சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் என்பது அனைவரும் எளிதாக கடந்து செல்லக்கூடிய நோயாக மாறி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் சர்க்கரை நோயின் பாதிப்பு குறித்து லான்சட் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை எற்படுத்தும் வகையில் இருக்கிறது.
2022 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகளை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இது உலகளவில் 828 மில்லியன் பாதிப்புகள் என கால் பங்கிற்கும் அதிகமாகும் என NCD ஆபத்து காரணி ஒத்துழைப்பு (NCD-RisC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் அதிகரிக்கும் சர்க்கரை நோய் பாதிப்புகள்
மேலும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், தி லான்செட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 62% நீரிழிவு நோயாளிகள் தங்கள் நிலைக்கு எந்த சிகிச்சையும் பெறவில்லை என வெளிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
NCD-RisC என்பது உலகெங்கிலும் உள்ள 1,500 க்கும் மேற்பட்ட சுகாதார நிபுணர்கள் ஒத்துழைப்போடு எடுக்கப்பட்ட கண்காணிப்பு கருத்து இதுவாகும். இவர்கள் அனைவரும் தொற்றாத நோய்கள் குறித்து கண்காணிக்கின்றனர். அவர்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, இந்தியாவில் சுமார் 212 மில்லியன் மக்களில் சுமார் 23.7% பேர் 2022 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
முக்கிய கட்டுரைகள்
சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறாமல் இருக்கும் மக்கள்
இருப்பினும், இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவர்களில் கிட்டத்தட்ட 133 மில்லியன் நபர்கள் மருந்துகளை உட்கொள்வதோ அல்லது சிகிச்சை பெறாமலோ இருந்துள்ளனர், மேலும் சிகிச்சை அளிக்கப்படாத நீரிழிவு நோயாளிகளுக்கான உலகளாவிய தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல், ஒப்பிடக்கூடிய மக்கள்தொகை கொண்ட சீனாவில் சுமார் 148 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர், அவர்களில் 78 மில்லியன் பேர் சிகிச்சை பெறாமல் இருக்கின்றனர். நீரிழிவு நோயைக் கையாள்வதில் இந்தியா எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் என்பது இந்த அப்பட்டமான வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில், கடந்த மூன்று தசாப்தங்களாக நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டில், 11.9% பெண்களும் 11.3% ஆண்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை அப்படியே அதிகரித்து பெண்கள் 23.7% ஆகவும் ஆண்கள் 21.4% ஆகவும் உயர்ந்துள்ளது.
நீரிழிவு நோயின் உலகளாவிய எழுச்சி என்பது 1990 முதல் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது, இப்போது 800 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்கள் இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, மேலும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் 2022 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 445 மில்லியன் பேர் சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தனர் என்பதுதான், இது 1990-ஐ விட 3.5 மடங்கு அதிகமாகும்.
ஆய்வின் முதன்மை ஆசிரியரான லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மஜித் எசாட்டி வெளியிட்ட ஒரு அறிக்கையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்த பிரச்சினை மிகவும் கடுமையானதாக இருக்கிறது, அங்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீண்டகாலமாக சிகிச்சை பெறாமல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்பதுதான். இதில் இதய நோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் அகால மரணம் கூட அடங்கும்.
நீரிழிவு நோய்க்கு தகுந்த முன்னெச்சரிக்கை தேவை
நீரிழிவு நோய் என்பது உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான ஒரு தீவிர நோயாகும். சமச்சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, நீரிழிவு நோய்க்கான ஆபத்து பன்மடங்கு அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளன மற்றும் இது ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. டைப் 1 நீரிழிவு நோய் மரபணு காரணங்களால் ஏற்படக்கூடியது, டைப் 2 நீரிழிவு நோய் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறையின் காரணமாக ஏற்படுவதாகும்.
தவறான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. இதைத் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கையும் தகுந்த ஆலோசனையும் தேவை என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.
image source: freepik