Lack of Deep Sleep: இரவில் ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கம் பெறும் பழக்கத்தை விட சிறந்தது எதுவுமில்லை. மனித வாழ்வில் தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. தூக்கம் சரியாக இருந்தாலே வாழ்நாளில் பல பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால், மகிழ்ச்சியான மற்றும் நோயற்ற வாழ்க்கையை வாழலாம். ஆனால் இன்றைய காலத்தில் மக்களின் தூக்கம் குறைந்து வருகிறது.
அப்படியே தூங்கினாலும் பலர் சரியாக ஆழ்ந்து தூங்குவதில்லை. நன்றாக தூங்காமல் சிந்தனையோடு அரை தூக்கமாக தூங்கி எழுந்திருப்பதற்கும், ஆழ்ந்து நிம்மதியாக தூங்கி எழுந்திருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்.
அதிகம் படித்தவை: சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: உறங்கும் போது இரத்த சர்க்கரை அளவு குறைந்தால் என்ன நடக்கும்?
சரியாக தூங்காமல் இருக்க காரணம்
சரியாக தூங்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. முதல் மற்றும் மிகப்பெரிய காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு. ஸ்மார்ட்போன்கள் வந்த காலத்திலிருந்தே, மக்கள் பல மணி நேரம் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகப்படியான திரைகளைப் பயன்படுத்துவது தூக்கத்தைப் பாதிக்கிறது. இரண்டாவது பெரிய காரணம் மன அழுத்தம் அதிகரிப்பது.
இப்போதெல்லாம் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த முயற்சிக்கும் போது சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மன அழுத்தம் காரணமாக, தூக்கம் பாதிக்கப்பட்டு, நீங்கள் நோய்க்கு ஆளாக நேரிடும். தூக்கமின்மையால், மன அழுத்தம் அதிகமாக மாறும். தூக்கமின்மை உடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்
அடிக்கடி நோய்வாய்ப்படலாம்
போதுமான தூக்கம் இல்லையென்றால், மீண்டும் மீண்டும் நோய்க்கு ஆளாக நேரிடும். குறைவான தூக்கம் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதன் காரணமாக நீங்கள் விரைவில் நோய்வாய்ப்படலாம். தூக்கமின்மை காரணமாகஉயர் இரத்த அழுத்த பிரச்சனைக் கூட நிகழலாம். தூக்கம் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது,
இதய பாதிப்பு
நீங்கள் குறைவாக தூங்கினால், உங்கள் இதயம் மோசமாக பாதிக்கப்படும். 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதும், 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதும் இதய ஆரோக்கியத்திற்கு மோசமானதாக கருதப்படுகிறது. தேவையானதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவது கரோனரி இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இதய நோய் அபாயம் அதிகம்.
நினைவக (மெமரி) பிரச்சனை வரலாம்
நீங்கள் போதுமான தூக்கம் வரவில்லை என்றால், உங்கள் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் மோசமாக பாதிக்கப்படும். போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு நினைவாற்றல் குறையத் தொடங்குகிறது. மூளை ரீசார்ஜ் செய்ய தூக்கம் தேவை. ஆனால் தேவையானதை விட குறைவான தூக்கம் வந்தால், மூளையால் விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல், அன்றாட விஷயங்களைக் கூட மறக்கத் தொடங்கும்.
எடை அதிகரிக்கத் தொடங்கும்
தூக்கமின்மையால், எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் அல்லது மாதமும் உங்கள் எடை அதிகரித்தால், தூக்கமின்மை இதற்குக் காரணமா என்று சிந்தியுங்கள். நல்ல தூக்கத்தைப் பெறுவதன் மூலம் வளர்சிதை மாற்றம் சரியாக வேலை செய்கிறது. உங்கள் மெட்டபாலிசம் நன்றாக இருந்தால், உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம்.
சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம்
தூக்கமின்மையால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. தூக்கமின்மை உடல் பருமனை அதிகரிக்கிறது. பருமனானவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. குறைவான தூக்கம் காரணமாக, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சமநிலையில் இல்லாமல் நீரிழிவு நோயை உண்டாக்குகிறது, எனவே ஒருவர் கண்டிப்பாக போதுமான அளவு தூங்க வேண்டும் என்பது அவசியம்.
இதையும் படிங்க: Myopia causes: நீண்ட நேர ஸ்க்ரீனின் நீல ஒளியால் மயோபியா ஏற்படுமா? இதை எப்படி தவிர்ப்பது?
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு போதுமான தூக்கம் என்பது மிக மிக முக்கியம். எனவே இனி நிம்மதியாகவும் ஆழ்ந்து தூங்க தேவையானவையை செய்ய முயலுங்கள்.
image source: freepik