Sign of uterine cancer: கருப்பை புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகளவில் பெண்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். இதன் ஆரம்பகால அறிகுறிகளை கண்டறிவது, வெற்றிகரமான சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. கருப்பை புற்றுநோய் பெரும்பாலும் நுட்பமான அறிகுறிகளை கொண்டுள்ளது. அதன் சில அறிகுறிகளை இங்கே காண்போம்.
அசாதாரண இரத்தப்போக்கு

கருப்பை புற்றுநோயின் மிகவும் பொதுவான மற்றும் அடிக்கடி கவனிக்கப்படாத அறிகுறி, அசாதாரண இரத்தப்போக்கு ஆகும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், மாதவிடாய் நின்ற பிறகும் இரத்தப்போக்கை அனுபவிக்கலாம். மாதவிடாய் முறைகளில் ஏதேனும் திடீர் மாற்றங்கள் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு ஏற்பட்டால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடனடியாக மருர்த்துவரை அணுகுவது நல்லது.
இடுப்பு வலி
தொடர்ச்சியான இடுப்பு வலி இருந்தால், அது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர் தேஜிந்தர் கட்டாரியா கூறுகிறார். பொதுவால இடுப்பு வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் தொடர்சியாக இடுப்பு வலியை அனுபவிப்பது, புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால் மருத்துவரை அணுகி மதிப்பீடு செய்வது அவசியம்.
எடை இழப்பு
உணவு அல்லது உடற்பயிற்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் விவரிக்கப்படாத எடை இழப்பு ஏற்படுகிறது எனறால் அது கருப்பை புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர் கட்டாரியா கூறினார். புற்றுநோய் செல்கள் உடலின் மெட்டபாலிசத்தை மாற்றியமைத்து, பாதிக்கப்பட்ட மக்களில் எதிர்பாராத எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள்

கருப்பை புற்றுநோய் சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது அடிக்கடி சிறுநீர் கழிக்க அல்லது சிறுநீர் கழிக்க வேண்டிய அவசர உணர்வை ஏற்படுத்தும். சில பெண்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்கலாம்.
வலிமிகுந்த உடலுறவு
உடலுறவின் போது வலியை அனுபவிப்பது, டிஸ்பேரூனியா என அழைக்கப்படுகிறது. இது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அவை நெருக்கத்தின் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
விரிந்த வயிறு
சில சந்தர்ப்பங்களில், கருப்பை புற்றுநோயானது, கட்டிகள் அல்லது திரவம் திரட்சியின் காரணமாக வயிறு பெரிதாகத் தோன்றலாம் அல்லது வீங்கியதாக உணரலாம்.
பேப் ஸ்மியர் மற்றும் இடுப்பு பரிசோதனை போன்ற வழக்கமான ஸ்கிரீனிங், கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும். மேலும், வெற்றிகரமான சிகிச்சை மற்றும் மேம்பட்ட விளைவுகளுக்கு ஆரம்பகால நோயறிதல் முக்கியமானது என்பதால், பெண்கள் தங்கள் உடல்கள் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் எந்த மாற்றங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
Image Source: Freepik