Sat Sep 12, 2026 | 12:57 AM IST

Diabetes Women: சர்க்கரை நோய் பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

Diabetes Women: சர்க்கரை நோய் ஒரு நீண்டகால நோயாகும். இதற்கு பிரதான மருந்தே உணவுதான். இந்த வியாதி இப்போது பலரை பாதித்து வருகிறது. வாழ்நாள் முழுவதும் தொந்தரவு செய்யும் நோய்களில் இது பிரதான ஒன்றாகும். குறிப்பாக, மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இது தவிர, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஆகியவையும் நீரிழிவு நோய்க்கு காரணமாக இருக்கலாம்.

நீரிழிவு நோய் ஒரு நோயாகும், இது பல கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும். நீரிழிவு நோயினால் இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். குறிப்பாக, ஒரு பெண்ணுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதுகுறித்த முழுமையான தகவலை விரிவாக பார்க்கலாம்.

நீரிழிவு நோய் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?

சர்க்கரை நோயால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாய் தொற்று

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உயர் இரத்த சர்க்கரை அளவு பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளுக்கு வழிவகுக்கும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கலாம்.

யுடிஐ

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு யுடிஐ பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். UTI என்பது சிறுநீர் பாதை தொற்று பாதிப்பாகும். இது சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், சிறுநீரில் இரத்தமும் தோன்றும். குறிப்பாக, இரத்த சர்க்கரை எப்போதும் அதிகமாக இருக்கும்.

PCOS

பிசிஓஎஸ் அதாவது பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் என்பது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனையாகும். அது ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக ஏற்படுகிறது. கருமுட்டை சரியாக முட்டைகளை வெளியிட முடியாத போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இது கருவுறுதலை பாதிக்கிறது. ஒரு பெண்ணுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவளுக்கு PCOS வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உடல் பருமன்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எடை வேகமாக அதிகரிக்கும். அவர்கள் உடல் பருமனுடன் போராட வேண்டியிருக்கலாம். உடல் பருமன் பெண்களுக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். இது இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கலாம். இது மட்டுமின்றி நீரிழிவு, உடல் பருமன் போன்றவை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

Image Source: FreePik

Read Next

Boost Your Breast Size: மார்பக அளவை இயற்கையாக அதிகரிக்க முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content