
$
Cancer Vaccines: சுகர், பிரஷர் போல் புற்றுநோயும் சகஜமாகி வருகிறது. முன்பு யாருக்கேனும் Cancer இருந்தால், அவர்களை காப்பாற்றும் அளவுக்கு மருத்துவ வசதிகள் இல்லை. ஆனால் இன்றைய விஞ்ஞான உலகிலோ, அனைத்தும் சாத்தியமே என்ற நோக்கில், அனைத்து வசதிகளும் வந்துவிட்டன.
இந்நிலையில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை காப்பாற்ற பல மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், புற்றுநோய் செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், புற்றுநோய் வரும் முன் தடுக்கவும் முடியும். புற்றுநோயை தடுக்க தடுப்பூசிகளும் வந்துவிட்டன.

இதையும் படிங்க: Cancer Surgery: புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் பக்க விளைவுகள்!
கேன்சர் தடுப்பூசிகள் என்னென்ன? (What Are Cancer Vaccines)
புற்றுநோய் தருப்பூசி (Cancer Vaccines) போட்டு கொண்டவர்களிடன் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. இது புற்றுநோய் செல்லை உடலில் ஊடுருவி, மற்ற பாகங்களை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் உங்கள் நோய் எதிப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் Cancer Vaccines உதவுகின்றன.
புற்றுநோய் பற்றிய முழு ஆராய்ச்சிக்கு பிறகே Cancer Vaccines கண்டறியப்பட்டுள்ளது. இதனை 5 ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

தடுப்பூசிக்கான சோதனையானது கடந்த ஏப்ரல், ஜூன், ஜூலையில் நடந்தது. இதில், BioNTech’s Pancreatic Cancer Vaccine, Transgene’s Viral Vector-Based Vaccine, OSE’s Advanced NSCLC Vaccine, Norway–based Nykode Therapeutics Vaccine ஆகியவை சோதிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை போட்டவர்களிடௌயே எந்த ஒரு எதிர்வினையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்கு பின், 2024-ல் சில தடுப்பூசிகளும், 2029-ல் சில தடுப்பூசிகளும், நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களுக்கு மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளவும்.
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version