Symptoms Bone Cancer: எலும்பில் ஏற்படும் தொடர்ச்சியான மற்றும் ஆழமான வலி பல விஷயங்களைக் குறிக்கிறது. இது சாதாரண வலியாகவோ அல்லது எலும்பு புற்றுநோய் போன்ற வீரியம் மிக்கதாகவோ இருக்கலாம். புற்றுநோய் வகைகளில் மிக அரிதான ஒன்றாக விளங்குவது எலும்பு புற்றுநோய் ஆகும். இதன் முக்கிய அறிகுறியாக இரவு நேரங்களில் எலும்பு வலி நீண்ட காலமாக நீடித்து காணப்படும். இது போன்ற ஏராளமான அறிகுறிகள் உள்ளன. எலும்பு புற்றுநோய் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை வாஷி, ஃபோர்டிஸ் ஹிரானந்தானி மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சலீல் பட்கர் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
தீங்கற்ற எலும்பு வளர்ச்சிக்கும், வீரியமிக்க எலும்பிற்கும் உள்ள வித்தியாசம்
மருத்துவர் பட்கர் கருத்துப்படி, வீரியம் மிக்க எலும்பு வளர்ச்சிக்கும், தீங்கற்ற எலும்பு வளர்ச்சிக்கும் இடையே வித்தியாசத்தைக் காண்பதற்கு மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது. பொதுவாக தீங்கற்ற எலும்பு வளர்ச்சிகள் புற்றுநோயற்றவையாக இருக்கும். மேலும் இது மற்ற உடல் பாகங்களுக்கு பரவாது. ஆனால், வீரியம் மிக்க வளர்ச்சிகள் புற்றுநோயாகவும், பிற பகுதிகளுக்கு பரவும் ஆற்றலைக் கொண்டதாகவும் இருக்கும். இவ்வாறு பிற பகுதிகளுக்கு பரவுவதை மெட்டாஸ்டாஸிஸ் என அழைப்பர். இத்தகைய வீரியம் மிக்க எலும்பு வளர்ச்சியை முன்கூட்டியே கண்டறிதல் அவசியமானது.

இந்த பதிவும் உதவலாம்: Uterine Cancer: தெரிந்து கொள்ள வேண்டிய ஆரம்ப அறிகுறிகள் என்ன?
எலும்பு புற்றுநோய் கண்டறிவது எப்படி
புற்றுநோயியல் நிபுணர் சலீல் பட்கர் கூற்றுப்படி, சாதாரண எலும்பு வலியை, புற்றுநோய் தொடர்பான வலியிலிருந்து வேறுபடுத்துவது சவாலான ஒன்றாகும். இதற்கு, இவை இரண்டும் ஒத்த பண்புகளைக் கொண்டிருப்பதே காரணம் ஆகும்.
சாதாரண எலும்பு வலி, சிறிய காயங்கள் அல்லது அதிகப்படியான உபயோகத்தால் ஏற்படும். இது ஓய்வு மற்றும் நேரத்தை வைத்து அமையும். எலும்பு புற்றுநோய் ஏற்படும் வலியாக இருப்பின், எலும்பு வலி மோசமானதாகவும், கடுமையானதாகவும் இருக்கும். இரவு நேரத்தில் ஏற்படும் இந்த வலி ஒருவரைத் தூக்கத்திலிருந்து எழுப்புகிறது.
தொடர் எலும்பு வலி இருப்பின், அதற்கான மூல காரணத்தை அறிந்து அதற்கு ஏற்றாற் போல, முழுமையான மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது.
விவரிக்கப்படாத அளவிலான எடை இழப்பு, உடல்நலக்குறைவு, சோர்வு போன்ற பிற அறிகுறிகளும் புற்றுநோய் தொடர்பான எலும்பு வலியைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cervical Cancer Symptoms : கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது என்ன? அதை எப்படி தடுப்பது?
எலும்பு புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்
எலும்பு புற்றுநோயின் பொதுவான அறிகுறியாக எலும்பு வலி ஏற்படும். இது பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும். புற்றுநோய் முன்னேறும் சமயத்தில், அதன் பலவீனமான நிலை எலும்பு முறிவை ஏற்படுத்தும். சில சமயங்களில் எலும்பின் மேல் கட்டியை ஏற்படுத்தலாம்.
இந்த எலும்பு புற்றுநோய்க்கு மருத்துவ வல்லுநர்கள் சிடி ஸ்கேன்கள், எக்ஸ்-ரே அல்லது எலும்பு ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகளைச் செய்வர். புற்றுநோய் உயிரணு திசுக்களை ஆய்வு செய்ய பயாப்ஸி செய்யலாம். இந்த பயாப்ஸி மூலம் புற்றுநோய் உயிரணுக்களின் வகை, இருப்பிடம், ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டறிய முடியும்.
புற்றுநோய் மெட்டாஸ்டாசிஸ்
எலும்பு புற்றுநோய் உடலில் பரவுவதை புற்றுநோய் மெட்டாஸ்டாசிஸ் என்பர். இந்த வகை புற்றுநோய் இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் அமைப்பு மூலம், உடலின் மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகிறது. இது மேம்பட்ட எலும்பு புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. எலும்பு புற்றுநோய் பரவக்கூடிய பொதுவான பகுதிகளில் கல்லீரல், நுரையீரல் மற்றும் பிற எலும்புகளும் அடங்கும். இதன் மூலம் எலும்பு புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், மெட்டாஸ்டாசிஸின் அபாயம் குறைக்கப்பட்டு சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cancer Causing Foods: எந்தெந்த உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்?
Image Source: Freepik