Fri Sep 11, 2026 | 11:44 PM IST

HIV and AIDS: அட நீங்களும் இதை நம்புறீங்களா? HIV குறித்த கட்டுக்கதையும் உண்மையும்!

எய்ட்ஸ் நோயாளியை தொட்டாலே நோய் பரவுமா? இது போன்ற கட்டுக்கதைகளை நீங்க நம்புபவரா? எய்ட்ஸ் நோய் குறித்து நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே.

Myths and Realities about hiv and aids: நாம் அனைவரும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றி நன்கு அறிந்திருக்கிறோம். எய்ட்ஸ் ஒரு தீவிரமான நோய் மற்றும் குணப்படுத்த முடியாதது என்பதை நாம் அறிவோம். இதற்கான பல சிகிச்சைகள் உருவாக்கப்பட்டாலும், நோயாளி ஆரோக்கியமான, இயல்பான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பதற்கு இன்னும் உத்தரவாதமும் இல்லை. எய்ட்ஸ் நோயால் இதுவரை லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. இந்நிலையில், இந்த நோய் குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். எனவே, ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

இருப்பினும், எய்ட்ஸ் பற்றி மக்கள் மனதில் சில தவறான விஷயங்கள் உள்ளன. அதை நம் உண்மை என்று கருதுகிறோம். எய்ட்ஸ் தொடர்பான தவறான தகவல்கள் மக்களுக்கு தவறான பாதையை காண்பிக்கும். குறிப்பாக, எய்ட்ஸ் நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எச்.ஐ.வி பற்றிய சில கட்டுக்கதைகளையும் அது தொடர்பான உண்மைகளையும் இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: World AIDS Day: HIV தொற்று இருப்பதற்கான அறிகுறி எத்தனை நாட்களுக்குப் பிறகு தோன்றும்? 

கட்டுக்கதை 1: எச்.ஐ.வி சாதாரண தொடர்பு மூலம் பரவுகிறது.

உண்மை: கட்டிப்பிடிப்பதாலோ, கைகுலுக்கினாலோ, பாத்திரங்களைப் பகிர்வதாலோ அல்லது ஒரே கழிவறையைப் பயன்படுத்துவதாலோ எச்ஐவி பரவாது. இதற்கு முக்கியக் காரணம் பாதுகாப்பற்ற உடலுறவு, போதைப்பொருள் பயன்பாட்டுக்கான ஊசிகளைப் பகிர்வதாள் மட்டுமே பரவும்.

கட்டுக்கதை 2: எச்ஐவி கொசு கடிப்பதால் பரவுகிறது.

உண்மை: இது வெறும் வதந்தி. கொசு கடித்தால் எச்.ஐ.வி பரவாது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் இரத்தத்தில் அந்த அளவுக்கு இல்லை. இருப்பினும், இரத்த தொடர்பு ஏற்பட்டால் மற்றொரு நபரை பாதிக்கலாம்.

கட்டுக்கதை 3: முத்தத்தால் கொடுப்பதால் எச்.ஐ.வி பரவும்.

உண்மை: இது முற்றிலும் தவறான கருத்து. முத்தம் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கு போதுமான அளவு உமிழ்நீரில் இல்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட நபருக்கு திறந்த காயம் அல்லது ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால், மற்றொரு நபருக்கு தொற்று ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: World AIDS Day 2024: உலக எய்ட்ஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

கட்டுக்கதை 4: குறிப்பிட்ட வகை மக்கள் மட்டுமே HIV-யாழ் பாதிக்கப்படுகிறார்கள்.

உண்மை: எச்.ஐ.வி.க்கு வயது, பாலினம் அல்லது இனம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படலாம். பரவும் அபாயத்தைக் குறைக்க ஆணுறைகளைப் பயன்படுத்துவதும், தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதும் முக்கியம்.

கட்டுக்கதை 5: எச்ஐவி என்பது ஒரு உயிர்கொல்லி நோய்.

உண்மை: எச்.ஐ.வி ஒரு வைரஸ் மட்டுமே. எய்ட்ஸ் HIV-யின் நாள்பட்ட நிலை. ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART) எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் வாழவும் ஆரோக்கியமாகவும் வாழ உதவுகிறது.

கட்டுக்கதை 6: ஒருவருக்கு எச்.ஐ.வி இருக்கிறதா இல்லையா என்பதை அவரது தோற்றத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

உண்மை: ஒருவரின் தோற்றத்தை வைத்து எச்.ஐ.வி.யை கண்டறிய முடியாது. எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். எச்.ஐ.வி பரிசோதனை மூலம் மட்டுமே ஒருவருக்கு தொற்று ஏற்பட முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: World Aids Day: ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு HIV பரவுவதைத் தடுப்பது எப்படி.?

எச்ஐவி அறிகுறிகள்

World Aids DAY 2023: क्या आप भी HIV और एड्स से जुड़े इन Myths पर करते हैं  यकीन ? यहां जानें सच | myth and facts about hiv and aids | HerZindagi

ஒருவருக்கு எச்.ஐ.வி இருக்கும் போது சில அறிகுறிகள் தோன்றும். இருப்பினும், எந்த அறிகுறிகளும் இல்லாமல் கூட ஒருவருக்கு எச்.ஐ.வி ஏற்படலாம்.

  • சோர்வு மற்றும் பலவீனம்
  • உடல் எடை இழப்பு
  • காய்ச்சல்
  • குளிர் உணர்வு
  • இரவு வியர்வை
  • வீங்கிய நிணநீர் முனைகள்
  • தசை வலி
  • தலைவலி
  • தோல் வெடிப்பு
  • சொறி
  • வாய் புண்கள்

எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதாக உணர்ந்தாலோ அல்லது பாதுகாப்பற்ற இரத்தம் செலுத்தப்பட்டாலோ அல்லது பாதுகாப்பற்ற ஊசி செலுத்தப்பட்டாலோ உடனடியாக எச்ஐவி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கூறினார். 18 முதல் 40 நாட்களுக்குள் உங்கள் அறிக்கை எதிர்மறையானதா அல்லது நேர்மறையானதா என்பதைச் சொல்லக்கூடிய சில சோதனைகள் உள்ளன.

Pic Courtesy: Freepik

Read Next

நன்றாக தூங்கி ரொம்ப நாளாச்சா? அப்போ இந்த பிரச்சனைகள் வருவது உறுதி!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content