையில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் இந்தியாவில் கடுமையாக அதிகரிக்கும் என கணக்கிட்டிருக்கிறது. ஐசிஎம்ஆர் ஆய்வானது 5 பேர் கொண்ட குழு மூலம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு
அதேபோல் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் 2020 மற்றும் 2025 ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு என்பது 12.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.
எந்தவகை புற்றுநோய் பாதிப்பு, ஏன் புற்றுநோய் அதிகரிக்கிறது?
இந்தியாவில் வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், புகையிலை பொருட்கள் அதிகம் உட்கொள்வதால் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. இப்படி அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த சுகாதார அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பிரிக்ஸ் நாடுகளில் இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் நுரையீரல் புற்றுநோயே முக்கிய காரணமாக கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை பெண்களிடையே மார்பக புற்றுநோய் பாதிப்பு என்பது பொதுவானது என்றாலும் ஆண்களின் ஆரோக்கியத்தில் வாய் புற்றுநோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பை தடுக்க சுகாதார அமைப்புகள் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
image source: freepik