Pancreatic Cancer Prevention: சைலன்ட் கில்லரான கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இத செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Pancreatic Cancer Prevention: சைலன்ட் கில்லரான கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இத செய்யுங்க

கணைய புற்றுநோய்க்கான பொதுவான காரணங்கள்

கணையப் புற்றுநோய்க்கான துல்லியமான தோற்றம் தெரியவில்லை எனினும், சில ஆபத்து காரணிகள் இந்த நிலையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். அதன் படி, நீரிழிவு நோய், அதிக உடல் எடை, நாள்பட்ட கணைய அழற்சி, புகைபிடித்தல், சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது போன்றவை கணைய புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Cancer Symptoms: சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!

கணைய புற்றுநோயைக் குறைக்க உதவும் குறிப்புகள்

கணைய புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க சில வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

சில காரணங்களால் கணையப் புற்றுநோயைத் தடுக்க முடியாதெனினும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குறைக்க முடியும். இதில் கணையப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் சில வழிகளைக் காணலாம்.

உடல் ரீதியான சுறுசுறுப்பு

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை சரியாக பேணிக்காப்பதுடன், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முடியும். மேலும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும். இதில், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் கணைய புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

மது அருந்துவதைத் தவிர்த்தல்

மது அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலம் கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம். புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க, மது அருந்தாமல் இருப்பது மிகவும் நல்லதாகும். மது அதிகமாக அருந்துவது உடல் நலத்திற்கு பல்வேறு வகையான விளைவுகளைத் தரலாம். மது அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலம் கணைய புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer Symptoms: எலும்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்

ஆரோக்கியமான உடல் எடை

அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கணைய புற்றுநோயை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே சரியான மற்றும் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம். சுறுசுறுப்பாக செயல்படுதல் மற்றும் நன்றாக சாப்பிடுவது போன்றவை ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும். இதன் மூலம் கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தவிர்த்தல்

சிவப்பிறைச்சி அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் ஆபத்து காரணியாகும். இவை விரைவாக உடல் எடையை அதிகரிக்கலாம். இதனால், கணைய புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம். எனவே, கணைய புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அல்லது சிவப்பிறைச்சிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

புகைபிடிப்பதைத் தவிர்த்தல்

கணைய புற்றுநோய்க்கான முக்கிய காரணியாக புகைபிடிப்பதும் ஒரு காரணியாகும். அனைத்து கணையப் புற்றுநோய்களில் 20% முதல் 30% வரையிலான புற்றுநோய் ஆனது, புகையிலை புகைப்பதால் ஏற்படுவதாகும். எனவே, புகைபிடிக்காமல் இருப்பதன் மூலம் கணைய புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கலாம்.

மேலும், இரண்டாவது கை புகைபிடிப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. அதாவது புகைபிடிக்காதவர்கள், புகைப் பிடிப்பவர்களின் பக்கத்தில் இருந்து புகையை உட்கொள்வதன் மூலமாகவும் கணைய புற்றுநோய் ஏற்படலாம். எனவே முடிந்தவரை புகைபிடிக்காதவராகவும், இரண்டாவது கை புகைபிடிப்பதைத் தவிர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Lung Cancer Symptoms: தொடர் இருமல் புற்றுநோயை ஏற்படுத்துமா? நிபுணர்கள் கூறும் விளக்கம்

Image Source: Freepik

Read Next

Robotic Surgery: கணைய புற்றுநோயில் ரோபோடிக் அறுவைசிகிச்சையின் பங்கு என்ன? 

Disclaimer