மூன்றில் ஒருவருக்கு.. பரவும் நோய்கள்.. இந்தியாவில் என்ன நடக்கிறது?

  • SHARE
  • FOLLOW
மூன்றில் ஒருவருக்கு.. பரவும் நோய்கள்.. இந்தியாவில் என்ன நடக்கிறது?


ஆந்திராவை சேர்ந்த 49 வயதான தகவல் தொழில்நுட்ப நிபுணர் பிரஃபுல் ரெட்டி என்பவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது பாதிப்பை 2 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து அதன் பரவலை தடுக்க கீமோதெரபி மற்றும் லேசர் உள்ளிட்ட சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இவர் முழுமையாக குணமாவாரா என்று தெரியவில்லை இருப்பினும் மருத்துவர் அவர் விரைவில் குணமடைவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு

வாந்தியெடுத்தல், தலைவலி மற்றும் புண்கள் ஆகியவை அவர் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பக்கவிளைவுகளில் சிலவகைகள் ஆகும்.

புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க மருத்துவர்கள் மருந்துகளை வழங்குகிறார்கள். இந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் நுரையீரலை அகற்றும் லோபெக்டமிக் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நிலையும் வரலாம்.

புற்றுநோயில் பாதிக்கப்படும் குழந்தைகள்

அதுமட்டுமில்லை அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் 12 வயது சிறுமி திப்தி என்பவர் சிறுநீரகத்தில் உருவாகும் அரிய வகை புற்றுநோயான வில்ம்ஸ் எனப்படும் கட்டி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இந்த குழந்தைக்கு தற்போது கதிர்வீச்சு சிகிச்சை நடந்து வருகிறது. இந்த சிகிச்சை தற்போது தோல் பாதிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புற்றுநோய் வைத்திய முறை

இந்திய பன்னாட்டு சுகாதாரக் குழுவான அப்பல்லோ மருத்துவமனை கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெற்காசிய நாட்டை உலகின் புற்றுநோய் தலைநகரமாக குறிப்பிட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் பிற தொற்று நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வருவதை மேற்கோள்காட்டி, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் குறைந்து வருவது குறித்து ஒரு ஆபத்தான நிலையை காட்டுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு?

தற்போதைய நிலைப்படி மூன்று இந்தியர்களில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றில் இருவர் உயர் இரத்த அழுத்தத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேரில் ஒருவர் மனச்சோர்வினால் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மனநலக் கோளாறுகள் போன்ற நாட்பட்ட நிலைமைகள் இப்போது மிகவும் பரவலாக உள்ளதாக கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.4 மில்லியனில் இருந்து, 2025 ஆம் ஆண்டளவில் வருடாந்த புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 1.57 மில்லியனாக உயரும் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு

மார்பகம், கர்ப்பப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோயானது பெண்களைப் பாதிக்கும் பொதுவான வடிவங்களாகும். அதே நேரத்தில் நுரையீரல், வாய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் ஆண்களை அதிகம் பாதிக்கின்றன. புற்றுநோய் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன, அடுத்த இருபது ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் கே.ஸ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார்.

ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை அவசியம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் புதிய புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன, அவற்றில் 4% குழந்தைகள் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இதற்கான மருத்துவ முறை வழிகள் இன்னும் முழுமையாக இல்லை என்பது மேலும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

தவறான உணவு முறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மாசுபாடான காற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நோய் பரவல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை சரிசெய்ய வேண்டும் என்றால் வாழ்க்கை முறையை சரியாக பராமரிக்க வேண்டியது முக்கியம்.

Image Source: FreePik

Read Next

Sleep Disorder: இந்த வைட்டமின் குறைபாடு தூக்கமின்மையை ஏற்படுத்துமாம்!

Disclaimer

குறிச்சொற்கள்